இந்திய கணிதத் துறைக்கு மகத்தான பங்களித்தவர்
உலகப் புகழ்பெற்ற கணித அறிஞரும் இந்திய கணிதத் துறைக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியவருமான குமாரவேலு எஸ்.சந்திரசேகரன் (Komaravolu S. Chandrasekharan) பிறந்த நாள் இன்று (நவம்பர் 21). அவரைப் பற்றிய அரிய முத்துகள் பத்து:
* ஆந்திரப் பிரதேசம் மசூலிப்பட்டினத் தில் பிறந்தவர் (1920). தந்தை பள்ளி தலைமை ஆசிரியர். குண்டூர் மாவட்டத்தில் ஆரம்பக் கல்வி பயின்றார். பாப்டலா உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பின்னர் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
* இந்திய கணிதக் கழக இதழின் ஆசிரியராக செயல்பட்டார். அந்தச் சமயத்தில் உலகம் முழுவதும் உள்ள பல கணித வல்லுநர்களை இந்த இதழில் எழுதவைத்தார். இவரது தலைமையில் தலைசிறந்த பல கணித கட்டுரைகள் வெளிவந்தன. சென்னைப் பல்கலைக்கழக கணிதத் துறையில் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்தார்.
* அதேசமயத்தில் பிரசிடென்சி கல்லூரியில் பகுதி நேர விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1943-ல் முனைவர் பட்டம் பெற்றார். தொடர்ந்து அமெரிக்கா சென்ற இவர், பிரின்ஸ்டன் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்தார். அப்போது டாடா அடிப்படை ஆராய்ச்சி நிலையத்தின் ஸ்கூல் ஆஃப் மாதமாடிக்ஸில் பணிபுரியுமாறு இவரை ஹோமி பாபா அழைத்தார்.
* அந்த அழைப்பை ஏற்று இந்தியா திரும்பிய இவர், இந்த அமைப்பை சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற தலைசிறந்த கணித மையமாக மாற்றுவதற்காக அயராமல் பாடுபட்டார். இந்த அமைப்பில் ஆய்வு மாணவர்களை நியமனம் செய்வதற்கும் பயிற்சி அளிப்பதற்கும் வெற்றிகரமான ஒரு முறையை உருவாக் கினார். அவை இன்றும்கூடப் பின்பற்றப்பட்டு வருகின்றன.
* உலகின் முன்னணி கணித மேதைகளை இங்கே வந்து விரிவுரை கள் ஆற்றும்படி கேட்டுக்கொண்டார். இந்த விரிவுரைகள் குறிப்பு எடுக்கப்பட்டு, இந்த அமைப்பால் கட்டுரைகளாக வெளியிடப்பட்டன.
* தனது ஆய்வுகள் குறித்து கட்டுரைகள் எழுதி வெளியிடுவதோடு தனியாகவும் பிற கணித வல்லுநர்களோடு இணைந்தும் ஃபோரியர் டிரான்ஃபார்ம்ஸ், டிபிகல் மீன்ஸ், இன்ட்ரொடக் ஷன் டு அனலிடிகல் தியரி உள்ளிட்ட பல நூல்களையும் எழுதியுள்ளார். 1957-ல் இவரது முனைப்புகளால், நோட்புக்ஸ் ஆஃப் நிவாச ராமானுஜம் நூலை டாடா அடிப்படை ஆய்வுகளுக்கான கல்விக் கழகம் வெளியிட்டது.
* சர்வதேச கணித யூனியனின் (ஐ.எம்.யு.) நிர்வாகக் குழு உறுப்பினராகவும், அதன்பிறகு இந்த அமைப்பின் செயலாளர் மற்றும் தலைவர் பொறுப்புகளையும் வகித்தார்.
* இந்திய அரசின் அறிவியல் ஆலோசனை கமிட்டியின் உறுப்பின ராகவும் நியமிக்கப்பட்டார். 1956 முதல் நான்காண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச அளவில் நடைபெற்றுவரும் சர்வதேச கணித ஆய்வரங்கத்தை ஐ.எம்.யு. நடத்திவருகிறது. இதற்கு விதை போட்டவர் இவர்தான்.
* எண் கோட்பாடு மற்றும் எண் கோட்பாட்டில் கூட்டுமை (summability) குறித்த ஆய்வுகளுக்காகப் போற்றப்பட்டார். பத்ம, சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது, ராமானுஜம் பதக்கம் உள்ளிட்ட பல விருதுகள், பரிசுகளைப் பெற்றார். 1965-ல் சூரிச்சில் உள்ள உயர் நுட்பக் கழகமான இ.டி.ஹெச். பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராக பணியாற்றினார்.
* தற்போதும் அங்கே கவுரவ பேராசிரியர் (Professor Emeritus) என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார். ஒட்டுமொத்தமாகக் கணிதத் துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்புகளைப் போற்றும் வகையில் 2012-ல் அமெரிக்க கணித சொசைட்டியின் ஃபெலோவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். குமாரவேலு எஸ்.சந்திரசேகரன் இன்று 96-வது வயதில் அடியெடுத்துவைக்கிறார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago