திருமணத்திற்கு திட்டமிடும்போது பர்ஸனல் வாங்குவது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் திருமண செலவுகளுக்காக பர்ஸனல் லோன் வாங்குவதற்கு முன்பாக நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டிய ஐந்து விஷயங்கள் இதோ.
திருமணத்திற்கு திட்டமிடுவதே ஒரு பரவசமூட்டும் தருணம்தான், அதில்தான் எத்தனை எத்தனை அதிசய கொண்டாட்டங்களின் தொலைநோக்குகள் நிரம்பியுள்ளன, இருப்பினும், திருமணம் குறித்து நீங்கள் திட்டமிட்டிருக்கும் இந்த கனவுகளை நிஜமாக்குவதற்கு அடிக்கடி பெருமளவில் பணத்தை முதலீடு செய்ய வேண்டியதிருக்கும். அந்த இனிய நாளுக்கு செய்ய வேண்டிய பல்வேறு செலவுகளுக்காக பெரும்பாலான தம்பதிகள் பர்ஸனல் லோன்களை பயன்படுத்திக் கொள்கின்றனர். அவ்வாறு அவர்கள் பர்ஸனல் லோன் வாங்கி தாங்கள் விரும்பும் இடத்தில் திருமணம் செய்து கொள்வதற்கான வாடகை, கேட்டரிங், டெகோரேஷன்கள் மற்றும் அது தொடர்பான பலவகையான செலவுகளுக்காக அந்த பர்ஸனல் லோனை அவர்கள் உபயோகித்துக் கொள்கின்றனர். பர்ஸனல் லோன் உங்களுக்கு தேவைப்படும் பணத்தை பெற்றுக் கொள்ள உதவும் அதே வேளையில், லோன் கேட்டு விண்ணப்பிக்கும்போது தெளிவான அறிவுடன் லோன் அப்ளிகேஷன் பிராஸஸை நீங்கள் பூர்த்தி செய்வதும் மிக முக்கியமாகும். இதுவே நீங்கள் வாங்க விரும்பும் லோனை ஏற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பை கூட்டச் செய்வதோடு, குறைக்கப்பட்ட வட்டி விகிதத்தில் நீங்கள் பர்ஸனல் லோனை பெற்றுக் கொள்வதற்கும் உதவி செய்யும்.
திருமணத்திற்காக பர்ஸனல் லோன் வாங்குவதற்கு முன் நீங்கள் அவசியம் யோசித்துப் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய காரணிகள் இதோ உங்கள் கவனத்திற்கு:
● எல்லா செலவினங்களையும் மதிப்பீடு செய்து கொள்ளுங்கள்
திருமணம் என்றாலே அதனுடன் தொடர்புள்ள ஏராளமான செலவுகள் இருக்கும், அதில் திருமண மண்டபத்திற்கான வாடகை, உணவு மற்றும் இதர கூடுதல் செலவுகளும் உள்ளடங்கும். எனவே இந்த செலவுகள் அத்தனையையும் உள்ளடக்கி நீங்கள் ஓர் விஸ்திரணமான செலவு திட்டத்தை உருவாக்கிக் கொள்வது மிகவும் அத்தியாவசியமானதாகும். திருமணத்திற்கு ஒட்டுமொத்தமாக எவ்வளவு செலவாகும் என்பதை கணக்கிட கொஞ்சம் நேரம் ஒதுக்கி, பர்ஸனல் லோன் வாங்கி அதை எந்த வகையான செலவுகளுக்காக செலுத்த விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள். நீங்கள் திருமணத்திற்கு ஆகும் செலவுகளை முழுமையாக அறிந்திருக்கிறீர்கள் என்றால் உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்ய போதுமான தொகையை கேட்டு நீங்கள் லோனுக்கு விண்ணப்பிக்கலாம்.
● விவரங்களை தொடர்ந்து வைத்துக் கொள்ளுங்கள்
CIBIL என்றும் அழைக்கப்படும் கிரடிட் ஸ்கோர், உங்கள் கிரடிட் ரீபேமெண்ட் ஹிஸ்டரியின் அடிப்படையில் நீங்கள் கடன் வாங்கும் தன்மையை பிரதிபலிக்கிறது. கடன் வழங்கும் நிறுவனங்கள், லோன் அப்ளிகேஷன்களுக்கு ஒப்புதல் அளிக்கும்போது முக்கியமாக அந்த கிரடிட் ஹிஸ்டரியையே முற்றிலுமாக நம்புகின்றன. ஆகவே உங்கள் கிரடிட் ரிப்போர்ட்டை பரிசீலனை செய்து, முன் அது நல்ல கிரடிட் ஹிஸ்டரியை காட்டுவதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். முறையாக உரிய தேதிகளில் பேமெண்ட் செலுத்துங்கள், ஏதாவது பில்கள் செலுத்தப்படாமல் இருந்தால் அவற்றை உடனடியாக செலுத்தி முடித்து, ரிப்போர்டில் ஏதாவது பிழைகள் இருந்தால் அதை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள். இந்த CIBIL ஸ்கோர்கள் 300 முதல் 900 வரை விரிந்திருக்கும், நீங்கள் குறைந்தபட்சம் 685 ஸ்கோர் செய்திருந்தால் அது உகந்த ஸ்கோராக இருக்கும். உங்களின் கிரடிட் ஸ்கோர் உயரிய அளவில் இருக்குமென்றால் நல்ல சாதகமான நிபந்தனைகளோடு மலிவான வட்டி விகிதத்தில் நீங்கள் லோன் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை அது அதிகரிக்கச் செய்யும்.
● உங்கள் தேவைகளின் அடிப்படையில் உங்களுக்கு ஏற்ற சரியான லோன் தொகையை தேர்வு செய்து கொள்ளுங்கள்
திருமணத்தை மிக மிக ஆடம்பரமாக நடத்தும் பொருட்டு நிஜமாக தேவைப்படும் பணத்தைக் காட்டிலும் அதிகமான பணத்தை கடன் வாங்க உங்களை தூண்டக் கூடும்.ஆனால் உங்கள் தேவைகள் குறித்து நீங்கள் யதார்த்தமாக இருப்பது முக்கியமானதாகும். ஆகவே உங்கள் திருமணம் குறித்த தேவைகளை திட்டமிட சற்று நேரம் ஒதுக்குங்கள், எந்த செலவுக்கு முன்னுரிமை தர வேண்டுமோ அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். உங்கள் ஆசைகளைக் காட்டிலும் உங்கள் அத்தியாவசியங்களின் அடிப்படையில் லோனுக்கு அப்ளை செய்வது கூடுதல் கடன் சுமையில் நீங்கள் வீழ்ந்து விடாமல் தடுக்கும். எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், பர்ஸனல் லோன்களை கண்டிப்பாக திருப்பி செலுத்தியாக வேண்டும், எனவே அறிவுபூர்வமான கடன் வாங்குங்கள்.
● வட்டி விகிதங்களை ஒப்பீடு செய்து பாருங்கள்
வட்டி விகிதம் பர்ஸனல் லோனின் மொத்த செலவில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். கடன் வழங்கும் நிதி நிறுவனத்தை தேர்வு செய்து கொள்வதற்கு முன் சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அவர்கள் வழங்கவிருக்கும் வட்டி விகிதாச்சாரங்களை ஒப்பீடு செய்து பார்த்து கொள்வது நல்ல கருத்தாகும். ஏராளமான நிதி நிறுவனங்கள் வழங்கும் ஆன்லைன் சாதனங்கள் இந்த வட்டி விகிதங்களை நீங்கள் ஒப்பீடு செய்து பார்ப்பதை எளிதாக்குகின்றன. வட்டி விகிதத்தில் ஏற்படக் கூடிய ஒரு சிறிதளவு வித்தியாசம் கூட, லோனை திரும்ப செலுத்தும் காலத்தில் உங்களுக்கு கணிசமான மிச்சத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். போட்டி ரீதியில் நல்ல வட்டி விகிதத்தை அளிக்கும் நிதி நிறுவனத்தை தேர்வு செய்து கொள்வது மூலமாக உங்கள் ஒட்டுமொத்த கடன் செலவுகளை நீங்கள் குறைத்துக் கொள்ள முடியும்.
● லோன் தொகையை திரும்ப செலுத்தும் உங்கள் திறனை பரிசீலித்துப் பாருங்கள்:
கடன் வாங்கியிருக்கும் தொகையை சௌகரியமாக உங்களால் திரும்ப செலுத்த முடியுமா என்பதை பார்ப்பதற்காக ஏதாவது லோன் வாங்குவதற்கு முன்பாக உங்கள் பொருளாதார நிலைமையை சீர்தூக்கி அலசிப் பார்ப்பது மிகவும் அவசியமாகும். உங்களின் தற்போதைய வருமானம், செலவுகள் மற்றும் செலுத்த வேண்டிய ஏதாவது கூடுதல் கடன்கள் இருக்கின்றதா என்று சற்று யோசித்துப் பாருங்கள். ஆகவே லோனை திரும்ப செலுத்துவதற்கான திட்டத்தை போட்டு ஒவ்வொரு மாதமும் லோனை திரும்ப செலுத்துவதற்கான தொகையை நிர்ணயித்துக் கொள்வது நன்றாக இருக்கும். லோன் தவணைத் தொகைகள் உங்கள் பொருளாதாரத்தின்மீது சுமையாக அமைந்து விடாமலும் உங்கள் பட்ஜெட்டிற்கும் குறைவாக இல்லாதபடியும் பார்த்துக் கொள்ளுங்கள்.
திருமணம் தொடர்பான செலவுகள், மளமளவென்று கூடிக் கொண்டே போகும் மற்றும் எதிர்பாராத செலவுகள் எப்போது வேண்டுமானாலும் எழலாம். இந்நிலையில் பஜாஜ் ஃபைனான்ஸ் பர்ஸனல் லோன் உங்களுக்கு மிகவும் உதவிகரமானதாக இருக்கும். ரூ.40 லட்சத்திற்கு லோன் வாங்குங்கள், அந்த லோன் தொகையானது ஒப்புதலுக்குப் பிறகு 24 மணி நேரத்தில்* உங்கள் பேங்க் அக்கவுன்டில் டெப்பாஸிட் செய்யப்பட்டு விடும். நீங்கள் ஃபெஸிலிடியையும் கூட பயன்படுத்திக் கொள்ளலாம், அது உங்கள் தேவைகளின்படி பகுதி பகுதியாக பணத்தை வித்ட்ரா செய்து கொள்ளும் வசதியை உங்களுக்கு அளிக்கிறது. இந்த லோன்கள் ;செலவு குறைவானவை, காரணம் நீங்கள் எவ்வளவு பணம் வித்ட்ரா செய்கிறீர்களோ அந்த தொகைக்கு மட்டுமே வட்டியை செலுத்துகிறீர்களே தவிர மொத்த பிரின்ஸிபல் தொகைக்கும் அல்ல. கூடுதலாக, வட்டியை மட்டுமே EMIs ஆக செலுத்தக் கூடிய ஆப்ஷனும் உங்களுக்கு கிடைப்பதால் லோன் கால இறுதியில் பிரின்ஸிபல் தொகையை திரும்ப செலுத்துவதற்கு இது வழி செய்து விடுகிறது.
இந்த லோனின் ஆவலைத் தூண்டும் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்களின் நன்மைகள் உங்களுக்கு மாற்றாக இருக்கும்போது, நிச்சயம் வேறெங்கும் லோன் கேட்டு நீங்கள் செல்ல நேரிடாது.
முக்கிய செய்திகள்
வர்த்தக உலகம்
28 days ago
வர்த்தக உலகம்
1 month ago
வர்த்தக உலகம்
1 month ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
4 months ago
வர்த்தக உலகம்
5 months ago
வர்த்தக உலகம்
5 months ago