‘காமாதி ரிபுவிதாரிகி ஹிரிகி
ஸாமாதி நிகமசாரிகி ஸூர்ய
ஸோமாக்ஷீநிகி த்யாகராஜ
ப்ரேமாவதாருநிகி கோஸல’
தியாகராஜரின் உற்சவ சம் பிரதாய கீர்த்தனைகளில் இடம்பெறும் ஆரத்தி பாடல் ஒன்றின் சரண வரிகள் இவை. இதில் காணப்படும் அழகையும், கவி நேர்த்தியையும் பார்க்கும் போது, சமகாலத்தவராக இருந் திருந்தால் பாப் டிலன் மாதிரி தியாகராஜருக்கும் நோபல் பரிசு கிடைத்திருக்கும் என்று தோன்று கிறது. கூடவே சர்ச்சைகளும் கிளம்பியிருக்கும்!
1767-ம் வருடம் பிறந்த ஜீனியஸ் தியாகராஜருக்கு இது 250-ம் ஜெயந்தி ஆண்டு. எம்.எஸ். சுப்புலட்சுமியின் நூற்றாண்டு விழா நேரத்தில் காணக் கிடைத்த மெகா கொண்டாட்டத்தில் கால் பங்கு கூட இந்த மகானின் ஜெயந்தி நேரத்தில் ஏனோ பார்க்க முடியவில்லை. இத்தனைக்கும் இன்றைய இசை கலைஞர்கள் பெரும்பாலும் இவருடைய பாடலைப் பாடித்தான் ஜெயம் கண்டு வருகிறார்கள்!
தியாகராஜரின் 250-ம் வருட ஜெயந்தியையொட்டி கடந்த ஞாயிறன்று மாலை Tag மையத் தில், அவர்களுடைய சவுத் இந்தியா ஹெரிடேஜ் புரொகிராம் வரிசையில் நடந்த சிறப்பு நிகழ்ச்சி யின்போது சிற்றரங்கம் நிரம்பி யது. மேடையில் இரண்டு மேஜை நாற்காலிகள். ஒன்றில், பிரபல பாடகி அருணா சாய்ராம். மற் றொன்றில், வரலாற்று ஸ்பெஷ லிஸ்ட் வி.ஸ்ரீராம். ஆக, ஒரே மேடையில் இரண்டு ராமர்கள்.
தியாகராஜர் கையாண்ட அபூர்வ ராகங்கள், ஒரே ராகத்தை பல்வேறு வழிகளில் அவர் பாடி யிருக்கும் ரஸவாதம். தன்னுடைய கீர்த்தனைகளில் சங்கீதம் குறித்த தன் தத்துவங்களை அவர் இணைத்த லாவகம் என்று சில அம்சங்களை இருவரும் சுவைபட அலசினார்கள். ஸ்ரீராம் விளக்க உரை கொடுக்க, பொருத்தமான பாடல்களை பக்கவாத்தியங்கள் எதுவுமின்றி சுருதிப் பெட்டியுடன் மட்டும் அருணா பாடி, கைத்தட்டல்களை வரவில் வைத்துக்கொண்டார்!
தியாகராஜரின் வாழ்க்கைக் கதையை ஆவணப்படத் திரைக் கதை மாதிரியாக மூன்றரை நிமிடங்களில் ‘நச்’ என்று விவரித்தார் ஸ்ரீராம். ‘‘சங்கீதத் தையே அவர் கடவுளாக வழி பட்டார். இசையும் ராமரும்தான் அவருக்கு கண்கண்ட தெய் வங்கள்’’ என்றார்.
‘‘சுவாமிகளுக்கு ஏழு ஸ்வரங் கள், வில்லில் கட்டப்பெற்ற மணிகள்… சிறப்புமிக்க ராகமே கோதண்டமெனும் வில்… கனம், நயம், தேசியம் ஆகிய மூவகை வேறுபாடுகள் அந்த வில்லின் நாண் கயிறாகவும், தாள கதிகள் அம்புகளாகவும், ரசம் நிரம்பிய சங்கதிகள் மொழிகளாகவும் அவருக்கு அமைந்தன…’’ என்று விளக்கிய அருணா சாய்ராம், ‘நாத ஸூதாரஸ…’ கீர்த்தனையை (ஆரபி ராகம்) பாடினார்.
‘‘உறக்கத்தை ஒழித்து, தம்புராவை அழகுடன் கையில் ஏந்தி, நிர்மலமான மனத்துடனும், அபஸ்வரம் இல்லாமலும், நியமம் தவறாமலும் தினமும் பாட்டுப் பயிற்சி செய்ய வேண்டும்…’’ என்ற விளக்கத்துடன், ‘கத்தநுவாரிகி…’ என்று தொடங்கும் தோடி ராகப் பாடலை அருணா பாடினார்.
மற்ற எந்தப் பாடலாசிரியரை யும் விட ஒரே பாடலில் அதிக சங்கதிகள் வைத்து பாடிய பெருமை தியாகராஜருக்கு மட் டுமே உண்டு என்றார் ஸ்ரீராம். தொடர்ந்து, ‘சக்கநி ராஜமார்கமு…’ பல்லவியில் மட்டுமே பதிமூன்று சங்கதிகள் இருப்பதை பாடி நிரூபித்தார் அருணா!
தோடி ராகத்தில் மட்டுமே 20 பாடல்களுக்கு மேல் பாடி யிருக்கிறார் தியாகராஜர். இப்படி ஒரு ராகத்தில் பல பாடல்கள் இயற்றுவது அவருக்கு கைவந்த கலை. பட்டணம் சுப்பிரமணி ஐயர் ஒருமுறை கல்யாணி ராகத்தில் பாடல் இயற்ற இரண்டு வருடங்கள் எடுத்துக் கொண்டாராம். அதற்கு அவர் கூறிய காரணம்: ‘‘தியாகராஜர் கல்யாணியில் பாடியிருக்கும் எல்லா பாடல்களையும் கேட்டு விட்டு, அவர், ‘கல்யாணி’களின் சாயல் இல்லாத கல்யாணியைப் பாடவேண்டும் என்பது என் விருப்பம்!’’
தொடர்ந்து, தியாகராஜரின் இசை நாடகங்கள் (opera) குறித்து கொஞ்சம் அலசல். அதா வது, பிரகலாத பக்தி விஜயம், சீதாராம விஜயம், நெளகா சரித்திரம் ஆகியவைப் பற்றி.
நிகழ்ச்சியை நிறைவு செய்யும் விதமாக, ‘மோக்ஷமு கலதா’வை சாரமதியில் அருணா சாய்ராம் கணீர் என்று பாடினார், சுமார் 80 வயது வரை வாழ்ந்த தியாகராஜர், ராம தரிசனத்துக்காகவே அல்லும் பகலும் உழைக்க, இறுதியில் மலை மீது நின்று ராமர் தரிசனம் தந்து அவரை 10 நாட்களில் அழைத்துக்கொள்வதாக சத்திய வாக்குக் கொடுக்க, தள்ளாத வயதில் தியாகராஜர் சந்நியாசம் பூண்டு, பகுள பஞ்சமி நாளன்று காவிரிக் கரையில் கிராம மக்கள் புடைச் சூழ அமர்ந்து ஜோதியுடன் கலந்து விடுவதை வர்ணித்தார் வி.ஸ்ரீராம்.
இந்த நிகழ்வுக்கு விரல் விட்டு எண்ணிவிடும் அளவுகூட வளரும் இளம் கலைஞர்கள் வரவில்லை. வளர்ந்துவிட்ட சீனியர்களும்கூட வரவில்லை. அன்றைய தினம் அவர்களுக்கு கச்சேரி இருந்திருக்கக் கூடும். அல்லது, அவர்கள் எல்லோ ருமே தியாகராஜரை ஏற் கெனவே கரைத்துக் குடித் திருக்கக் கூடும்!
அருணா சாய்ராம், வி.ஸ்ரீராம்
படங்கள்: ஜெகன் போட்டோஸ்
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
8 hours ago
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago