சுதந்திரப் போராட்ட புரட்சி வீரர்
இந்திய விடுதலை இயக்க ஆயுதப் புரட்சிக் குழுக்களின் தந்தை எனப் போற்றப்படும் வாசுதேவ் பல்வந்த் பட்கே (Vasudev Balwant Phadke) பிறந்த தினம் இன்று (நவம்பர் 4). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* மகாராஷ்டிர மாநிலம் ராஜ்கோட் அருகே ஷிர்தான் என்ற கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் (1845) பிறந்தார். சிறுவயது முதலே மல்யுத்தம் உள்ளிட்ட உடற்பயிற்சி சாகசங்களில் நாட்டம் கொண்டிருந்தார்.
* கல்யாண், புனே நகரங்களில் உயர்நிலைக் கல்வி வரை பயின்றார். புனேயில் ராணுவ கணக்குத் துறை எழுத்தராக 15 ஆண்டுகள் பணிபுரிந்தார். அப்போது ஆங்கில ஆட்சியின் அநியாயங்களை நேரில் கண்டு குமுறினார். புரட்சி வீரர் லாஹுஜி வஸ்தாத் சால்வேயுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் வாயிலாக, சுதந்திரத்தின் அவசியத்தை உணர்ந்தார்.
* மராட்டிய புரட்சி வீரர் மகாதேவ கோவிந்த ரானடேயின் சொற்பொழிவு களைக் கேட்டார். ஆங்கில ஆட்சியில் இந்திய நாட்டின் பொருளா தார வளம் சுரண்டப்படுவதை உணர்ந்தார். இந்த நிலையை மாற்ற உறுதிபூண்டார். ‘ஐக்கிய வர்த்தினி சபா’ என்ற அமைப்பை 1870-ல் தொடங்கி, இளைஞர்களுக்கு விடுதலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அவர்களுக்கு கல்வி கற்பித்தார்.
* மகாராஷ்டிரா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடையே சுதந்திரக் கனலை மூட்டினார். காட்டில் உடற்பயிற்சி மையம் தொடங்கி, 300 இளைஞர்களுக்குத் துப்பாக்கி சுடுதல், குதிரையேற்றம், தற்காப்பு உத்திகளைக் கற்றுக்கொடுத்து ஆயுதப் படைக்குழுவை உருவாக்கினார்.
* சுதந்திரத்துக்குப் போராடவும், ஏழைகளுக்கு உதவவும் இக்குழுவின ரின் உதவியுடன் பண முதலைகளிடம் கொள்ளையடித்தார். வெள்ளையரின் கஜானாக்களைக் கொள்ளையடித்து ஆங்கில அரசை அதிரவைத்தார். மகாராஷ்டிரா முழுவதும் இந்தப் படை பிரபலமடைந்தது. பால கங்காதர திலகர் இவரது பாசறையில் பயிற்சி பெற்றவர்.
* தாய் மரணப் படுக்கையில் இருந்தபோது, விடுப்பு மறுக்கப்பட்டதால், அரசுப் பணியில் இருந்து விலகினார். முழுமூச்சுடன் சுதந்திரப் போராட்டத்தில் இறங்கினார். 1875-ல் பஞ்சத்தைப் போக்க ஆங்கில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அரசுக் கருவூலங்களைக் கொள்ளையடித்து மக்களுக்கு உதவினார்.
* அரசு ஆத்திரமடைந்தது. இவரது புரட்சிப் படையின் தளபதியைக் காவலர்கள் சுட்டுக் கொன்றனர். இவரையும் பிடிக்க அரசு வலை விரித்தது. தப்பித்து சைலம் சென்றவர், அங்கு 500 இளைஞர்களைத் திரட்டி, பயிற்சி அளித்து இன்னொரு படையை உருவாக்கினார்.
* இவரைப் பிடித்துத் தருபவர்களுக்கு சன்மானம் அறிவிக்கப்பட்டது. பம்பாய் மாகாண ஆளுநரைப் பிடித்துக் கொடுப்பவருக்கு சன்மானம் அளிப்பதாக இவரும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். ஆங்கிலப் படையின் கண்ணில் படாமல் ஹைதராபாத் வந்தார். அங்கும் புரட்சிப் படைக்கு ஆள் திரட்டினார்.
* நிஜாம் அரசின் காவலர்களோடு ஆங்கிலேய அரசின் காவலர்களும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் 1879-ல் கைது செய்யப்பட்டார். இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 1883-ல் சிறையில் இருந்து தப்பினார். விரைவில் மீண்டும் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு சித்ரவதைக்கு ஆளானார். இதைக் கண்டித்து உண்ணாவிரதம் தொடங்கினார்.
* இந்திய சுதந்திரத்துக்கான ஆயுதப் போராட்டத்துக்கு வித்திட்ட புரட்சி வீரர் வாசுதேவ் பல்வந்த் பட்கே, தொடர் உண்ணாவிரதத்தால் சிறையிலேயே (1883) உயிர் நீத்தார். அப்போது அவருக்கு வயது 38.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago