கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் திங்கட்கிழமை அன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த சம்பவத்தை அடுத்து, கந்துவட்டி குறித்து நெட்டிசன்கள் தங்களின் கருத்துகளை இணையத்தில் பகிர்ந்துவருகின்றனர்.
இதுகுறித்த கருத்துகளின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
Divya Bharathi
கந்து வட்டியோடு, மகளிர் சுய உதவிக் குழு கடன்கள், மைக்ரோ ஃபைனான்ஸ் என்கிற பெயரில் குக்கிராமங்கள் வரை கிளைவிட்டுள்ள பல்வேறு நிறுவனங்கள் பற்றியும் விவாதித்து அவைகளை கடுமையாக எதிர்க்க வேண்டிய தேவையுள்ளது. இவைகளில் எல்லாம் சிக்குண்டு தினம் தினம் பலியாகிக் கொண்டிருப்பது பெரும்பாலும் பெண்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Prashanth Rangaswamy @itisprashanth
கந்து வட்டி தயாரிப்பாளர்களை வதைப்பது பற்றி திரைத்துறை பேச சரியான தருணம் இது. இன்னைக்கு பேசலைனா இனி எப்பவும் பேச முடியாது!
Jeeva Sagapthan
அதீத வட்டி வசூல் செய்வதை தடுக்கும் விதமாக 2003-ல் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி ஆண்டிற்கு 18 விழுக்காட்டிற்கு அதிகமாக வட்டி வசூல் செய்தால் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் 30,000 ரூபாய் அபாரதம். இந்த சட்டம் குறித்து அனைவரும் விழிப்புணர்வு கொள்ளுங்கள். மற்றவர்களுக்கும் பரப்புங்கள்.
Prakash Ramasamy
இந்த சமூக அவலத்திற்கு எப்படியான முற்றுப்புள்ளி வைக்கப்போகிறோம் என்பதில்தான் அடுத்த சாவையே தடுக்கப் போகிறோம் நாம்.
Ezhumalai Venkatesan
கந்துவட்டி கொடுமை- நாம் நிலைக் கண்ணாடியை பார்த்து பேச வேண்டிய விஷயம். சமுதாயத்தில் நம் பங்கு என்பது என்ன? நம்மை சுற்றியுள்ள நலிந்தவர்களில் நாலு பேரையாவது கை தூக்கி விடுவதுதானே...
கந்துவட்டி கொடுமையை நிறுத்துவதில் அரசு மற்றும் மக்கள் என இரு தரப்புக்குமே சமமான கடமை உள்ளது.
அனிதா @anithatalks
வந்தாரை வாழ வைக்கும் தமிழர்கள் இன்று குடும்பத்தோட தீக்குளித்து சாகும் அளவுக்கு கந்துவட்டி சமூகத்தில் புரையோடிக்கிடக்கிறது.
நந்தன் ஸ்ரீதரன்
நான் கந்து வட்டியின் கொடுமைகளை நேரடியாகவே வாழ்வில் கண்டு உணர்ந்தவன். க.சீ. அவனது வாழ்வனுபவத்தில் எழுதி இருப்பான். வட்டி வசூலிக்கச் சென்ற இடத்தில் ஒரு வயதான பெண்மணி இருப்பாள். பணம் இல்லப்பா.. இதோ இந்த பெண்ணை வேண்டுமானால் நீ அனுபவித்துக் கொள் என்று தன் மருமகளை அவன் பக்கம் அனுப்புவாள். க.சீ. அருவெறுத்து வாழ்வு வெறுத்து அந்த தொழிலில் இருந்து வெளியேறுவான். அப்படித்தான் இருக்கிறது கந்து வட்டி கொடுமை.
கந்து வட்டிக்காரர்களின் வசவுகளை காதாரக் கேட்டவன் நான்.. எவ்வளவு தூரம் நம்மை அவர்களால் அசிங்கப்படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் அவர்கள் அசிங்கப்படுத்துவார்கள். இத்தனை கேவலத்துக்கு சாவே மேல் என்று நமக்குத் தோன்ற வைத்துவிடுவார்கள். அப்படி செத்துப் போனாலும் கந்துவட்டிக்காரர்களுக்கு லாபம்தான். தங்கள் மீது அப்போதுதான் மற்றவர்களுக்கு பயம் வரும் என்று நினைப்பார்கள்.
Bala G
கந்துவட்டி கும்பலிடம் தமிழர்களை அடகு வைத்தவர்களின் ஆட்சியில் தமிழர்களுக்கு அவமானமும் தீக்குளிப்பும் மட்டுமே மிஞ்சுகிறது..
Shiva Kumar
கைமாத்தாக கொடுக்கப்பட்ட பணம் எப்போது வட்டி விகிதம் பார்த்து கொடுக்கப்பட்டதோ அன்றே தொலைந்தது நமக்குள் இருந்த மனிதநேயம்.
வாசுகி பாஸ்கர்
கந்துவட்டி வாங்குவதற்கான காரணங்களாக பொருளாதார நெருக்கடி, வங்கிகள் இல்லாதோருக்கு user friendly ஆக இல்லாது இருத்தல், பண நெருக்கடி, தேவை என்று எவ்வளவோ காரணங்கள் இருக்கின்றன. மரணமே சிறந்தது என்று ஒருவன் முடிவெடுப்பானானால் அதற்கு பின்னான உளவியல் சித்ரவதைகளை நாம் யோசிக்க வேண்டும்.
தோழர் சுள்ளார் @iamsullar
வட்டிக்கு வாங்காம பெரும்பாலும் யாரும் தொழில் செய்யறதில்லை. அதை சீக்கிரம் கட்டினா வட்டி முடியும். இல்லைனா வாங்கினவன் முடிவான். #கந்துவட்டி
Ra Sindhan (சிந்தன்) @sindhan
பதிவு செய்யப்படாத, கொடூர வட்டி வாங்குகிற நிறுவனங்களை ஒழித்துக்கட்ட வேண்டிய காவல்துறை, கூட்டாளியாக செயல்பட்டிருப்பது அவமானம். #EndKandhuVatti
சிதறல்கள் @mujib989898
வாழ்வதற்கு வாங்கிய பணம் வாழ்க்கையை முடித்தது. #கந்து_வட்டி
KR Athiyaman
கந்து வட்டியை ஒழிக்க வேண்டுமானால் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள் பெருக வேண்டும். சிறு வங்கிகள் திறக்க, சுதந்திரமாக செயல்பட தாரளமாக அனுமதி அளிக்கப்பட வேண்டும். அரசுகளின் வெட்டி செலவுகள் குறைக்கப்பட்டு, அதன் மூலம் பட்ஜெட் பற்றாக்குறை, பணவீக்கம், வட்டி விகிதங்களை குறைக்க வகை செய்ய வேண்டும்.
பா. வெங்கடேசன்
தினக்கூலி வேலை செய்பவர்களுக்கு வங்கிக் கடன் கிடைப்பதில்லை. ஒரு பர்ஸனல் லோன் யாருக்குக் கிடைக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். அரசு ஊழியர்கள், மாதந்திரச் சம்பளம் வாங்கும் தனியார் ஊழியர்கள், ஐடி ரிட்டர்ன் ஃபைல் செய்யும் சிறு முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் இவர்களுக்கு மட்டுமே எந்தவொரு வங்கியும் கடன் தர முன் வருகிறது.
உதாரணமாக ஒரு கொத்தனார் வேலை செய்யும் நபருக்குத் தனி நபர்க் கடன் என்னும் பர்ஸனல் லோன் கிடைக்க வாய்ப்பிருக்கிறதா? அறவே கிடையாது. அவன் தன் எதிர்பாராத பணத்தேவைகளுக்கு ஓடிப்போய் நிற்கும் இடம்தான் வட்டிக்கு விடும் தனிநபர்கள்.
எதிராளியின் சூழலைப் பொறுத்து கந்து வட்டி, மீட்டர் வட்டி, வட்டிக்கு வட்டி என்று அசலை அடைக்க முடியாத அளவிற்குப் பிழிந்து வட்டி வசூல் செய்கிறார்கள். அவர்களும் தன் உழைப்பில் ஈட்டும் அத்தனை ஊதியத்தையும் கொட்டி அசராமல் வட்டித்தொகையைக் கட்டுகிறார்கள்.
கந்து வட்டியையே கட்டி முடிக்கும் இந்த ஜனங்களுக்கு அசலும் வட்டியும் சேர்ந்து கட்டும் ஒரு வங்கிக் கடன் கிடைத்தால் கட்டாமலா போவார்கள்? ஆனால், நம் அனைவருக்கும் ஒரு பொதுப்புத்தி இருக்கிறது. தினக்கூலிகள் சரியாகக் கடனைக் கட்டமாட்டார்கள் என்பது! கோட்சூட் மல்லையாக்களை நம்பும் காலத்தில் அல்லவா வாழ்கிறோம்!
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
23 hours ago
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
29 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago