பாரதிய வித்யா பவனில் அந்தப் பொன்மாலைப் பொழுதில் தீபா வளி கொண்டாட்டம். அரங்கில் வெவ்வேறு வயதில் பார்வையற்றோர் சுமார் 150 பேர் இருந்தனர். தவிர, ஹாலை நிரப்பிய பொதுஜனம்.
மேடையில் நாமசங்கீர்த்தனம் நடந்து கொண்டிருந்தது. முன்னால் ஐந்தாறு சிறுமிகள். இவர்கள் பாட, பார்வையாளர் களும் உடன் சேர்ந்து கிருஷ்ண நாமம் சொன்னார்கள்.
அது முடிந்து, திரை இறங்கி ஏறியபோது, மேடையில் பியானோவுடன் அனில் சீனிவாசன். பக்கவாத்தியமாக கஞ்சிராவுடன் பி.எஸ்.புருஷோத்தமன். பிரவீண்குமார் மிருதங்கம்.
சுதா ராஜாவின் மாணவிகள் இரண்டு பாடல்கள் சேர்ந்து இசைத்ததும், இளம் பாடகர் அஷ்வத் நாராயணன் வந்து உட் கார்ந்தார். ‘இது கஞ்சிரா…’, ‘இது மிருதங் கம்…’ என்று கருவிகளையும், கலை ஞர்களையும் அறிமுகப்படுத்தினார் அனில். தொடர்ந்து ‘‘பாடகர் அஷ்வத் அண் ணனுக்கு எல்லோரும் தீபாவளி வாழ்த்து சொல்லுங்க…’’ என்று அவர் கேட்டுக் கொள்ள, குழந்தைகள் கோரஸாகக் குரல் கொடுத்தார்கள்.
மகாகவியின் ‘சின்னஞ்சிறு கிளியே…’ பாடலை அஷ்வத் பாடி முடித்தபோது, அந்த 150 பேரின் கைத் தட்டல்கள் தனியாகக் கேட்டன. அடுத்து, கிருஷ்ணர் மீது நாராயண தீர்த்தர் பாடியிருக்கும், ‘மாதவ மாமவ தேவா…’ பாடல்.
இப்போது மேடையில் கையில் மைக்குடன் கார்த்திக் குமார். இரண்டு மீன்கள், ஒரு தவளையின் கதையை இவர் ஆங்கிலத்திலும், மெட்ராஸ் தமிழிலும் கலந்துகட்டி சொல்லிவிட்டுப் போக, குழந்தைகளுக்கு குதூகலம்.
‘இரக்கம் வராமல் போனதென்ன கார ணம்…’ மற்றும் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை…’ பாடல்களை அளவுக்கு அதிக மான சங்கதிகளுடன் பாடிவிட்டுச் சென்றார் பரத் சுந்தர். மறந்துவிட்டதே, இவருக்கு முன் னால் இரண்டு, மூன்று இந்திப் பாடல் களைப் பாடி மகிழ்வித்தார் வேதாந்த் பரத்வாஜ். பாடிய அனைவருடனும் இணைந்து, பியானோ இசைத்து இனிமை கூட்டினார் அனில் சீனிவாசன்.
‘‘இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எந்தக் கலைஞருமே பணம் எதுவும் வாங் கிக்கொள்ளவில்லை. தேங்காய் மூடி கூட கிடைக்காது என்று நான் முன்கூட்டியே சொன்னபோது, எந்த மறுப்பும் அவர்கள் சொல்லவில்லை. ஒரு சிலர், தாங்கள் ஏற்கெனவே ஒப்புக்கொண்டிருந்த நிகழ்ச் சியை ரத்து செய்துவிட்டு வந்திருந்தார் கள்…’’ என்று நெகிழ்ந்தார் அனில்.
அன்றைய தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியை சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள ‘ஞான தர்ஷன் சேவை அறக்கட்டளை’ ஏற்பாடு செய்திருந்தது. வந்திருந்த மாற்றுத்திறனாளிகளில் அநேகம் பேர் இந்த அறக்கட்டளை நடத்தும் இல்லத்தில் இருந்து வந்திருந்தார்கள்.
அறக்கட்டளையின் நிறுவனர் சி.சுந்தரேசன். இவரும் பார்வை பெரு மளவு பாதிக்கப்பட்டவர். 41 வயதுக்காரர். ஆறாவது படிக்கும் வரை இவருக்கு பார்வையில் எந்தக் கோளாறும் இருக்க வில்லை. திடீரென்று பாதிப்பு. மூன்று வருடங்கள் எதுவும் செய்ய இயலவில்லை. பின்னர், சங்கர நேத்ராலயாவின் உதவி யுடன் அடையாறில் உள்ள பார்வையற்ற வர்களுக்கான பள்ளியில் சேர்ந்திருக் கிறார். பள்ளிக்கூட நாட்களில், மாற்றுத்திற னாளிகளுக்கான பிரிவில் ‘ஜாவலின் த்ரோ’ விளையாட்டில் தேசிய சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார் சுந்தரேசன். படிப்பும் தொடர்ந்திருக்கிறது. ஆங்கில இலக்கியத்தில் பட்டதாரியானார்.
ஆக, பார்வை இழந்தவர்களின் வலியை முழுவதும் உணர்ந்தவர் இவர். இதன் பாதிப்புகளை சுயமாக அனுபவித்தவர். தன்னைப் போலவே பாதிப்புக்கு உள்ளானவர்களுக்காக ‘ஞான தர்ஷன்’ அறக்கட்டளையைத் தொடங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் 35 பேருக்கு இவருடைய இல்லம் அடைக்கலம் கொடுத் திருக்கிறது. இவர்களுக்கு கோடைக்கால முகாம் நடத்துகிறார். ஆங்கிலமும், இந்தி யும் பேசுவதற்கு வகுப்புகள் ஏற்பாடு செய்திருக்கிறார். இசையும் இங்கே கற்றுத் தருகிறார்கள்.
‘ஞான தர்ஷன்’ அறக்கட்டளை தற்போது வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. பல தரப்புகளில் இருந்து நிதி வந்து சேரும்போது சொந்தக் கட்டிடத்துக்கு மாறுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.
நேற்று முன்தினம் நடந்த பாரத் சங்கீத உற்சவம் தொடக்க விழாவில் சுதா ரகுநாத னின் சமுதாய அறக்கட்டளை சார்பாக ஞான தர்ஷனுக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டது. இதற்கு பாலமாக அமைந்தவர் அனில்!
இந்த சிறுதுளி... பெருவெள்ளமாக பெருக வேண்டும்.
அன்றைய பாரதிய வித்யா பவன் நிகழ்ச்சியில் தீபாவளியையொட்டி ‘ஒலி வெளிச்சம்’ பரவவிட்ட சுந்தரேசனுக்கு கனவுகள் பல உண்டு. எல்லாமே சேவை மனப்பான்மையுடன் கூடிய கனவுகள்!
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
8 hours ago
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago