ஜான் பாட்டீஸ்ட் பெரன் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

நோபல் பரிசு பெற்ற பிரஞ்சு அறிஞர்

இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு அறிவியல் அறிஞர் ஜான் பாட்டீஸ்ட் பெரன் (Jean Baptiste Perrin) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 30). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

*பிரான்ஸ் நாட்டின் லீல் நகரில் (1870) பிறந்தார். ராணுவத்தில் பணியாற்றிய தந்தை, போரில் இறந்தார். அதன் பிறகு, குழந்தைகளைக் கஷ்டப்பட்டு வளர்த்தார் தாய். உள்ளூரில் ஆரம்பக் கல்வி பயின்ற பெரன், பாரீஸில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.

*கட்டாய ராணுவ சேவை திட்டத்தின் கீழ் ராணுவப் பயிற்சி பெற்றார். அப்போதுதான் இவருக்கு இயற்பியலில் ஆர்வம் பிறந்தது. பாரீஸில் உள்ள ஈகோவ் நார்மல் சுபீரியர் உயர்கல்வி மையத்தில் 1894 முதல் 1897 வரை ஆராய்ச்சி உதவியாளராக சேர்ந்தார். எதிர்மின் கதிர்கள், எக்ஸ் கதிர்கள் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டார்.

*கேதோடு கதிர்கள் இயல்பிலேயே எதிர் மின்னூட்டம் கொண்டவை என்பதை நிரூபித்தார். வாயுக்களின் மின் கடத்தும் திறன்மீது எக்ஸ்ரே கதிர்களின் தாக்கம் குறித்து ஆராய்ந்து, இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். ஒளிர்வு, ரேடியத்தின் சிதைவு, ஒலி உமிழ்வு, ஒலி கடத்தல் குறித்தும் ஆராய்ந்தார். எதிர்மின் கதிர்கள் காந்தப்புலத்தில் விலகல் அடைவதைக் கண்டறிந்தார்.

*பிரவுனியன் இயக்கம், மூலக்கூறு பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். துகள்களின் வெப்பநிலை, அளவு, இயக்கம் ஆகியவை குறித்த ஐன்ஸ்டீனின் கருத்துகளை ஆய்வுகள் மூலம் நிரூபித்தார். அணுக்கள், மூலக்கூறுகள் தொடர்பான ‘அவகேட்ரோ’ எண்ணுக்கான திடமான மதிப்பைக் கணக்கிட்டார்.

*ஐன்ஸ்டீனின் சமன்பாடுகளைப் பயன்படுத்தி, நீர் மூலக்கூறின் அளவைக் கண்டறிந்தார். பொருளின் அணுத்தன்மையை குறித்த அவரது விளக்கத்தையும் உறுதி செய்தார். இதற்காக 1926-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார்.

*அணுக்கள் தொடர்பான ‘லெஸ் ஆடம்ஸ்’ என்ற நூலை எழுதி 1913-ல் வெளியிட்டார். இதில் இவரது ஆய்வு விளக்கங்கள் மட்டுமல்லாமல் கதிரியக்க வேதியியல், கரும்பொருள் கதிரியக்கம், மூலக்கூறுகளின் முழுத்தன்மை ஆகியவற்றையும் விளக்கும் தகவல்களும் இடம்பெற்றன. இந்த நூல் பல ஐரோப்பிய மொழிகளி லும் மொழிபெயர்க்கப்பட்டது. பல பதிப்புகள் வெளியிடப்பட்டு ஏராளமாக விற்பனையானது.

*இதுதவிர, ஏராளமான கட்டுரைகள், நூல்களை எழுதியுள்ளார். பாரீஸ் பல்கலைக்கழகத்தின் இயல் வேதியியல் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின்னர் அத்துறையின் தலைவரானார்.

*‘பிளேஸ் ஆஃப் டிஸ்கவரி’ என்ற அறிவியல் அமைப்பை உருவாக் கினார். வானியல் நிபுணர்களுக்கான மிகப்பெரிய கண்காணிப்பு நிலையம் அமைப்பதில் பெரும் பங்காற்றினார். இவரது முனைப்பால் பல்வேறு அறிவியல் அமைப்புகள் உருவாகின.

*ஜூல் பரிசு, மேத்யூகி பதக்கம் உட்பட பல பரிசுகள், விருதுகள், பதக்கங்களைப் பெற்றுள்ளார். கல்கத்தா, நியூயார்க், மான்செஸ்டர், ஆக்ஸ்ஃபோர்டு உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின. பெல்ஜியம், ஸ்வீடன், ருமேனியா உள்ளிட்ட நாடுகளின் அறிவியல் அமைப்புகளின் உறுப்பினராகவும் செயல்பட்டார்.

*பிரான்ஸில் ஜெர்மனி 1940-ல் ஊடுருவிபோது, அமெரிக்கா தப்பிச் சென்றார். அங்கும் தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்ட ஜான் பாட்டீஸ்ட் பெரன் 72-வது வயதில் (1942) மறைந்தார். இவரது நினைவைப் போற்றும் வகையில் பிரான்ஸில் அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்