ஆன்டர்ஸ் செல்ஷியஸ் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

ஸ்வீடனைச் சேர்ந்த வானியலாளர், இயற்பியலாளர் மற்றும் கணிதவியலாளருமான ஆன்டர்ஸ் செல்ஷியஸ் (Anders Celsius) பிறந்த தினம் இன்று (நவம்பர் 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ஸ்வீடனில் உப்சாலா என்ற இடத்தில் பிறந்தவர் (1701). தந்தை உப்சாலா பல்கலைக்கழகத்தில் வானியல் பேராசிரியர். எனவே இவர் இயல்பாகவே கணிதம் மற்றும் அறிவியலில் திறமை பெற்றிருந்தார். சொந்த ஊரில் ஆரம்பக் கல்வி கற்றார்.

* அப்பா பேராசிரியராக இருந்த உப்சாலா பல்கலைக்கழகத்திலேயே இவரும் அறிவியலை முதன்மைப் பாடமாகப் படித்தார். 1730-ல் அதே பல்கலைக்கழகத்தில் வானியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அங்கு பல ஆய்வுகளிலும் ஈடுபட்டார்.

* பூமியிலிருந்து சூரியன் இருக்கும் தொலைவை அளப்பதற்கான புதிய முறை தொடர்பான ‘நோவா மெத்தடஸ் டிஸ்டான்டியம் சொலிஸ் ஏ டெர்ரா டிடர்மினன்டி’ என்ற ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். சூரிய உதயம் (auroral phenomena) குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டார். புவிமுனைச் சுடர்வு நிகழ்வு குறித்துப் பிற விஞ்ஞானிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்.

* வடமுனைச் சுடர்வுக்கும் (aurora borealis) புவி காந்தப் புல மாற்றங்களுக்கும் உள்ள தொடர்பை முதலில் கூறியவர் இவர்தான். வலிமையான இந்தச் சுடர்வுச் செயல்பாட்டின்போது, காந்த ஊசிகள் பெரிய அளவில் விலக்கமடைவதை இவர் கண்டார்.

* 1730களில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். அப்போது புகழ்பெற்ற பல வானியலாளர்களுடன் இணைந்து பணிபுரிந்தார். 1736-ல் ‘ஃபிரான்ஸ் அகாடமி ஆஃப் சயின்சஸ்’ ஏற்பாடு செய்த அட்சரேகையின் கோணத்தை அளவிட உருவாக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றார். பூமியின் வடிவத்தைத் தீர்மானிப்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்ட இவர், 1738-ல் ‘டி அப்சர்வேஷனிபஸ் ப்ரோ டெல்லுரிஸ் டிடர்மினன்டா’ என்ற நூலை வெளியிட்டார்.

* புதிய வானியல் கண்காணிப்பு நிலையம் ஒன்றை உருவாக்குவதற்காக ஏராளமாக நிதி திரட்டினார். 1741-ல் உப்சாலா வானியல் ஆய்வகத்தை நிறுவினார். அங்கு தான் மேற்கொண்ட நீண்ட ஐரோப்பியப் பயணத்தின்போது மிகவும் பாடுபட்டுச் சேகரித்த புத்தம் புதிய தொழில்நுட்பத்தாலான வானியல் கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்தினார்.

* சில குறிப்பிட்ட நட்சத்திரங்களின் பிரகாசத்தை அளக்க முதன் முதலாக வண்ணக் கண்ணாடித் தட்டுகளைப் பயன்படுத்தினார். அதுவரை வெற்றுக் கண்களால்தான் இவை மதிப்பிடப்பட்டு வந்தன.

* மேலும் ஒளிமறைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வானியல் ஆய்வு தொடர்பான கருவிகளை உருவாக்கினார். வெப்பநிலையை அளக்க 1742-ல் ஒரு அளவுகோலை உருவாக்கினார். இது முதலில் ‘ஸ்வீடிஷ் தெர்மாமீட்டர்’ எனக் குறிப்பிடப்பட்டது. பின்னர், அது இவரது பெயராலேயே உலகம் முழுவதும் ‘செல்சியஸ் அளவுகோல்’ என்று குறிப்பிடப்படுகிறது.

* ஸ்வீடன் நாட்டுப் பொது நில வரைபடத்தை உருவாக்கப் பல புவிபரப்பு அளவீடுகளைக் கண்டறிந்தார். 1941-ல் ‘அரித்மேடிக்ஸ் ஃபார் தி ஸ்வீடிஷ் யூத்’ என்ற நூலை வெளியிட்டார். ஸ்வீடன் அரசு அறிவியல் கல்விக் கழகத்தின் உறுப்பினராகவும் செயல் பட்டார். வானியலில் கிரகணங்கள் மற்றும் பல்வேறு வானியல் பொருள்களைக் குறித்தும் கண்காணிப்புகளை மேற்கொண்டார்.

* இவரது மரணத்துக்குப் பிறகு வானியல் குறித்து இவர் எழுதி வைத்திருந்த ஏராளமான ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. 18-ம் நூற்றாண்டின் தலைசிறந்த வானியலாளர்களில் ஒருவரான ஆன்டர்ஸ் செல்ஷியஸ் 1744-ம் ஆண்டு காசநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்