சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகை

By கி.பார்த்திபன்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, பாட நூல், மடிக்கணினி உள்பட பல்வேறு உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித் திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கிறார் நாமக்கல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அலுவலர் அ.கருப்பையா. முதலில் சிறுபான்மையினருக்கு அளிக்கப்படும் கல்வி உதவித் தொகை குறித்து பார்ப்போம்.

#எந்தெந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் சிறுபான்மையினர்?

நாடு முழுவதும் வசிக்கும் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், ஜைன மதத்தினர், பார்சி வகுப்பினர் ஆகியோர் சிறுபான்மையினராக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 1-ம் வகுப்பு தொடங்கி தொழிற்கல்வி ஆராய்ச்சிப் படிப்பு வரை மத்திய, மாநில அரசுகள் கல்வி உதவித் தொகை வழங்குகின்றன.

#சிறுபான்மையினருக்கு என்னென்ன கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது?

பள்ளிப் படிப்பு கல்வி உதவித் தொகை, பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை மற்றும் தகுதி, வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை ஆகிய 3 திட்டங்களின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

#பள்ளிப் படிப்பு கல்வி உதவித் தொகை எந்த வகுப்பு வரை வழங்கப்படுகிறது?

அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு தொடங்கி 10-ம் வகுப்பு வரை வழங்கப்படுகிறது. உதவித் தொகை பெற தகுதியாக 1-ம் வகுப்பு நீங்கலாக முந்தைய ஆண்டின் பள்ளி இறுதித் தேர்வில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும்.

#இத்திட்டத்தில் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை எவ்வளவு?

1-ம் வகுப்பு தொடங்கி 5-ம் வகுப்பு வரை ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். 6-ம் வகுப்பு தொடங்கி 10-ம் வகுப்பு வரை ஓர் ஆண்டுக்கு சேர்க்கைக் கட்டணத்துக்காக ரூ.500, கல்விக் கட்டணத்துக்காக ரூ.3,500 வழங்கப்படுகிறது. இவை தவிர, விடுதியில் தங்கிப் படிப்பவராக இருந்தால் விடுதி கட்டணமாக ரூ.6000-ம், வீட்டில் இருந்து பள்ளிக்கு வருபவர்களாக இருந்தால் ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.

#இதற்கான விண்ணப்பங்களை எங்கு பெறுவது?

www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் சாதிச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து தாங்கள் படிக்கும் கல்வி நிலையத்திலேயே சமர்ப்பிக்க வேண்டும்.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

20 hours ago

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

3 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

27 days ago

மேலும்