உலக புகழ்பெற்ற பிரெஞ்சு படைப்பாளி
இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்ற பிரெஞ்சு படைப்பாளி ஆன்ரே ஜிதே (Andre Gide) பிறந்த தினம் இன்று (நவம்பர் 22). அவரைப் பற்றிய அரிய முத்துகள் பத்து:
* பாரீஸில் பிறந்தவர் (1869). தந்தை, பாரீஸ் பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியராகப் பணியாற்றினார். பள்ளியில் சேர்க்கப்பட்ட பிறகு, உடல்நிலைப் பாதிக்கப்பட்டதால் அங்கு படிப்பைத் தொடர முடியவில்லை. 11 வயதில் தந்தை காலமானார். தாய் ஏற்பாடு செய்த ஆசிரியர்களிடம் ஆரம்பக் கல்வி கற்றார்.
* மிகவும் தனிமையான சூழலில் வளர்க்கப்பட்ட இவர், சிறு வயதிலேயே வாசிப்பதிலும் எழுதுவதிலும் மும்முரமாக ஈடுபட்டார். தேவையில்லாத விஷய அறிவைத் திணிக்கும் கல்வி, பல்வேறு சமூகத் தடைகள் ஆகிய சூழலுக்கிடையே, அறிவுசார் நேர்மை யைத் தக்கவைக்க தொடர் முயற்சிகளை மேற்கொண்டார்.
* இந்த முனைப்பு, இவரது ஆளுமையிலும் படைப்புகளிலும் வெளிப்பட்டதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இவரது 21-வது வயதில் ‘நோட்புக்ஸ் ஆஃப் ஆன்ரே வால்டர்’ என்ற முதல் நாவல் வெளிவந்தது. இது நல்ல வரவேற்பைப் பெற்றது. 1908-ல் ‘தி நியு ஃபிரெஞ்ச் ரெவ்யு’ என்ற இலக்கிய இதழ் தொடங்கப்பட்டதில் முக்கிய பங்கு வகித்தார்.
* முதல் உலகப் போர் சமயத்தில் செஞ்சிலுவை சங்கத்தில் இணைந்து சேவை செய்தார். போருக்குப் பின் அகதிகளுக்கு முகாம்கள் ஏற்பாடு செய்யும் பணியிலும் ஈடுபட்டார். தனது படைப்பு களில், மக்களின் பிரச்சினைகளையும் வாழ்க்கை நிலவரங் களையும் உளவியல் சார்ந்த உள்ளுணர்வுடன் வெளிப்படுத்தினார்.
* சமூக நீதி குறித்து ஏராளமாக எழுதினார். சமூக முகமூடிக்குள் மறைக்கப்பட்டிருக்கும் மனிதனின் உண்மையான உருவத்தை இவை பிரதிபலித்தன. 1920-களில் உலகப் புகழ்பெற்ற ஆல்பர்ட் காமஸ் மற்றும் ஜீன் பால் உள்ளிட்ட பல படைப்பாளிகளுக்குத் தூண்டுகோலாக இருந்தார்.
* இவரது பல நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. ‘இஃப் இட் டை’, இவரது வாழ்க்கை வரலாற்று நூல். 1925-க்குப் பிறகு தண்டனை பெற்ற குற்றவாளிகள் மனிதாபிமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். 1926-ல் ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.
* அவற்றைக் குறித்து, டிராவல்ஸ் இன் தி காங்கோ, ரிட்டர்ன் ஃபிரம் சாட் மற்றும் இவரது மாஸ்டர் பீஸ் எனப் போற்றப்பட்ட ‘தி இம்மார்டலிஸ்ட்’, ‘தி கவுன்டர்பீடர்ஸ்’, ‘தி நியு ஃபிரெஞ்ச் ரெவ்யு’உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். ஆப்பிரிக்க மக்களின் கடும் உழைப்பை பிரெஞ்சு நிறுவனங்கள் சுரண்டியது குறித்து எழுதினார். காலனி ஆதிக்க எதிர்ப்பு இயக்கங்களில் முக்கியமான தாக்கத்தை இது ஏற்படுத்தியது.
* பிரான்சின் பாரம்பரிய எழுத்தாளர்களின் நூல்கள் அனைத்தும் கிடைக்கச் செய்வதற்காகத் தொடங்கப்பட்ட தனிப்பெருமைக்குரிய பதிப்பகத்தின் ‘பிப்லியோதேக் டி லா ப்ளீயட்’ என்ற இதழில், படைப்பாளியின் வாழ்நாளிலேயே அவரது படைப்பு இடம்பெற்ற முதல் எழுத்தாளர் இவர்தான்.
* ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தின் படைப்பாளிகளுடனும் தொடர்பு கொண்டிருந்தார். லத்தீன், ஃபிரெஞ்ச், ஆங்கிலம், ஜெர்மனி உள்ளிட்ட மொழிகளை அறிந்திருந்தார். தலைசிறந்த உரைநடை எழுத்தாளரான இவர், நாவல்கள், நாடகம், மொழிபெயர்ப்பு, இலக் கிய விமர்சனம், கடிதங்கள், கட்டுரைகளும் எழுதினார்.
* 1942-ல் ஆப்பிரிக்கா சென்ற இவர், துனிஸ் நகரில் இரண்டாம் உலகப் போர் முடியும் வரை தங்கியிருந்தார். 1947-ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றார். 20-ம் நூற்றாண்டின் முக்கிய படைப்பாளிகளுள் ஒருவராகப் போற்றப்பட்ட ஆன்ரே ஜிதே 81-வது வயதில் (1951) மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago