குடியரசுத் தலைவர் தேர்தலும்... மோடியின் வியூகமும்..!

By எம்.சண்முகம்

ஆட்சிப் பொறுப்பேற்று வெற்றிகர மாக மூன்றாண்டுகளை முடித்து நான்காம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு. அரசியல்ரீதியாக இதுவரை சந்தித்த சவால்களை எல்லாம் இந்த அரசு வெற்றிகண்டு அடுத்தகட்டத்திற்கு நுழையத் தொடங்கியுள்ளது.

மோடி தலைமையிலான அரசு அடுத்து சந்திக்கவுள்ள பெரும் சவால் வரும் ஜூலையில் நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தல். இந்த தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடப் போகும் தலைவர் யார் என்பது இன்னும் முடிவாக வில்லை.

சிவசேனா தரப்பில் முன் மொழியப்பட்ட ஆர்எஸ்எஸ் தலை வர் மோகன் பாகவத் பெயரை பாஜக சார்பில் அமித் ஷா நிராகரித்து விட்டார். யார் வேட்பாளர் என்பதை விட, மோடி யாரை வேட்பாளராக நிறுத்துகிறாரோ அவரை எந்தச் சிக்கலுமின்றி வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதில்தான் பாஜக கூட்டணி மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.

இந்த நோக்கத்திற்கு குறுக்கே யார் நின்றாலும் அவர்களை முறியடிப்பதில் மிகவும் லாவகமாக காய் நகர்த்தப்படுகிறது. குடியரசுத் தலைவர் பதவிக்கு பாஜக-வின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி விருப்பம் தெரிவிக்கிறார் என்று தகவல் வெளியான சில நாட்களில் பாபர் மசூதி வழக்கு பற்றிய பேச்சு அடிபட்டது. அதன் தொடர்ச்சியாக அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது நீதிமன்ற உத்தரவுதான் என்றாலும், அரசியல் ரீதியான விமர்சகர்கள் இந்த சம்பவங்களைப் பொருத்திப் பார்க்க தவறவில்லை. தமிழகத்தில் சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு, ஓபிஎஸ் அணிக்கு மத்திய அரசு ஆதரவு, ஓபிஎஸ்-க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு, சசிகலாவுக்கு சிறை, டிடிவி தினகரன் கைது, விஜயபாஸ் கர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர் களின் வீடுகளில் ரெய்டு உள்ளிட்ட சம்பவங்கள் மேலோட்டமாக பார்க் கும்போது சட்டப்படியான நடவடிக் கைகளாக தோற்றம் அளித்தாலும், அவற்றில் அதிகார நெருக்கடிகள் இருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.

17 கட்சிகள் அணி

இறுதியாக எடப்பாடி பழனிசாமி அண்மையில் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்துப் பேசினார். கடந்தமுறை சென்றபோது அவரை பிரதமர் சந்திக்க மறுத்ததற்கும் தற்போது சந்திக்க அனுமதி அளித்ததற்கும் இடையில் சில அரசியல் நகர்வுகள் இருப்பதாகவே கருதப்படுகிறது. இத்தகைய தொடர் சம்பவங்கள் அனைத்துமே குடியரசுத் தலைவர் தேர்தலை மனதில்கொண்டே நடப்பதாக கூறப்படுகிறது. குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்துவதற்கு சோனியா காந்தி தலைமையிலான 17 கட்சி கூட்டணி தலைவர்கள் சந்தித்து பேசியுள்ளனர். இந்த அணியின் வியூகத்தை முறியடிக்க நடுநிலை வகிக்கும் கட்சிகளை வழிக்கு கொண்டு வருவது பாஜக-வின் அவசியத் தேவையாக உள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தலின் வெற்றியை எம்பி-க்களின் எண் ணிக்கை மற்றும் எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கையே முடிவு செய் கிறது. மக்களவையில் பாஜக கூட்டணிக்கு 336 எம்பி-க்கள் உள்ளனர். காங்கிரஸ் கூட்டணிக்கு 49 எம்பி-க்கள் மட்டுமே உள்ளனர். பாஜக-வுக்கு எதிராக செயல்படும் எம்பி-க்கள் 85 பேரும், அதிமுக, பிஜூ ஜனதா தளம், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி போன்ற நடுநிலை வகிக்கும் எம்பி-க்கள் 71 பேரும் உள்ளனர். இவர்களை வழிக்கு கொண்டு வர தேவையான அனைத்து உத்தி களையும் மத்தியிலுள்ள மோடி அரசு கையாண்டு வருகிறது. மாநிலங்களவையில் பாஜக கூட் டணிக்கு 70 எம்பி-க்களும், காங் கிரஸ் கூட்டணிக்கு 65 எம்பி-க்களும் உள்ளனர். பாஜக கூட்டணிக்கு எதிராக 67 எம்பி-க்களும், நடு நிலையில் 29 எம்பி-க்களும் உள்ளனர். இதில் அதிமுக-வும் அடங்கும்.

4,120 எம்எல்ஏ-க்கள்

எம்எல்ஏ-க்களைப் பொறுத்த மட்டில், டெல்லி, புதுச்சேரி உள்ளிட்டவற்றையும் சேர்த்து 31 மாநிலங்களில் 4,120 எம்எல்ஏ-க் கள் உள்ளனர். இதில் சமீபத்தில் உத்தரபிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் கிடைத்த வெற்றி பாஜக கூட்டணிக்கு கூடுதல் பலத்தைக் கொடுத்துள்ளது. இக்கூட்டணிக்கு 1,804 எம்எல்ஏ-க்கள் ஆதரவு உள்ளது. காங்கிரஸ் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்த்து 1,874 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். இந்த வாக்குகள் அனைத்தும் சேரும்போது, பாஜக கூட்டணிக்கு 20,390 வாக்குகள் பற்றாக்குறை என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், நடுநிலை வகிக்கும் கட்சிகளான அதிமுக, பிஜூ ஜனதா தளம், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆகிய மூன்று கட்சிகளையும் சேர்த்தால் ஒரு லட்சத்து 19 ஆயிரம் வாக்குகள் கிடைக்கும். அதிமுக-வின் உள்விவகாரங்களில் பாஜக அரசு மூக்கை நுழைப்பதற்கு இந்த வாக்குகள் மிக முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி, 12 எம்எல்ஏ-க்களைக் கொண்ட ஓபிஎஸ் அணியும், 122 எம்எல்ஏ-க்களைக் கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் பிரதமர் மோடியின் கண்ணசைவிற்கு வளைந்து கொடுக்க தயாராகிவிட்டனர். இது, மோடி தலைமையின் அரசியல் வெற்றியாகவே கருதப்படுகிறது. இந்த ஆதரவின் மூலம் நெருங்கிவரும் குடியரசுத் தலைவர் தேர்தலை எளிதாக பாஜக கூட்டணி சமாளித்துவிடும் என்றே அரசியல் பார்வையாளர்கள் கணிக்கின்றனர்.

பழங்குடியின தலைவர் திரவுபதி முர்மு

குடியரசுத் தலைவர் பதவிக்கு பாஜக சார்பில் பரிசீலிக்கப்படும் பெயர் பட்டியலில் திரவுபதி முர்மு முதலிடத்தில் உள்ளார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக உள்ள திரவுபதி முர்மு கடந்த 20 ஆண்டுகளாக அரசியலில் அப்பழுக்கற்றவர் என்று பெயர் பெற்றவர். ஒடிசா மாநிலம் மாயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த முர்மு, கடந்த 2002-2004 காலகட்டத்தில் நவீன்பட்நாயக் தலைமையிலான பாஜக கூட்டணி அரசில் அமைச்சராக இருந்தவர். பழங்குடியின மக்களுக்கு பாடுபட்டதற்காக சிறந்த எம்எல்ஏ விருது பெற்றவர். பழங்குடியின பெண் தலைவர் என்பதால் இவருக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவும் கிடைக்கும் என்று பாஜக கருதுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்