டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா வழங்கும் ‘இந்து தமிழ் திசை - மருத்துவ நட்சத்திரம் 2023 ’ விருதுகள் வழங்கும் விழா
நாளை மறுநாள் (ஆக. 25) மாலை சென்னையில் நடைபெறுகிறது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று விருதுகளை வழங்குகிறார்
சென்னை.
டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா வழங்கும் ‘இந்து தமிழ் திசை - மருத்துவ நட்சத்திரம் 2023’ விருதுகள் வழங்கும் விழா நாளை மறுநாள் (ஆக. 25 - வெள்ளிக்கிழமை) மாலை சென்னையில் நடைபெறுகிறது. இந்நிகழ்வை இந்திய மருத்துவ சங்கம் - தமிழ்நாடு, ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், யுனைடெட் எஜீகேஷனல் அண்ட் சோஷியல் வெல்ஃபர் டிரஸ்ட் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. ரஷ்யன் கலாச்சார மையம் ஒருங்கிணைப்பு பார்ட்னராக இணைந்துள்ளது.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் மருத்துவப் பணியை சேவை மனப்பான்மையோடும் அர்ப்பணிப்போடும் ஆற்றிவரும் மருத்துவர்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் ‘மருத்துவ நட்சத்திரம்’ எனும் சிறப்பு விருதுகள் கடந்த இரண்டாண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான இவ்விருதுகள் வழங்கும் விழா சென்னை, கோவை, மதுரை என மூன்று மண்டலங்களில் நடைபெறவுள்ளது.
சென்னையில் நாளை மறுநாள் (ஆக. 25, வெள்ளி) மாலை 5.30 மணிக்கு ஆழ்வார்பேட்டை கஸ்தூரிரங்கன் சாலையிலுள்ள ரஷ்யன் கலாச்சார மையத்தில் ‘மருத்துவ நட்சத்திரம்’ விருதுகள் வழங்கப்படவுள்ளன. இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று விருதுகளை வழங்கவுள்ளார். இவ்விழாவில், ரெக்கிட் (SOA) நிறுவன வெளிவிவகாரங்கள் மற்றும் கூட்டாண்மைக்கான இயக்குநர் ரவி பட்னாகர், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், தமிழ்நாடு ஐஎம்ஏ தலைவர் டாக்டர் டி.செந்தமிழ் பாரி, ஐஎம்ஏ மதிப்புறு மாநில செயலாளர் டாக்டர் என்.ஆர்.டி.ஆர்.தியாகராஜன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
இவ்விரு விழாக்களிலும் அழைப்பிதழ் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா வழங்கும் ‘இந்து தமிழ் திசை - மருத்துவ நட்சத்திரம் 2023 ’ விருதுகள் வழங்கும் விழா
வரும் ஆக. 26 கோவையில் நடைபெறுகிறது. அமைச்சர் மா.மதிவேந்தன் பங்கேற்று விருதுகளை வழங்குகிறார்
சென்னை.,
டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா வழங்கும் ‘இந்து தமிழ் திசை - மருத்துவ நட்சத்திரம் 2023’ விருதுகள் வழங்கும் விழா வரும் சனிக்கிழமையன்று (ஆக. 26) மாலை கோவையில் நடைபெறுகிறது. இந்நிகழ்வை இந்திய மருத்துவ சங்கம் - தமிழ்நாடு, ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், யுனைடெட் எஜீகேஷனல் அண்ட் சோஷியல் வெல்ஃபர் டிரஸ்ட் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் மருத்துவப் பணியை சேவை மனப்பான்மையோடும் அர்ப்பணிப்போடும் ஆற்றிவரும் மருத்துவர்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் ‘மருத்துவ நட்சத்திரம்’ எனும் சிறப்பு விருதுகள் கடந்த இரண்டாண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான இவ்விருதுகள் வழங்கும் விழா சென்னை, கோவை, மதுரை என மூன்று மண்டலங்களில் நடைபெறவுள்ளது.
கோவையில் வரும் சனிக்கிழமையன்று (ஆக. 26) மாலை 5.30 மணிக்கு சிரியன் சர்ச் சாலையிலுள்ள இந்திய மருத்துவ சங்க அரங்கில் ‘மருத்துவ நட்சத்திரம்’ விருதுகள் வழங்கப்படவுள்ளன. இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக தமிழக வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் பங்கேற்று விருதுகளை வழங்கவுள்ளார். இவ்விழாவில், தமிழ்நாடு ஐஎம்ஏ முன்னாள் தலைவர் டாக்டர் ஆர்.பழனிசாமி, ஐஎம்ஏ மதிப்புறு மாநில செயலாளர் டாக்டர் என்.ஆர்.டி.ஆர்.தியாகராஜன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
இவ்விரு விழாக்களிலும் அழைப்பிதழ் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
முக்கிய செய்திகள்
வர்த்தக உலகம்
1 month ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
4 months ago
வர்த்தக உலகம்
4 months ago
வர்த்தக உலகம்
4 months ago
வர்த்தக உலகம்
4 months ago
வர்த்தக உலகம்
4 months ago
வர்த்தக உலகம்
5 months ago
வர்த்தக உலகம்
6 months ago
வர்த்தக உலகம்
6 months ago