‘ரவுடி ரத்தோர்’ படத்துக்காக சிறந்த ஆக்ஷன் ஹீரோ விருதை வாங்க மேடை ஏறிய அக்ஷய்குமார் சார் என்னைக் கூப்பிட்டார். ‘‘இந்தப் படத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் நகர்த்தியது பிரபு சார்தான். அதனால் இந்த விருது அவருக்குத்தான் போய்ச் சேரணும்!’’னு சொல்லிக்கிட்டே, டக்குன்னு அந்த விருதை என் கையில் கொடுத்துட்டார். ‘ரவுடி ரத்தோர்’ படத்துக்கு சரியான உழைப்பை கொடுத்திருக்காங்கன்னு அக்ஷய் சாரே சொன்னப்போ எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு!
ஹாலிவுட் சினிமாவில் இன்னைக்கு கவனிக்கப்படுற படங்களைக் கொடுக்கிற கேமராமேன், இயக்குநர்கள் நிறையப் பேருக்கு வயசு 60-க்கும் மேல. வயது கூடக் கூட அனுபவம் அதிகமா இருக்கு. அவ்வளவு அனுபவத்தோட திறமையா இயக்குறாங்க, படத்தை ஒளிப்பதிவு செய்றாங்க. சீனியர்கள் அந்த மாதிரி உழைக்கவும், படங்களைக் கொடுக்கவும் அங்கே பெரிய இடம் இருக்கு. ஆனா, நம்ம ஊர்ல அப்படி இல்லை. குறிப்பிட்ட வயசுக்கு மேல இயக்குநர்கள், கேமராமேன்கள் இங்கே வேலை பார்க்க நம்ம ஆர்வப்படுத்துறதும் இல்லை. விளையாட்டுல கூட ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல விளையாட முடியாது. அது ஓ.கே. அரசியல்ல..? வயது கூடி அனுபவம் சேரச் சேரத்தான் நல்ல பங்களிப்பைக் கொடுக்க முடியும்னு நினைக்கிறேன். ஆனா, சினிமாவுல சின்ன வயசுல இருந்து பெரியவங்க வரைக்கும் சேர்ந்து திறமையான உழைப்பை கொடுக்கலாம். அனுபவம் வாய்ந்த கிரியேட்டர் ஒருத்தர், ரெண்டு பேர் ஒரு படத்துக்குள்ள இருக்கும்போது அதோட மதிப்பே வேற மாதிரிதான். ஹாலிவுட் மாதிரி இங்கே இருக்கிற சூழ்நிலையும் மாறவேணும். காலப்போக்கில் அது நடக்கும்னு நினைக்கிறேன்.
இன்னொரு எண்ணமும் ரொம்ப நாட் களாகவே எனக்குள்ள ஓடிட்டு இருக்கு. ஒரு மியூசிக் டைரக்டர்கிட்ட டியூன் வேணும்னு போறோம். அவரையே பாட் டோட வரிகளையும் எழுதி, நடனம் அமைச்சு கொடுங்கன்னு யாரும் சொல்ற தில்லை. அவரோட வேலை என்னவோ அதை மட்டும் கேட்டு வாங்கிட்டு வந்துடு றோம். ஆனா, இங்கே பெரும்பாலும் டைரக்டர்கிட்டேயே கதையையும், வச னத்தையும் எழுதச் சொல்றாங்க. அப்படிக் கேட்கக் கூடாதுன்னு சொல்ல வரலை. கண்டிப்பா பண்ணலாம். ஆனா, டைரக்டர்தான் கதை, வசனம்னு எல்லா வேலைகளையும் பார்க்கணும்னு அவசியம் இல்லையே. அவர் டைரக்ஷன்ல மட்டும் கவனம் செலுத்தி அதை சிறப்பா பண்ணினாலும் போதுமே. ஆனா, இங்கே டைரக் டர்தான் எல்லாமும்கிற ஸ்டைல் ஆகிடுச்சு. அந்தக் காலத்துல இருந்த மாதிரி இப்போ எல்லாம் சினிமாவுல கதை ஆசிரியர்கள் இல்லாமல் குறைஞ்சதுக்கு இதுவும் ஒரு காரணம். இதெல்லாம்கூட மாறணும்னு நினைக்கிறேன். அப்படி மாறும்போது நல்ல கதைகளைக் கொடுக்கிற கதாசிரியர்கள் நிறைய வருவாங்க. அதை இயக்கக்கூடிய இயக்குநர்களும் பெஸ்ட்டா இயக்குவாங்க.
