நஜீப் மஹ்ஃபூஸ் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

நோபல் பெற்ற எகிப்து எழுத்தாளர்

நோபல் பரிசு பெற்ற எகிப்து நாவலாசிரியர் நஜீப் மஹ்ஃபூஸ் (Naguib Maḥfouẓ) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 11). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# எகிப்து தலைநகர் கெய்ரோவில் (1911) பிறந்தவர். தந்தை அரசு ஊழியர். எகிப்தியப் புரட்சியின்போது அப்பாவிகள் மீது பிரிட்டிஷ் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்துவதை, 7 வயது சிறுவனாக இருந்த நஜீப் ஜன்னல் வழியே பார்த்தார். அது இவரிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

# குடும்பம் 1924-ல் எல் அபாசேயா என்ற புறநகர்ப் பகுதியில் குடியேறியது. சிறு வயதிலேயே புத்தகங்கள் படிப்பதில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். கல்லூரிப் பருவத்தில் பிரபல எகிப்து எழுத்தாளரான ஸலமா மூசாவுடனான அறிமுகம், புதிய அனுபவத்தையும், புதிய கண்ணோட்டத்தையும் வழங்கியது. இதனால், எழுத்தின் மீது இவருக்கு அதீத ஆர்வம் பிறந்தது.

# எகிப்து இலக்கியங்களுடன், மேற்கத்திய இலக்கியங்கள், புகழ்பெற்ற அரேபியப் படைப்புகளையும் படித்தார். அம்மா இவரை பல அருங்காட்சியகங்களுக்கு அழைத்துச் செல்வார். எகிப்திய வரலாறு இவரது படைப்புகளின் முக்கிய விஷயமாக இருந்ததற்கு இதுவும் ஒரு காரணம் என்று கருதப்படுகிறது.

# சிறுகதைகள் எழுதத் தொடங்கியபோது, இவருக்கு 17 வயது. உள்ளூரில் ஆரம்பக் கல்விக்குப் பிறகு 1930-ல் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் தத்துவம் பயின்று பட்டம் பெற்றார். முதுகலைப் படிப்பை பாதியோடு நிறுத்தி, முழுநேர எழுத்தாளரானார்.

# எழுத்தால் மட்டுமே வாழ்க்கை நடத்த முடியாது என்று, சிவில் சர்வீஸ் ஊழியராகச் சேர்ந்தார். அங்கு பல பதவிகளை வகித்தவர், 1971-ல் ஓய்வுபெறும் வரை பணியாற்றினார். தத்துவம் மீது ஆர்வம் கொண்டு, அரபு பத்திரிகைகளில் தத்துவம் பற்றிய கட்டுரைகளை எழுதினார்.

# அரபு இலக்கியத்தை உலகத் தரத்துக்கு உயர்த்த வேண்டும் என்பதை வாழ்நாள் இலக்காகக் கொண்டு செயலாற்றியவர். கட்டுரை, சிறுகதை, திரைக்கதை, நாடகம் என 70 ஆண்டுகாலம் தொடர்ந்து எழுதி வந்தார். இவர் வாழ்ந்த பகுதிகளே பெரும்பாலும் இவரது கதைக்களங்களாக அமைந்தன.

# எகிப்துப் புரட்சியின் நவீனத்துவ, தேசியவாதக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டார். 1938-ல் ‘விஸ்பர் ஆஃப் மேட்னஸ்’ என்ற இவரது முதல் நாவலும் பின்னர் ‘குஃபுஸ் விஸ்டம்’ நாவலும் வெளியானது. இதைத் தொடர்ந்து, புகழ்பெற்றார். பத்திரிகைகளில் ஏராளமான சிறுகதைகள் எழுதினார். இவை 14 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளிவந்தன.

# தனித்துவமான மொழிநடையைக் கையாண்டார். எகிப்து வரலாறு, புரட்சி, அந்நாட்டு கலாச்சாரம் ஆகியவற்றைத் தன் படைப்புகளில் விரிவாக எழுதினார். வாழ்நாள் முழுவதும் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவான, மதவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்.

# இலக்கியத்துக்கான நோபல் பரிசை 1988-ல் பெற்றார். இதன்பிறகு, இவரது பல படைப்புகள் ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் பிரபலமடைந்தார். அரபு இலக்கியத்தை உலகின் கவனத்துக்கு கொண்டு சென்றவர் எனப் புகழப்பட்டார்.

# இவரது நாவல்களைத் தழுவி 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. 34 நாவல்கள், 350-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல திரைக்கதைகள், நாடகங்களை எழுதியவரும், நவீன இலக்கியத்தின் தந்தை எனப் போற்றப்பட்டவருமான நஜீப் மஹ்ஃபூஸ் 95-வது வயதில் (2006) மறைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்