யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?

By சா.ஜெ.முகில் தங்கம்

திருமணம் முடிந்த புதிதில் அம்மா, உறவினர், நண்பர் என எல்லோரும் கேட்கும் கேள்வி ஏதாவது நல்ல செய்தி இருக்கா? அல்லது ஏதாவது விஷேசம் உண்டா? என்பதுதான்.

நாம் கூட பல திரைப்படங்களில் இந்த வசனம் இடம்பெறுவதைப் பார்த்திருப்போம். அதாவது தனது மகள் கருவுற்று இருக்கிறாளா? என்பதை அம்மாக்கள் நாசுக்காக கேட்கிற கேள்வியாம். இந்தக் கேள்வியை மையமாக வைத்துக் கொண்டு 3 நிமிடங்களுக்கு ஓடக்கூடிய Any Good News என்ற ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறார் சோபியா அஷ்ரப். இவர் ஏற்கெனவே கொடைக்கானல் வோன்ட் (Kodaikkanal Won’t) காணொளியில் பங்காற்றிய அதிர்வை ஏற்படுத்தியவர்.

யூனிலீவர்க்கு எதிராக சுற்றுச்சூழலுக்கு ஆதரவாக வரிகள் எழுதி பாடிய சோபியா, இந்தக் காணொளியில் பெண்களின் நிலையை உண்மையாகப் பதிவு செய்துள்ளார். பெண்கள் எவ்வளவுதான் சாதித்தாலும் அவர்கள் கருத்தரித்து குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை எனில் சமூகமும் சரி அப்பெண்ணின் குடும்பமும் சரி அவரது சாதனைகளை அங்கீகரிக்காது. ஏன் அவரது அம்மாவான மற்றொரு பெண்ணால் கூட இச்சாதனைகள் புறந்தள்ளப்படும் என்பதை தனக்கே உரிய பாணியில் சொல்லியுள்ளார் சோபியா அஷ்ரப். இந்த 3 நிமிடக் காணொளியில் அவரே பாடி நடித்துள்ளார்.

காணொளியின் ஆரம்பத்தில் அம்மா தன் மகளிடம் ஏதாவது நல்ல செய்தி இருக்கிறதா? என்று கேட்கிறார். அதற்கு அவரது மகள் அன்றாட வாழ்க்கையில் தனக்கு நேர்ந்த நல்ல விஷயங்களை தான் செய்து மகிழ்ந்த தருணங்களைக் கூற அவரது அம்மா மகள் கூறிய எதற்கும் பதில் பேசாமல் மறுபடியும் நல்ல செய்தி இருக்கிறதா? எனக் கேட்கிறார். இப்பொழுது மகளோ தனது அலுவலகம், பதவி உயர்வு பற்றியெல்லாம் சொல்கிறார். இவற்றையும் அவரது அம்மா கணக்கில் கொள்ளாமல் மறுபடியும் அதே கேள்வியைக் கேட்க இப்பொழுதோ சற்று ஆவேசமாக உலக அரசியல் பிரச்சினைகளிலும் அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் வறுமை ஒழிப்பிலும் தான் முக்கியப் பங்கெடுத்ததாக கூறும் மகள் ஆணாதிக்கத்தை முற்றிலும் ஒழித்ததாகவும் கூறுகிறார். இவை எல்லாவற்றிற்கும் அமைதியாக இருந்துவிட்டு மறுபடியும் அதே கேள்வியை அதே ஒலியில் கேட்கிறார் அவரது அம்மா.

அந்த நாசுக்கான கேள்விக்கு கடைசியாக இல்லை என்ற பதிலைச் சொல்கிறார் மகள். அந்தப் பதிலுக்கு அம்மாவின் முகபாவனை பாவம் நிறைந்ததாகவே இருக்கிறது. இந்தக் காணொளியானது இசை நாடகம் போன்றே இருக்கிறது, அவரது அம்மா கேட்கும் கேள்விகெளுக்கெல்லாம் தன்னிடம் உள்ள சின்ன கிடாரை இசைத்துக் கொண்டே பதிலைப் பாடலாகச் சொல்கிறார் மகள்.

உண்மையில் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் மகளிடம் தொடர்ந்து அந்த ஒரே கேள்வியையே கேட்கிறார் அம்மா. அப்பெண்ணின் அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கிறது? அலுவலகச் சூழல் எப்படி இருக்கிறது? உண்மையில் அவளுக்கன பிரச்சினைகள் என்ன? என்பதைப் பற்றி அறிந்துகொள்ள அவரது அம்மாவுக்கு ஆர்வம் இல்லை. அவரது ஆர்வம் எல்லாம் தனது மகள் கருத்தரித்துவிட்டாளா? இல்லையா? என்பதுதான். அப்படியே இல்லை என்ற பதில் வந்தபோது கூட தனது மகளுக்காக அவர் வருத்தப்படவும் இல்லை மாறாக பாவப்படுகிறார். நீ என்ன சாதித்து என்ன பயன்? என்பது போன்ற முகபாவனையை வெளிப்படுத்துவது அப்பெண்ணின் அத்தனை சாதனைகளையும் மகிழ்ச்சிகளையும் கேள்விக்குட்படுத்துகிறது.

தற்போதைய சூழலில் பெண்கள் வேலைக்குச் செல்வது, திருமணத்தில் தனக்குப் பிடித்தவரைத் தேர்ந்தெடுப்பது, பிடித்ததைப் படிப்பது என பல விஷயங்களிலும் சுதந்திரமாக செயல்பட்டு வருவதைப் பார்க்க முடிகிறது. உண்மையில் இவ்வாறு இருக்கும் பெண்களின் சதவீதமே குறைவாகத்தான் உள்ளது.

இத்தகைய பெண்கள் திருமண வாழ்க்கைக்குப் பின் அதே நிலையைத் தொடர முடிகிறதா? என்பதும் கேள்விதான். இது போன்ற நிலையில் பெண்கள் என்னதான் சாதித்தாலும் அவரது அங்கீகாரம் என்பது குழந்தையைப் பெற்றெடுப்பதில்தான் இருக்கிறது. பெண் என்பவள் முதலில் தாயாகத்தான் சமூகத்தில் சித்தரிக்கப்படுகிறார். அதன் விளைவே அவளுக்கு குழந்தை பிறந்தால்தான் அவளுக்கான் அங்கீகாரம் கிடைக்கும் என்பதும். பல பெண்களின் அம்மாக்களே இதனை செய்வது உண்டு. இவ்வளவு முக்கியமான கருத்தை கொஞ்சம் ஜாலியாக இந்தக் காணொளியில் காணலாம்.

இணைப்பு:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

17 days ago

வலைஞர் பக்கம்

17 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

27 days ago

வலைஞர் பக்கம்

28 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்