புதுடெல்லி: இணையவழியில் உலகத் தமிழ் விழா நாளை காலை நடைபெறுகிறது. 19 நாடுகளிலிருந்து கலந்துகொள்ளும் நிகழ்ச்சியை உலகத் திருக்குறள் இணையக் கல்விக் கழகம் நடைத்துகிறது.
இந்நிகழ்ச்சியை ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் தமிழியல் இருக்கைக்குழுவின் துணை அமைப்பாளரான மரு.சு.திருஞானசம்பந்தம் துவக்கி வைக்கிறார். பலவேறு தமிழறிஞர்கள் இந்நிகழ்ச்சியில் ஆய்வுரை வழங்க உள்ளனர். இதில், தமிழ்நாடு அரசின் விருதுபெற்ற முதல் அயலகப் படைப்பாளியான பாவலர் முரசு நெடுமாறன், பெரியாரியல் பன்னாட்டு ஆய்வு மைய நிறுவனரும் அமெரிக்காவின் சமூக மேம்பாட்டுப் பணியாளருமான மரு.சோம.இளங்கோவன், வட அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவையின் தலைவரான பாலா.சாமிநாதன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
மேலும், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் நா.ஆண்டியப்பன், கனடாவின் வாட்டர்லூ பல்கலைகழகத்தின் பேராசிரியர் செ.இரா.செல்வகுமார், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக சிறப்புநிலை தமிழாய்வு மையத் தலைவர் பேராசிரியர் இரா.அறவேந்தன் மற்றும் மணவை முஸ்தபா தமிழ்க் கல்வி-கலைச்சொல்லாக்க அறக்கட்டளையின் நிறுவனரான மரு.செம்மல் முஸ்தபா உள்ளிட்ட பலரும் ஆய்வுரையாற்றுகின்றனர்.
இது குறித்து, 'இந்து தமிழ் திசை' இணையத்திடம் உலகத் திருக்குறள் இணையக்கல்விக் கழகத்தின் முக்கிய நிர்வாகியான இயக்குநர் மறைமலை இலக்குவனார் கூறும்போது, ''ஒரு காலத்தில் ஸ்பானிஸ் உலகமொழியாக இருந்தது எனப் பலருக்கும் தெரியாது. பிரஞ்சும் உலக மொழியானது அனைவரும் அறிந்ததே. ஆனால், பிரஞ்சும் உலக மொழி நிலையில் அழிந்தது. தற்போது, ஆங்கிலம் மொழி மட்டுமே உலக மொழி நிலையை தக்க வைத்துக் கொண்டுள்ளது. தமிழ் மொழியும் உலக மொழி எனும் நிலையை ஈழத் தமிழர்களால் எட்டிப் பிடித்துக் கொண்டிருக்கிறது.
» சி.வி.சண்முகம் போலீஸ் பாதுகாப்பு விவகாரம்: தமிழக அரசின் முடிவு ரத்து; ஐகோர்ட் உத்தரவு
» சென்னையில் பூங்காக்களை பராமரிக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மாநகராட்சி ஆணையர்
ஏனெனில், தமிழ் இந்தியாவில் இல்லையே தவிர வெளிநாடுகளின் பல விமானநிலையங்களில் அறிவிப்புகளில் இடம் பெற்றுள்ளது. அமெரிக்காவின் மினாம்பளிஸ் மாநிலம், ஜெர்மனியின் பிராங்பர்ட், மற்றும் நார்வே, ஸ்வீடன், லண்டன், ஜப்பான், சீனா போன்ற நகரங்களிலும் தமிழ் அறிவிப்புகள் உள்ளன. இதுபோல், இலங்கை தமிழர்களின் முயற்சியினால் தமிழ் உலக மொழியின் நிலையை நோக்கிப் பயணிக்கிறது. நாம், இந்த நிலையை மேம்படுத்திக் கொள்ளவும், தக்க வைக்கவும் செய்யவேண்டியது என்ன? இதற்கான தகுதியைப் பூர்த்தி செய்வது எப்படி? என்றும் அறிவியல்பூர்வமாக சிந்திக்க வேண்டியது அவசியம். இதன் நோக்கமாகவே நாளை உலகத் தமிழ் விழா, இணையவழியில் நடைபெற உள்ளது.'' எனத் தெரிவித்தார்.
இந்த உலகத் தமிழ் விழாவை, உலகத் திருக்குறள் இணையக்கல்விக் கழகம் உலகெங்கும் உள்ள தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்து நாளை இந்தியநேரப்படி காலை 6:30 முதல் 9:30 வரை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதில் கலந்துகொள்வோர் தமிழை உலகளாவிய வளர்ச்சிக்கும் விரிவுக்கும் முன்னெடுத்துச் செல்ல ஆக்கவுரைகளை மூன்று நிமிடங்களுக்கு மிகாமல் வழங்க உள்ளனர். இதற்காக, எழுத்துரையைப் பதிவுசெய்து புலனத்தின் வழியாக அனுப்பவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியின் குவியம் எண்: 4775896897 மற்றும் கடவுச் சொல்: 123456 என அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு ஏற்பாடுகளையும் உலகத் திருக்குறள் இணையக் கல்விக் கழகம் செய்துள்ளது.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
28 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
4 months ago