ஜாக் செயின்ட் கிளேர் கில்பி 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

நோபல் பரிசு பெற்ற அமெரிக்க ஆராய்ச்சியாளர்

நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மின்பொறியாளரும், ஆராய்ச்சியாளருமான ஜாக் செயின்ட் கிளேர் கில்பி (Jack St. Clair Kilby) பிறந்த தினம் இன்று (நவம்பர் 8). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* அமெரிக்காவின் மிஸோரி மாநிலம் ஜெபர்சன் நகரில் (1923) பிறந்தார். தந்தை மின் நிறுவனம் நடத்திவந்தார். இத னால், சிறுவயதிலேயே கில்பிக்கு எலெக்ட்ரானிக் சாதனங்கள் மேல் ஆர்வம் பிறந்தது.

* கிரேட் பெண்ட் பள்ளியில் ஆரம்பக் கல்விக்குப் பிறகு, இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் அறிவியலில் பட்டம் பெற்றார். பின்னர், விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் மின்னியல் பொறியியலில் முதுகலை பட்டம் பெற்றார். அதே சமயத்தில், மில்வாக்கி என்ற இடத்தில் உள்ள ஆய்வுக் கூடத்தில் பணியாற்றி, ஆய்வுப் பணிகளையும் மேற்கொண்டார்.

* மைக்ரோ எலெக்ட்ரானிக்ஸ் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ரேடியோ, தொலைக்காட்சி, காதொலி கேட்புக் கருவி ஆகியவற்றின் உதிரிபாகங்களைக் கண்டுபிடிப்பது, மேம்படுத்துவது ஆகிய பணிகளில் ஈடுபட்டுவந்தார். 2-ம் உலகப் போரின்போது, ராணுவத்தில் சேர்ந்தவர், தொழில்நுட்ப பொறியாளராக இந்தியாவில் உள்ள மின்னணு நிலையத்தில் பணிபுரிந்துள்ளார்.

* டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் நிறுவனத்தில் 1958-ல் சேர்ந்தார். மின்னணு சாதனங்கள் முதலில் தனித்தனி டிரான்சிஸ்டர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டன. இதில் பல குறைபாடுகள் இருந்ததால், டிரான்சிஸ்டர் மின் சாதனங்களின் வடிவமைப்பு செலவைக் குறைக்கும் பணி இவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

* முழு மூச்சுடன் ஆய்வுகளில் இறங்கியவர், ஒரு சில மாதங்களில் பல டிரான்சிஸ்டர்களைக் கொண்ட ஒரு மின்சுற்றை அமைத்துவிட்டார். அதை வெற்றிகரமாக செயல்விளக்கமும் செய்துகாட்டினார். இது ஒருங்கிணைக்கப்பட்ட மின்சுற்று (இன்டகிரேடட் சர்க்யூட் ஐ.சி.) எனக் குறிப்பிடப்பட்டது.

* இவரது இந்தக் கண்டுபிடிப்புக்காக 2000-ல் இவருக்கு இயற்பிய லுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. கணினித் துறையின் இன்றைய அபார வளர்ச்சிக்கு இவரது ‘ஐ.சி’ மற்றும் மைக்ரோசிப் கண்டுபிடிப்புகள் மிக முக்கிய காரணம் என்பதால், நவீன கணினியியலின் முக்கிய பங்களிப்பாளராகப் போற்றப்படுகிறார்.

* முதன்முதலாக கம்ப்யூட்டரில் ஐ.சி.களைப் பயன்படுத்தும் தொழில்நுட்ப அணிக்கு தலைமைதாங்கி அதை செயல்படுத்திக் காட்டினார். சிலிக்கான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சூரிய ஒளியில் இருந்து மின்சக்தி உருவாக்குவது உள்ளிட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

* தனது ஆராய்ச்சிகள் குறித்து ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டார். கையடக்க கால்குலேட்டர், தெர்மல் பிரின்டர் உட்பட சுமார் 60 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி காப்புரிமம் பெற்றார். டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் துறைப் பேராசிரியராக 6 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

* டேவிட் சார்னோஃப் விருது, அமெரிக்காவின் எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக் பொறியியல் துறைக்கான பல்வேறு அமைப்புகளின் கவுரவ பதக்கங்கள், அமெரிக்க தேசிய அறிவியல் பதக்கம், தொழில்நுட்பத்துக்கான தேசிய பதக்கம் என பல்வேறு விருதுகளோடு, 9 பல்கலைக்கழகங்களும் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கின.

* 1980-ல் இவரது பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டு, அமெரிக்காவில் மின்னியல் துறையில் சாதனை புரிபவர்களுக்கு ஆண்டுதோறும் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. மைக்ரோ எலெக்ட்ரானிக்ஸ் துறைக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய ஜாக் செயின்ட் கிளேர் கில்பி 82-வது வயதில் (2005) மறைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்