‘காதலா காதலா’ ரொம்ப ஜாலி யான படம். ஆனா, அந்தப் படத் தோட ஷூட்டிங் டென்ஷன்ல தான் நடந்தது. அந்த நேரத்தில்தான் திரைப்பட சங்கங்களுக்கு இடையில் பிரச்சினை ஏற்பட்டு, ஸ்டிரைக் வரைக் கும் போனது. என்னிடம் சில பேர், ‘‘இப் படி ஒரு நிலைமையில் நீங்கள் படத்தில் நடிக்கக் கூடாது’’ன்னு சொன்னாங்க. கமல் சார் வரைக்கும் பேசி, படத்தில் கமிட் ஆகிட்டோமேன்னு ஷூட்டிங்குக் குப் போனேன். என்னிடம் போகா தேன்னு சொன்னவங்களும் மரியாதைக் குரியவங்கத்தான். என்ன பண்றது? அட்வான்ஸ் வாங்கியாச்சு; போகாம இருந்தா நல்லா இருக்காதேன்னு போய் நடிச்சேன். ஷூட்டிங் விறுவிறுன்னு முடிஞ்சுது.
கமல் சாரோட நான் சேர்ந்து நடிச்ச படம். ரெண்டு பேருமே டான்ஸர். பயங் கர எதிர்பார்ப்பு. ஒரு பாட்டு பண்றப்ப, இதுக்கு எதிர்பார்ப்பு அதிகம் இருக்கே… ஆக, அது இப்படி வரணும்; அப்படி இருக் கணும்னு நினைச்சுப் பண்றதில்லை. அந்தப் பாட்டு என்னக் கேட்குதோ, அதைத்தான் செய்வேன். அந்த மாதிரி அமைஞ்சதுதான் ‘காதலா காதலா’வில் வர்ற ‘காசு மேல காசு வந்து…’பாட்டு. கமல் சாரும், நானும் சிம்பிள் சிம்பிள் ஸ்டெப்ஸ் போட்டு ஆடியிருப் போம்.
எனக்குப் பிடித்த பேவரைட் பாடல் கள்ல இதுவும் ஒண்ணு! தமிழ், தெலுங் கில் நல்லா பேசப்பட்ட இந்தப் பாட்டு, மும்பையில் பயங்கர ஹிட். இப்பவும் அங்கே சிலர் பேசுறப்ப அதில் வரும் சில ஸ்டெப்ஸைக் குறிப்பிட்டு பாராட்டு வாங்க. அதே மாதிரி மைசூரு போறப்ப என்னோட சித்தி பொண்ணுங்க பாட்டுக்கு இடையில வர்ற, ‘ராம லிங்கம்… சுந்தரலிங்கம்’னு வர்ற இடங்களை ஜாலியா பாடி கிண்டல் செஞ்சு நடிச்சுக் காட்டுவாங்க.
பாட்டுல ‘வாசக் கதவை ராஜலட்சுமி தட்டுகிற வேளை இது’ன்னு வாலி சார் எழுதியிருப்பார். கமல் சாரோட அம்மா பேரு அது. அந்தப் பாட்டை கமல் சாரும், உதித் நாராயணனும் பாடியிருப் பாங்க. அப்படி இருக்கும்! கார்த்திக் ராஜாதான் மியூசிக். நல்ல மியூசிக் டைரக்டர். எனக்கு பிடிச்ச மியூசிக் டைரக்டர். இந்தப் படம் ஹிந்தியிலும் ரீமேக் ஆகி, நல்லாப் போனது!
‘காதலா காதலா’ ஷூட்டிங்கில் கமல் சார், சோ சார், எம்.எஸ்.விஸ்வநாதன் சார், மவுலி சார், வடிவேலு, வித்யா மேடம், சவுந்தர்யா, ரம்பா, நான்னு அந்த ஸ்பாட்டே ஜாலியா இருக்கும். எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடு வோம். அவங்கக்கூட இருக்கும்போது இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலா மேன்னு தோணும். நடிகர்கள்கூட இருக்கிற மாதிரியே இருக்காது.
அப்படி ஒரு டீம்ல ஜாலியான மனி தரா இருந்தவர்தான் சோ சார். அவர் சமீபத்தில் நம்மை விட்டுப் பிரிந்து சென்றுட்டார். அந்த ஒரு படத்தில்தான் அவரோடு நான் சேர்ந்து நடிச்சேன். வெரி கூல் பர்சன். ஆராய்ந்து பேசு வார். அதில் அர்த்தமும் இருக்கும் ஜாலி யாவும் இருக்கும்.
அதே மாதிரி முதலமைச்சர் ஜெய லலிதா மேடத்தை பற்றியும் இங்கே சொல்லணும். நான் அவங்களோட பெரிய ரசிகன். அமெரிக்காவில் இருக்கிற என் ஃபிரெண்ட் தினமும் நியூஸ் பார்த் துட்டு, ‘‘சி.எம் மேடம் கொஞ்சம் கொஞ் சமா நார்மலுக்கு வந்துட்டு இருக்காங்க. சீக்கிரமே ரொட்டீன் வேலைக்கு திரும் பிடுவாங்க’’ன்னு அடிக்கடி போன்ல சொல்லிட்டே இருந்தான். நானும் தின மும் அவங்கிட்ட இதைப் பத்தி பேசிட்டே இருந்தேன். ஆனா, நாம் யாருமே எதிர்பார்க்காத ஒண்ணு நடந்துடுச்சு. ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.
ஜெயலலிதா மேடம் நடிச்ச ‘ஆயிரத் தில் ஒருவன்’ படத்தில் தங்கப்பன் மாஸ்டருக்கு டான்ஸ் அசிஸ்டென்ட்டா அப்பா வேலை பார்த்தாங்க. அதில் வர்ற ‘ஓடும் மேகங்களே’ பாட்டுக்கு மேடத்தோட டான்ஸ் ஸ்டெப்ஸ்ஸை எல்லாம் அப்பாதான் ரிகர்சல் பார்த் திருக்கார். அவங்களோட நிறையப் படங்களுக்கு அப்பா ஒர்க் பண்ணியிருக்கார். அப்படி ஒரு லீடர்! அவங்க இன்றைக்கு இல்லைன்னு நினைக்கிறப்ப ஒரு மாதிரியாதான் இருக்கு.
இந்திய அளவில் புகழ்பெற்ற ஒரு பத்திரிகைக்கு 15 வருஷத்துக்கு முன்னால ஜெயலலிதா மேடம் இண்டர்வியூ கொடுத்தப்ப ‘‘உங் களுக்குப் பிடிச்ச டான்ஸர் யாரு?’’ன்னு கேட்டப்போ, அதுக்கு, ‘‘பிரபு தேவா’’ன்னு பதில் சொன்னாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. என் ஃபிரெண்ட்ஸ் நிறையப் பேர், ‘‘அவங் களே உன் பேரைத்தாண்டா சொல்லியிருக்காங்க… பார்த்தியாடா பிரபு!”ன்னு சொன்னாங்க.
அப்பா… இப்போ சினிமாவிலிருந்து சுத்தமா ஓய்வு எடுத்துட்டு மைசூரு பக்கத்தில் இருக்கிற எங்க ஊரில் காய் கறி தோட்டம், விவசாயம்னு இறங் கிட்டார். நாளைக்குப் போய் அவரைப் பார்த்தாக்கூட தோட்டத்தில் ஏதாவது செடிகள் வெச்சி அதுக்குத் தண்ணீர் தெளிச்சுட்டு இருப்பார்.
அந்த மாதிரி ஒருமுறை தோட்டத்தில் வேலை பார்த்துட்டிருந்தப்போ, ஜெய லலிதா மேடம் மைசூரு பக்கத்தில் இருக்கிற ஒரு கோயிலுக்குப் போய்ட்டு அந்தப் பக்கமா திரும்பியிருக்காங்க. சேறும், சகதியுமா வயல்ல வேலை பார்த்துட்டிருந்த அப்பாவுக்கு மேடம் மைசூர் ஏர்போர்ட்டுக்கு வரப் போற விஷயம் தெரிய வந்திருக்கு. பக்கத்தில் போய், கிடைச்ச ஒரு பூவை எடுத்துட்டு மேடத்தை பார்க்கணும்னு ஏர்போர்ட் வாசல்ல போய் நின்னுருக்கார். அவரை கிராஸ் பண்ணிப் போன கார் கொஞ்ச தூரம் போய், திரும்ப பின்னால வந் திருக்கு.
கார் கண்ணாடியை கீழே இறக்கிவிட்டு, ‘‘என்ன மாஸ்டர்! இங்கே என்ன பண்ணிட்டிருக்கீங்க?’’ன்னு ஆச் சர்யமா விசாரிச்சிருக்காங்க மேடம். அப்பாவும், ‘‘இதுதான் என்னோட ஊர்’ன்னு விஷயத்தைச் சொல்லி நலம் விசாரிச்சிருக்கார். அவங்களும் ‘‘பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க?’’ன்னு திரும் பவும் விசாரிச்சிட்டு கிளம்பியிருக்காங்க. சி.எம் இறந்தப்போ அப்பாவும் ரொம்ப வருத்தப்பட்டாங்க!
