ஜூலியஸ் ராபர்ட் மேயர் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

ஜெர்மனி இயற்பியலாளர்

ஜெர்மனியின் உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரும் வெப்ப இயக்கவியலைக் கண்டறிந்தவர்களுள் முக்கியமானவருமான ஜூலியஸ் ராபர்ட் மேயர் (Julius Robert Mayer) பிறந்த தினம் இன்று (நவம்பர் 25). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ஜெர்மனியில் ஹைல்போர்ன் வுட்டன்பெர்க் பகுதியில் பிறந்தார் (1814). தந்தை, மருந்துக் கடைக்காரர். சொந்த ஊரில் ஆரம்பக்கல்வி கற்றார். இளம் பருவத்தில் பல்வேறு விதமான இயற்பியல் மற்றும் வேதியியல் ஆய்வுகளை மேற்கொண்டார்.

* பள்ளிக் கல்விக்குப் பிறகு, மருத்துவம் பயின்று, மருத்துவப் பட்டம் பெற்றார். இருப்பினும் மருத்துவத்தில் அவ்வளவாக ஆர்வமில்லாமல் இருந்தார். ஜகார்த்தாவுக்குச் செல்லும் டச் நாட்டின் வணிகக் கப்பலில் மருத்துவராகப் பயணம் மேற்கொண்டார்.

* புயல் காற்றில் அடித்து வரப்படும் அலைகள் அமைதியான கடல் அலைகளைவிட அதிக வெப்பமாக இருப்பதை இந்தக் கப்பற் பயணத்தின்போது கவனித்தார். இயற்பியல் விதிகள் குறித்து சிந்திக்கத் தொடங்கினார்.

*1841-ல் நாடு திரும்பிய பிறகு தன் சிந்தனை குறித்த ஆராய்ச்சிகளில் இறங்கிவிட்டார். ‘ஆன் தி குவான்டிடேடிவ் அன்ட் குவாலிடேட்டிவ் டிடர்மிநேஷன் ஆஃப் ஃபோர்சஸ்’ என்ற கட்டுரையை வெளியிட்டார். பின்னர், வெப்பம் மற்றும் அதன் இயக்கம் குறித்த வெப்ப இயக்கவியல் (Thermodynamics) ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார்.

* வெப்பத்தின் இயக்கமுறைக்கு சமமான மதிப்பை எண் அடிப்படையில் வழங்கினார். இது குறித்த ‘ரிமார்க்ஸ் ஆன் தி ஃபோர்சஸ் ஆஃப் இனார்கானிக் நேச்சர்’ என்ற கட்டுரையை 1942-ல் வெளியிட்டார். நிலையான அழுத்தத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட வெப்பத்துக்கும் நிலையான கன அளவிலான ஒரு குறிப்பிட்ட வெப்பத்துக்கும் உள்ள தொடர்பை விளக்கினார். இது மேயர்ஸ் தொடர்பு என்று பின்னாளில் குறிப்பிடப்பட்டது.

* அனைத்து உயிர்களுக்கும் முதன்மை ஆற்றல் ஆதாரமாக விளங்கும் ஆக்சிடேஷன் என்று தற்போது குறிப்பிடப்படும் முக்கிய வேதியியல் செயல்முறையை விவரித்த முதல் நபர் இவர்தான். நவீன இயற்பியலின் மிக அடிப்படையான ஒன்றான ஆற்றல் பாதுகாப்பு விதி (Law of the Conservation of Energy) குறித்து முதன்முதலாக தெரிவித்தவரும் இவர்தான்.

* ஆற்றல் என்பது உருவாக்கப்படுவதோ அல்லது அழிக்கப்படுவதோ அல்ல என்றார். இவரது சாதனைகள் முதலில் அதிகம் கவனம் பெறவில்லை. மேலும் தனது கண்டுபிடிப்புகளுக்கான பெருமை, வேறு ஒரு இயற்பியல் அறிஞருக்கே கிடைக்கிறது என்பதைத் தெரிந்து கொண்ட இவர் விரக்தி அடைந்தார்.

* மனிதன், தாவரங்கள் விலங்குகள் அனைத்துக்குமான ஆற்றலின் ஆதாரம் சூரியன் என்று குறிப்பிட்டார். தாவரங்கள், ஒளி வடிவில் சக்தியை (ஆற்றல் என்ற வார்த்தைக்கு பதில்) பெற்று, ரசாயன மாறுபாடு (ரசாயன ஆற்றல்) வடிவில் வெளியிடுகின்றன என்றும் கூறினார்.

* இவரது இந்தக் கண்டுபிடிப்பு, ஒளிச்சேர்க்கை குறித்த ஆய்வுகளுக்கு வழிவகுத்தன. இவரது ஆராய்ச்சிப் பணிகள் மெல்ல மெல்ல பலரது கவனத்தையும் ஈர்த்தன. வெப்பம் மற்றும் அதன் இயக்கம் குறித்த ‘டை மெகானிக் டெர் வார்மே’ என்ற இவரது நூல் 1867-ல் வெளிவந்தது.

* டுபிங்கன் பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. பிரிட்டனின் ‘சர்’ பட்டத்துக்கு சமமான ஜெர்மனியின் ‘ஆர்டர் ஆஃப் தி கிரவுன்’ (வுட்டன்பெர்க்) கவுரவம் இவருக்கு வழங்கப்பட்டது. இறுதி மூச்சுவரை மிகவும் தீவிரமாக இயற்பியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்த ஜூலியஸ் ராபர்ட் மேயர், 64-வது வயதில் 1878-ல் மறைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்