நெட்டிசன் நோட்ஸ்: நீட் எதிர்ப்பு போராட்டம்- ஒரிஜினல் தர்ம யுத்தம்!

By க.சே.ரமணி பிரபா தேவி

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரியும் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்த நெட்டிசன்களின் கருத்து இன்றைய நெட்டிசன் நோட்ஸில்..!

Sundar Rajan

ஒரு திறமைசாலியிடம் தந்திரத்தைக் காட்டி நீ திறமைசாலி இல்லை, புத்திசாலி இல்லை என்று பொய்யாக நிரூபித்து, அவளையே “நாம் சரியில்லையோ” என்று நினைக்க வைப்பது எவ்வளவு பெரிய கொடுமை. அனிதாவின் மனம் நடுங்கி இருக்கும்தானே...

அனிதாவுக்கு போராட்டங்கள் மூலம் எமது அஞ்சலிகள்!

Anbe Selva

நீட்டை ஏற்க மறுத்து மாணவர் சேர்க்கையை நிறுத்தியது புகழ்பெற்ற வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை!

மிகவும் பின்தங்கிய பகுதிகளில் தங்கி, ஏழைகளுக்கு சேவை செய்யும் உணர்வும் பண்பும் கொண்ட மருத்துவர்களை உருவாக்குவதற்காகவே மருத்துவக் கல்லூரி நடத்தி வருகிறோம். நீட் மூலம் அத்தகைய மாணவர்களைத் தேர்ந்தெடுக்க முடியாது என்று கூறி தனது தியாகத்தின் மூலம் வலிமையான எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறது சி.எம்.சி.!

ஒட்டுமொத்த தமிழகத்தின் வாழ்த்துகளை தெரிவிப்போம் அவர்களுக்கு...

Sivakkolunthu Karur

நான் "நீட் "டுக்கு எதிரானவன் அல்ல..

டெல்லி கான்வென்ட் மாணவனுக்கும் குப்பம் ஆதி திராவிட பள்ளி மாணவனுக்கும் ஒரே கல்வி முறையை போதித்துவிட்டு நீட்டை அமல்படுத்தவும். அப்போது போராட்டத்தை வாபஸ் வாங்கிக் கொள்கிறோம்.

மெத்த வீட்டான்‏ @HAJAMYDEENNKS

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜெயலலிதா நினைவிடத்தில் மாணவர்கள் போராட்டம்.

அங்கு நடந்த ஒரே உருப்படியான நிகழ்வு இதுதான்!

S.Raja‏ @SRajaJourno_PT

நீட்-க்கு விலக்கு கெடைக்காதுன்னு சொல்லியிருந்தால்கூட இந்த புள்ள செத்துருக்காது. கெடச்சுடும் கெடச்சுடும்னு நம்ப வச்சு கழுத்தறுத்தீங்களே, அதன் பலனை அனுபவிக்க வேணாம்? #நீட் எதிர்ப்பு போராட்டம்

Meena Somu

ஒரு போராளி விதைத்து விட்டு போயிருக்கிறாள். போராட்டத்தை முன்னெடுப்போமா அல்லது அனிதாக்களின் கனவில் கொள்ளி வைக்க அனுமதிக்கப் போகிறோமா?

நாம் என்ன பங்களிக்கப் போகிறோம் என்ற கேள்வி என்னை அழுந்தி திணற வைக்கிறது. ஒருங்கிணைந்தால் முடியும். நம் உரிமையை காக்க ஒருங்கிணைவோமா?

KR Athiyaman

நீட் அநீதியானது, மாநிலங்களின் உரிமைகளை நசுக்குகிறது. ஆனால் இதை மாநில உரிமைகள் பிரச்சினையாக பார்க்காமல், பார்ப்பன சதி என்று பார்ப்பது பகுத்தறிவல்ல. நான்கு நாட்களாக முகநூலில் பார்ப்பன வெறுப்பரசியல், பதிலுக்கு அதே அளவில் எதிர் வெறுப்பரசியல் என்று சகிக்க முடியவில்லை.

Thiru Somu Thirunavukarasu

நீட் போராட்டம் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானதாம்! அப்ப காவிரியில தண்ணீர் திறந்து விடாதது என்னவாம்?

Sundara Pandiyan

தீவிரமடையும் நீட் போராட்டம்.!

தமிழக மக்கள் அனிதா மரணத்தை மறந்து சகஜ வாழ்க்கைக்கு வந்துவிட்டதாக நம்பவைக்கப்பட்டனர். ஆனால் நாளுக்கு நாள் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. போராட்டத்தை ஆரம்பித்த யாரும் நிறுத்தவில்லை. ஏழை தமிழக மாணவர்களின் வாழ்வை இனியாவது பாதுகாப்போமா?

வினோத் களிகை

பிக் பாஸ், சரஹா தாண்டி தமிழ் மக்களின் மனதில் நீட் வந்துவிட்டது.

Rafeek Raja K

ஜெ. சமாதியில் மாணவர்கள் நீட் எதிர்ப்பு போராட்டம்! "ஒரிஜினல் தர்ம யுத்தம்!"

Bilal Aliyar

அனிதாவின் தற்கொலை என்பது தமிழக வருங்கால தலைமுறையினரின் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையின் அவல சாட்சி. இதைக் கண்டு உணர்ச்சிவசப்படாதவர்கள் சராசரி மனித மனம் இல்லாதவர்கள்.

இங்கு நீட்டை விலக்க அரசியல் அழுத்தம், சட்டப் போராட்டங்கள் என்ற இரண்டும் தொய்வில்லால் ஒரே நேர்கோட்டில் விரைவாக பயணிக்க வேண்டும்.

மாஸ்டர் பீஸ்‏ @Kannan_Twitz

நீட்டை எதிர்த்து ஜெயலலிதா நினைவிடத்தில் போராடிய மாணவர்கள் கைது.

அரசியல்வாதிகள் வந்தால் பாதுகாப்பு, மாணவர்கள் வந்தால் கைதா?

ஹாஜி முஹம்மது

என்னிடம் "நீட் போராட்டம் மெரினா புரட்சி போல் வெடிக்காது" என்றான் ஒருவன். போகிற போக்கைப் பார்த்தால் சகோதரி அனிதாவின் உயிர்த் தியாகத்தால் மெரினா புரட்சியைத் தாண்டி நீட் எதிர்ப்பு புரட்சி உருவாகும் போல.!

Sai Thamizha

நீட் போராட்டம் நீர்த்துப் போகாது. நீறு பூத்த நெருப்பாகி, எரி மலையாய் வெடிக்கத் தயாராகிவிட்டது!

Aazhi Senthil Nathan

தமிழகம் முழுக்க நூற்றுக்கணக்கான இடங்களில் இன்று மாணவர் போராட்டம். அனிதாவின் தியாகத் தீ பற்றிப் படர்ந்து கொண்டிருக்கிறது.

அனிதாவின் படத்தை ஏந்தி ஆயிரக்கணக்கான மாணவர்கள் களத்தில் இருக்கின்றனர். குறைத்து மதிப்பிடுவோர் அப்படியே மதிப்பிடட்டும். ஆனால் நீட் எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தின் அரசியலை மறுநிர்ணயம் செய்யும் என்பது உறுதி.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நாம் கண்டது கொண்டாட்டப் போராட்டத்தை. அது திருவிழாவாக இருந்தது. இப்போது நாம் காண்பது கண்ணீர்ப் போராட்டத்தை. இது கலகமாக இருக்கிறது.

காவிகள் எங்கே சற்று பலம் பெற்று விடுவார்களோ என்றுகூட அடிக்கடி அச்சம் ஏற்படுவதுண்டு. அந்த அபாயத்தை தடுத்து நிறுத்திவிட்டாள் அந்த சிறு பெண். இந்த நோயுற்ற சமூகத்துக்கு உரிய நேரத்தில் சிகிச்சையை செய்து முடித்திருக்கிறாள் டாக்டர் அனிதா. குணமடைய வேண்டியது நம் கடமை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

29 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்