‘ரவுடி ரத்தோர்’ படத்துல வர்ற ஒரு முக்கியமான ஸீனை மும்பையில எடுத்துட்டிருந்தோம். அந்த ஸீன் நல்லா வந்துட்டிருந்துச்சு. எல்லாரும் மகிழ்ச்சியில இருந்தோம். ஆனா, அதே நாள் தமிழ்ல நான் இயக்கின ‘வெடி’ படமும் ரிலீஸாச்சு. படம் எதிர்பார்த்த அளவு ரீச் ஆகலை. அப்போ வந்த விமர் சனங்களும் என்னை கஷ்டமாக்கிடுச்சு. அதுதான் சினிமா. இங்கே ஏற்றம், இறக் கம் மாறி மாறி வந்துட்டே இருக்கும். சமீபத்தில் கூட என்னிடம் ஒருத்தர். ‘‘இவ் வளவு பணிவா இருக்கீங்களே?’’ன்னு கேட்டார். ‘‘வாழ்க்கையில் தோல்விகளை சந்திக்கும்போது பணிவு அதுவா வரும்’’னு சொன்னேன்.
பல சமயங்கள்ல தோல்விகள்தான் மனிதனை உருவாக்குதுன்னு நினைக்கிறேன். வெற்றியைவிட தோல்விதான் ரொம்ப முக்கியம்னு நினைக்கிறேன். அதனால்தான் வருஷப் பிறப்பு மாதிரி பண்டிகை நாட்கள்ல வெல் லத்தையும், வேப்பம் பூவையும் ஒண்ணாக் கொடுக்குறாங்கன்னு நினைக்கிறேன். அதை உணரத்தான் நம் முன்னோர்கள் இதெல்லாம் நடைமுறையில கொண்டு வந்திருப்பாங் களோன்னு தோணுது.
வெற்றி அடையும் போது நம்மக்கிட்ட நல்லாப் பழகுற வங்க, தோல்வி அடையு றப்ப காட்டுற வித்தி யாசத்தைப் புரிஞ்சிக்க முடியும். ஆக, தோல்வி தான் மற்றவர்களைப் பற்றி நமக்கு யார், என் னங்கிற அடையாளத்தை காட்டுது. தோல்வியும் எப்படி யெல்லாம் யூஸ் ஆகுது பாருங்க வாழ்க்கைக்கு. அதனாலதான் என்னை யாராவது பாராட்டும் போது அவங்களே நாளைக்குத் திரும்ப வும் நம்மை திட்டுவாங் கன்னு, அதை பெருசா எடுத்துக்க மாட்டேன்.
ஒரு படம் வெற்றி அடையுறப்ப எனக்கு அப்பா, அம்மாவைப் பார்க்கணும்னு தோணியதே இல்லை. ஆனா, அதுவே ஒரு படம் சரியா போகாம தோல்வி யடைஞ்சா உடனே அம்மா, அப்பாவைப் போய்ப் பார்க் கணும்னு மனசு சொல்லும். கஷ்டம்னு வர்றப்ப தான் அவங்களோட ஞாபகம் வருது. இந்தமாதிரியான சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுக்குறதா லேயே தோல் வியை ரொம்பப் பிடிச்சிருக் குன்னு சொல் வேன்.
நான் ஸ்கூல்ல படிக்கிறப்ப என் வகுப்புல 80 பேர் படிக்கிறாங்கன்னா, அதில் நல்லாப் படிக்காத 3 பேர்ல நானும் ஒருத்தனா இருப் பேன். காலாண்டு, அரையாண்டு தேர் வுல எல்லாம் தோல்வி தான். எப்படியோ முழு ஆண்டு தேர் வுல பாஸாகி அடுத்த வகுப்புக்குப் போய்டு வேன். ஸ்கூல்ல தொடங்கி இன்னைக்கு வரைக்கும் இப்படி தோல்விங்கதான் என்னை அடுத்தடுத்து ஓடவெச்சிட்டே இருக்கு.
படிக்கிற பசங்க 95 சதவீதம் மார்க் வாங் கணும்னு அப்பா, அம்மா நினைக்கிறது ஒண்ணும் தப்பு இல்லே. ஆனா, அதே சமயத்துல தோல்வியே இல்லாம எப்பவுமே முதல் ரேங்க், ரெண்டாவது ரேங்க்னு வாங்குற பசங்க, எதிர்பாராத விதமா தோல்வியை சந்திச்சா அதை அந்த அப்பா, அம்மாவால தாங்கிக்கவே முடியாது. பின்னால வளர்ந்த பிறகு தோல்வியை சந்திக்கிற நிலைமை வந்தா அது ரொம்பவும் கஷ்டமாகிடும். என் பையன் சமீபத்தில் கணக்குப் பரீட்சையில் கம்மியா மார்க் வாங்கியிருந்தான். அதை பார்த்துட்டு, ‘‘ஒண்ணும் பிரச்சினை இல்லை. அடுத்த முறை நல்லாப் பண்ணு’’ன்னு சொன்னேன்.
இப்போ ஒரு விஷயம் எனக்கு ஞாபகத்துக்கு வருது. இதை யாரோ ஒரு பெரிய ஆளு சொன்னதா ஞாபகம். ‘ஒவ்வொரு முறை நடக்கும் சின்னச் சின்ன தேர்தல்ல போட்டியிட்டு வரிசையா தோல்வியை சந்தித்துக்கொண்டே வந்த அவர், கடைசியில பிரெசிடென்ட் தேர்தல்ல ஜெயிச்சு அந்த நாட்டோட ஜனாதிபதியாகிட்டார்’. ஒருவேளை அவர் சின்னச் சின்ன தேர்தல்ல நின்னப்போ ஜெயிச்சிருந்தார்னா அந்த சின்ன பதவியிலேயே நின்னுருப்பார். பிரெசிடென்ட்டா ஆகியிருக்க முடியாது. ஒருத்தர் பெரிய அளவுல ஜெயிக்கிறதுக்கு தோல்விங்களும் காரணமா அமையலாங்கிறதுக் காக இதை இங்கே சொல்லத் தோணுச்சு.
என்னோட முதல் படம் ‘நுவ்வொஸ் தாவன்டே நேனொத்துன்டானா’ பெரிய அளவில் ஹிட். அடுத்த படம் ‘பவுர்ணமி’ சரியா போகலை. அதுக்கு அடுத்து எடுத்த ‘போக்கிரி’ நல்லாப் போச்சு. வெற்றி, தோல்வின்னு இரண்டையும் மாறி மாறித்தான் பார்த்துட்டு வர்றேன்.
ஒண்ணு இல்லையா? ரெண்டு. ரெண்டும் இல்லையா பத்து. அதுவும் இல்லையா நூறு. ஏன் ஆயிரம் வரைக்கும் வாய்ப்புகள் இருந்துக்கிட்டே இருக்கும். ஆனா, நாம் தொடர்ந்து ஓடிட்டே இருக்கணும். தோல்வியைப் பார்த்து நின்னுடக் கூடாது.
எல்லாருக்கும் ஹேப்பி தீபாவளி! எந்த ஊர்ல இருந்தாலும் தனியா கொண்டாடாம அம்மா, அப்பாகிட்டப் போய்… ஜாலியா சேர்ந்து கொண் டாடுங்க!
- இன்னும் சொல்வேன்…
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago