ஹாலந்து வானியல் அறிஞர்
ஹாலந்தில் பிறந்த வானியல் அறிஞர் ஜெரார்ட் பீட்டர் கைப்பர் (Gerard Peter Kuiper) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 7). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* ஹாலந்தில் உள்ள ஹெரன்காஸ்பெல் கிராமத்தில் (1905) பிறந்தவர். தந்தை தையல் கலைஞர். கைப்பர் சிறு வயதிலேயே வானியலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இவரது பார்வைத் திறன் அசாதாரணக் கூர்மை கொண்டிருந்தது. வெறும் கண்ணாலேயே நட்சத்திரங்களை மிக நுட்பமாக பார்க்கும் திறன் பெற்றிருந்தார்.
* பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு லெய்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றார். உலகப் புகழ்பெற்ற வானியலாளர்கள், இயற்பியல் வல்லுநர்கள் அங்கு பேராசிரியர்களாகப் பணியாற்றினர். இதனால், வானியல் ஆராய்ச்சிகளில் இவரது ஆர்வம் மேலும் அதிகரித்தது.
* வானியலில் பட்டம் பெற்றார். இரட்டை நட்சத்திரங்கள் (Binary Stars) குறித்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றார். தொடர்ந்து ஆராய்ச்சி செய்து, பல இரட்டை நட்சத்திரங்களைக் கண்டறிந்தார்.
* அமெரிக்கா சென்றவர், கலிபோர்னியாவில் உள்ள லிக் வானிலை ஆய்வகத்தில் ஃபெலோவாக பணிபுரிந்தார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஹார்வர்டு கல்லூரி ஆய்வகத்தில் இணைந்தார். பின்னர், சிகாகோ பல்கலைக்கழகத்தின் யார்கஸ் ஆய்வகத்தில் ஆராய்ச்சியாளராக நியமிக்கப்பட்டார். 1937-ல் அமெரிக்க குடியுரிமை பெற்றார்.
* அங்கு நடந்த பல்வேறு வானியல் ஆய்வுகளில் பங்கேற்று பல உண்மைகளைக் கண்டறிந்தார். இந்தக் கண்டுபிடிப்புகள் கோள் அறிவியல் துறை முன்னேற வழிகோலின. சிகாகோ பல்கலைக்கழகத்தில் வானியல் துறைப் பேராசிரியராகப் பதவி ஏற்றார். செவ்வாய் கிரகம், சூரிய குடும்பம் குறித்த ஆய்வுகளில் 3 ஆண்டுகாலம் ஈடுபட்டார்.
* நுண்ணோக்கிகள் உதவியுடன் பல்வேறு வானியல் உண்மைகளைக் கண்டறிந்தார். யுரேனஸ், நெப்டியூன் கிரகங்களின் துணைக் கோள்களான மிரான்டா, நீரிட் ஆகியவற்றைக் கண்டறிந்தார். செவ்வாய் கிரகத்தில் கார்பன் டை ஆக்சைடு இருப்பதையும் சனிக் கிரகத்தில் மீத்தேன் வாயு இருப்பதையும் கண்டறிந்தார்.
* சிகாகோ பல்கலைக்கழகத்தில் யார்கஸ் - மெக் டொனால்டு ஆய்வகத்தை தொடங்கியதில் முக்கியப் பங்காற்றினார். டெக்சாஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து எரிகோள்களின் ஒளியியல் தன்மைகள் குறித்த ஆய்வுகளை வழிநடத்தினார். தனது மாணவரான கார்ல் சீகனுடன் இணைந்து விமானப்படையின் ரகசிய அணு ஆயுதத் திட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.
* வான்வெளியில் காற்றில் பரவும் அகச்சிவப்பு கதிர்கள் குறித்த ஆராய்ச்சியின் முன்னோடி இவர். அரிசோனா பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது, அங்கு ஆய்வகம் நிறுவினார். நிலவில் மனிதன் இறங்கும் அப்போலோ திட்டத்துக்காக, நிலவில் இறங்க வேண்டிய இடத்தை அடையாளம் காண உதவினார். நெப்டியூனுக்கு அப்பால் இவர் கண்டறிந்த குறுங்கோள்கள், இவரது பெயரால் ‘கைப்பர் பெல்ட்’ எனக் குறிப்பிடப்படுகிறது.
* அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் வானியல் கழக விருதுகள், அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழகம் உள்ளிட்ட பல அறிவியல் அமைப்புகளின் பதக்கங்கள், பரிசுகளைப் பெற்றவர்.
* பல வானியல் கண்காணிப்பு மையங்களுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. சிறந்த விஞ்ஞானிகளுக்கு அமெரிக்க வானியல் கழகத்தின் அறிவியல் பிரிவு இவரது பெயரில் ஆண்டுதோறும் பரிசு வழங்கி வருகிறது. நவீன கோள் அறிவியலின் தந்தை என்று போற்றப்பட்ட ஜெரார்ட் பீட்டர் கைப்பர் 68-வது வயதில் (1973) மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago