உருது பாரசீக கவிஞர்
உருது - பாரசீக இலக்கிய உலகின் அற்புதக் கவிஞர் என்று போற்றப்படும் மிர்சா காலிப் (Mirza Ghalib) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* ஆக்ராவில் (1797) பிறந்தவர். முழுப்பெயர் மிர்சா அஸதுல்லா பேக் கான். தந்தை ராணுவத்தில் பணியாற்றினார். மத்திய ஆசியாவின் புகழ்பெற்ற நகரங்களில் ஒன்றான சமர்கந்தில் வாழ்ந்த இவரது பாட்டனார் இந்தியா வந்து லாகூரில் குடியேறினார்.
* பின்னர் குடும்பம் டெல்லி, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் வசித்தது. இறுதியாக ஆக்ராவில் குடியேறியது. இவரது 5 வயதில், ஒரு போரில் தந்தை இறந்தார். பிறகு, சித்தப்பாவிடம் வளர்ந்தார். அவரும் இறந்துவிட்டதால், அம்மா வழி தாத்தா - பாட்டியிடம் வளர்ந்தார். முல்லா அப்துஸ்சமதிடம் கல்வி, தத்துவம், தர்க்கம் மற்றும் உருது, பாரசீகம், துருக்கி, அரபு மொழிகள் கற்றார்.
* 11 வயதில் உருது மொழியில் கவிதைகள் எழுதத் தொடங்கினார். 13 வயதில் திருமணமானதும், டெல்லியில் குடியேறினார். அங்கு இருந்த இவரது மாமனார் வீடு, அவரது பிரபல இலக்கிய நண்பர்கள், சூஃபிக்கள், கவிஞர்கள் கூடும் இடமாக இருந்தது. அவர்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
* தர்மவாத், ஆத்யாத்மவாத் (ஆன்மிகவாதம்) குறித்த பல விஷயங்களை அவர்களிடம் இருந்து அறிந்தார். இவரும் ‘காலிப்’, ‘அஸத்’ என்ற பெயர்களில் கவிதைகள், உரைநடைகள் எழுதி வந்தார். நவாப் பரம்பரையினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால், பகதூர் ஷா ஜஃபர் அரசவையில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தார். அவரது மகன்களின் ஆசிரியராகவும் செயல்பட்டார்.
* பொறுப்புகள் அதிகம் இருந்ததால், செலவைச் சமாளிக்க முடியாமல் கடனாளியானார். இவரது பிள்ளைகள் அனைவரும் இவருக்கு முன்பே இறந்துவிட்டனர். தத்தெடுத்து வளர்த்த பிள்ளையும் இறந்துவிட்டார்.
* சொந்த வாழ்க்கையில் அடுக்கடுக்கான சோதனைகள், சோகங்களை அனுபவித்தார். இதனால் வாழ்க்கையில் எதார்த்தப் போக்கை கடைபிடித்தார். இவரது படைப்புகளிலும் இது பிரதிபலித்தது. அன்றைய காலகட்டத்தின் சமூக, அரசியல், பொருளாதார நிலை குறித்த வர்ணனைகளும் இடம்பெற்றன.
* ஆக்ரா, டெல்லி, கல்கத்தா ஆகிய இடங்களில் வசித்தார். மாபெரும் கவிஞர், உரைநடை எழுத்தாளர் எனப் பிரபலம் அடைந்தாலும் உருது கஜல்களுக்காகவே கொண்டாடப்படுகிறார். தத்துவம், பயணங்கள், வாழ்க்கையின் மர்மங்கள் மற்றும் பல விஷயங்கள் குறித்து எழுதினார். இதனால், உருது இலக்கியத்தில் கஜல்களின் களங்கள் விரிவடைந்தன.
* உருது இலக்கியம் எளிமை வடிவம் பெறவும், பிரபலமாகவும் இவரது உரைநடை பாணி அடித்தளம் அமைத்தது. இவரது படைப்புகள் எளிமையாக, சரளமாக இருந்ததால், ‘தற்கால உருது உரைநடையின் தந்தை’ என்று குறிப்பிடப்பட்டார். இவரது நடை, வாசகரோடு பேசுவது போல இருக்கும்.
* ‘என் எழுத்தைப் படிப்பவர்கள் அதை அனுபவித்து மகிழ வேண்டும் என்பதே என் விருப்பம்’ என்பார். இவரது மாஸ்டர்பீஸ் என்று போற்றப்படும் ‘தீவான்-ஏ-காலிப்’ 10 பகுதிகளாக வெளிவந்தது. பாரசீகக் கவிதைகளை இந்தியாவில் பிரபலப்படுத்தியதும் இவர்தான்.
* இவரது படைப்புகள் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள் ளன. உருது, பாரசீக காவிய உலகுக்கு உயர்ந்த அந்தஸ்தை பெற்றுத் தந்த மிர்சா காலிப் 72-வது வயதில் (1869) மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
7 hours ago
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
25 days ago