இத்தாலி பொருளாதார மேதை
இத்தாலியைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஃபெர்டினாண்டோ காலியானி (Ferdinando Galiani) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 2). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* இத்தாலியின் கியெட்டி நகரில் (1728) பிறந்தார். கற்றறிந்த உறவினரிடம் பாரம்பரியக் கல்வி பயின்றார். ஆரம்பத்தில் இருந்தே பொருளாதார விஷயங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். மதக் கல்வியும் முடித்து தேவாலயப் பணியில் சேர்ந்தார்.
* வர்த்தகவாதக் கொள்கைக்கு (Mercantilism) ஆதரவாக ‘டிராட்டேட்டோ டெல்லா மொனேடா’ என்ற நூலை எழுதினார். இது இவரது மாஸ்டர்பீஸாகப் போற்றப்படுகிறது. பொது இடங்களில் மரண தண்டனை நிறைவேற்றும் பணியாளர்கள் குறித்து ஒரு நூல் எழுதினார். இந்த நூல்கள் வாயிலாக நாடு முழுவதும் பிரபலமானார்.
* இவரது அரசியல், சமூகப் பொருளாதார அறிவுக்கூர்மை அந்நாட்டு மன்னரை ஈர்த்தது. பாரீஸில் பணியாற்றி வந்த தூதரின் செயலாளராக 1759-ல் நியமிக்கப்பட்டார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு, நேபிள்ஸ் நகரில் அரசு ஊழியராகப் பணியாற்றினார். பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதிலும், நிர்வாகத்திலும் அரசுக்கு உதவினார்.
* இத்தாலி, பிரெஞ்ச் ஆகிய இரு மொழிகளிலும் பல கட்டுரைகள், கடிதங்கள் எழுதினார். பொருளாதார, சமூக, அரசியல் வாழ்க்கை பற்றிய இவரது அபாரமான கருத்துகள் பெரிதும் போற்றப்பட்டன. அரசோ, சட்டமோ அதன் மதிப்பீடுகளை மற்றவர்களிடம் திணிக்கக்கூடாது என்றார்.
* பிரான்ஸின் பிரபல பொருளாதார நிபுணர் டென்னிஸ் டைடரோட், பிரபல தத்துவவாதி ஆன் ராபர்ட் ஜாக்குவஸ், வால்டேர் உள்ளிட்ட பல பிரபலங்களுடன் கடிதத் தொடர்பு கொண்டிருந்தார். இவரது எழுத்துகள் மக்களின் வாழ்க்கைத்தரம், சமூக அறிவியல் ஆகியவற்றை மையமாக கொண்டிருந்தன.
* அந்த காலக்கட்டத்தில் நிலவிய சமூகம், பொருளாதாரம், அரசியல் நிலவரங்கள் குறித்த விரிவான பதிவாக இவை அமைந்தன. பொருளாதார நிபுணர் என்ற முறையில் இவரது கருத்துகள் மிகவும் உண்மையாகவும், எதார்த்தமாகவும் இருந்தன. இவரது சிந்தனைகளில் அரிஸ்டாட்டிலின் தாக்கம் பிரதிபலித்தது.
* 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரபல தத்துவமேதை விக்கோவின் படைப்புகளை ஏராளமாக வாசித்தவர். அவருடைய தாக்கங்களும் இவரிடம் மிகுந்திருந்தன. பொருளாதாரம் குறித்து பிரபல அறிஞர் மொரெல்லெட்டுடன் அடிக்கடி விவாதித்தார். பொருளாதாரம் குறித்து ஆராய்ந்து அறிந்து, தனது தனித்துவம் வாய்ந்த சிந்தனைகள் குறித்து எழுதியும் பேசியும் வந்தார்.
* இவர் எழுதிய ‘ஆன் மனி’, ‘டயலாக்ஸ் ஆன் தி கிரெய்ன் ட்ரேட்’ ஆகிய பொருளாதார ஆய்வுக் கட்டுரைகள் நாடு முழுவதும் பிரபலமடைந்து, சிறந்த பொருளியல் நிபுணர் என்ற பெருமையை இவருக்குப் பெற்றுத் தந்தன. முதல் கட்டுரையில் பயன்பாடு, பற்றாக்குறை அடிப்படையில் மதிப்புக் கோட்பாட்டை வகுத்தார். பொருளாதார மதிப்பீடு குறித்த இவ்வளவு ஆழமான சிந்தனை அதுவரை யாரிடமும் காணப்பட்டதில்லை என்று கருதப்படுகிறது.
* வணிகத் துறைக்குக் கட்டுப்பாடு தேவை என்பதை தனது 2-வது கட்டுரையில் வலியுறுத்தியிருந்தார். இது ஏற்கெனவே அங்கு பிரபலமாக இருந்த முழுமையான வணிக சுதந்திரக் குரலுக்கு எதிரானதாக இருந்தது. 1769-ல் வெளிவந்த ‘டயலாக்ஸ் ஆன் தி காமர்ஸ் இன் வீட்’ என்ற நூலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
* 18-ம் நூற்றாண்டின் தலைசிறந்த பொருளாதார, சமூக, அரசியல் மேதையாகப் போற்றப்படும் ஃபெர்டினாண்டோ காலியானி 59-வது வயதில் (1787) மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago