ஓட்டுநர் உரிமம் பெற என்ன செய்ய வேண்டும்?

By கி.பார்த்திபன்

வாகன ஓட்டுநர் உரிமம் தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார் நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் எஸ்.வேலுசாமி.

# வாகன ஓட்டுநர் உரிமம் பெற என்னென்ன சான்றுகள் தேவை?

இருப்பிடச் சான்றாக குடும்ப அட்டை, எல்.ஐ.சி. பாலிசி சான்று, வயதுச் சான்றாக பள்ளி மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) போன்ற அரசு வழங்கிய சான்றுகள், பாஸ்போர்ட் அளவில் 3 புகைப்படங்களுடன் பழகுநர் உரிமம் (எல்.எல்.ஆர்.) பெறுவதற்கு ‘படிவம் 2’-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

50 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மருத்துவச் சான்றிதழுடன் ‘படிவம் 1’-ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும். மேலும், இரு சக்கர வாகன பழகுநர் உரிமம் பெற ரூ. 30-ம், அதனுடன் சேர்த்து நான்கு சக்கர வாகன பழகுநர் உரிமம் பெற ரூ. 60-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.

# பழகுநர் உரிமம் பெற்று எத்தனை மாதங்களுக்குள் ஓட்டுநர் உரிமம் பெறலாம்?

பழகுநர் உரிமம் 6 மாதம் வரை செல்லுபடியாகும். பழகுநர் உரிமம் பெற்று, ஒரு மாதத்துக்கு பின்னரே ஓட்டுநர் உரிமம் பெற முடியும். ஒரு மாத கால இடைவெளி, வாகனங்களை நன்றாக ஓட்டிப் பழகுவதற்காக வழங்கப்படுகிறது. பழகுநர் உரிமம் பெறும்போது, வாகனத்தை ஓட்டிக் காட்டுவதோடு சாலை விதிகள் குறித்த கேள்விகளுக்கும் சரியான பதில் அளிக்க வேண்டும்.

# மாற்றுத் திறனாளிகள் ஓட்டுநர் உரிமம் பெறமுடியுமா?

மாற்றுத் திறனாளிகளின் உடல் சார்ந்த பிரச்சினைக்கு ஏற்ப அவர்கள் எளிதில் இயக்கும்படி வாகனம் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். நடக்க இயலாத மாற்றுத் திறனாளிகள் இரு சக்கர வாகனங்களை இயக்க கூடுதல் சக்கரங்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகள் பின்னால் வரும் வாகனங்களின் ஒலியைக் கேட்க இயலாது என்பதால் அவர்களது வாகனத்தின் டேஷ் போர்டு சிக்னல் காண்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த வாகனம் சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளி பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மாற்றுத் திறனாளிகள் வாகன ஓட்டுநர் உரிமம் பெறலாம்.

# ஓட்டுநர் உரிமத்தின் கால அளவு எத்தனை ஆண்டுகள்?

அது வயதை பொருத்தது. ஒருவர் 20 வயதில் ஓட்டுநர் உரிமம் பெற்றால் அவருக்கு 40 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். பின்னர், புதுப்பிக்க 20 ஆண்டு கால அளவு வழங்கப்படும். 39 வயதில் ஒருவர் ஓட்டுநர் உரிமம் பெற்றால் ஓர் ஆண்டு வரை- அதாவது 40 வயது வரை மட்டுமே உரிமம் வழங்கப்படும். 40 வயதுக்கு பின்பு ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். அதற்கு ரூ.250 கட்டணம்.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

16 hours ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

3 days ago

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

மேலும்