‘காதலா காதலா’ படத்தோட ஷூட்டிங் சமயத்துல எங்களை கலகலப்பா இருக்க வெச்ச சோ சார் எப்படி இன்னைக்கு இல்லையோ, அதே மாதிரி அந்தப் படத்தில் நடிச்ச சவுந்தர்யாவையும் சில வருஷங்களுக்கு முன்னால நாம் இழந்துட்டோம்.
தெலுங்கில் ‘சூப்பர் போலீஸ்’னு ஒரு படம். வெங்கடேஷ் சார் ஹீரோ. ஏ.அர்.ரஹ்மான் மியூசிக். அதில் நக்மா, சவுந்தர்யா ரெண்டு பேரும் ஹீரோயின்ஸ். அந்தப் படத்தில் ஒரு பாட்டுக்கு நான் கொரியோகிராஃப் செஞ்சேன். சவுந்தர்யாவுக்கு நான் முதன்முதலா கொரியோகிராஃப் செஞ்சப் பாட்டு அது. அப்போவெல்லாம் அந்த அளவுக்கு பழக்கமில்லை. ஷூட்டிங் ஸ்பாட்ல ஒரு சின்ன மியூசிக் பிட்டுக்கு ரெண்டரை மணி நேரம் ரிகர்சல் போச்சு. அந்த பிட்ல ஆடுறதுக்கு சவுந்தர்யா கொஞ்சம் கஷ்டப்பட்டாங்க. ‘‘ரொம்ப ரிஸ்க்கா இருந்தா ஸ்டெப்ஸ் மாத்திடலாம்’’னு சொன்னேன். ‘‘அதெல்லாம் வேண் டாம். கத்துக்கிட்டு ஆடுறேன்’’னு சொன்னாங்க. அவங்க முகம் சின்னதா சேஞ்ச் ஆச்சு. கண்டிப்பா என் மேல கோபம் இருக்கத்தான் செஞ்சிருக்கும்.
அதே மாதிரி பாட்டுல ஒரு இடத்துல ஹீரோ பாடுற வாய்ஸ் ஹீரோயின் காதுக்கு பக்கமா போகும். அப்போ, ஹீரோயின் தன்னோட காதை மூடிக்கணும். சவுந்தர்யா தன்னோட காதை மூடிட்டு கையை எடுக்கிறப்ப கையில் ரத்தம். காதில் போட்டிருந்த கம்மல் குத்தி ரத்தம் வந்துச்சு. இப்படி ஒரு மாதிரிதான் அந்தப் பாட்டை ஷூட் பண்ணி முடிச்சோம். அந்தப் பாடல் ஷூட்டிங்கில் கடைசி வரைக்கும் அவங்க என்கூட நல்ல ஃபிரெண்ட்லியா ஆகவே இல்லை.
அதுக்கப்புறம், ‘காதலா காதலா’ படத்தில் அவங்களோட சேர்ந்து வேலை பார்த்தேன். அதில் அவங்க கமல் சாருக்கு ஜோடி. ஷூட்டிங்ல நிறையப் பேசுற சூழல் அமைஞ்சது. ‘அக்னி வர்ஷா’ன்னு ஒரு ஹிந்தி படம். அதில் நான் 15 நிமிஷம் கெஸ்ட் ரோல் பண்ணியிருப்பேன். அந்தப் படத்தை சவுந்தர்யா எங்கேயோ பார்த் திருக்காங்க. அப்புறமா என்னை சந்திச் சப்ப அந்தப் படத்தில் என் நடிப்பை ரொம்பப் பாராட்டி பேசுவாங்க. அதை அவங்க சொல்லணும்னு அவசியமே இல்லை. இருந்தாலும் வந்து சொன் னாங்க. ரொம்ப நல்லப் பொண்ணு. புத்தி சாலியானவங்க. சரியான நேரத்துக்கு ஷூட்டிங் வருவாங்க. சின்னப் படம், பெரிய படம்னு பாரபட்சம் பார்க்காம நடிப்பாங்க. எல்லாருக்கும் நல்லா உதவுவாங்க. அவங்களையும் நாம மிஸ் பண்ணிட்டோம்.
இப்படி சாதிக்கிறவங்களும், திறமையானங்களும் நம்மோடு கூடவே இருந்துட்டு, திடீர்னு ஒருநாள் அவங்க இல்லைன்னு ஆகுறப்ப அதை எப்படி எடுத்துக்கிறதுன்னே… தெரி யலை. மனசுக்கு ஒரு மாதிரியாதான் இருக்கு!
- இன்னும் சொல்வேன்… | படம் உதவி: ஞானம்
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
4 months ago