நெட்டிசன் நோட்ஸ்: முதல்வர் ஜெ. கையெழுத்து.. ரத்து.. கெத்து!

By க.சே.ரமணி பிரபா தேவி

தமிழக முதல்வராக மீண்டும் பதவியேற்ற ஜெயலலிதா விவசாய கடன் தள்ளுபடி, டாஸ்மாக் நேரம் காலை குறைப்பு, 500 சில்லறை மதுக்கடைகள் மூடல், மின் கட்டண சலுகை உள்ளிட்ட திட்டங்களில் முதல் கையெழுத்திட்டுள்ளார்.

முதல்வர் பதவியேற்பு விழாவில் திமுக பொருளாளர் ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்ட இடம் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. இதை நெட்டிசன்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?

>சு.மா .சாமி:

கடந்த 5 ஆண்டுகளில் 3 வது முறையாக முதல் அமைச்சர் பதவி ஏற்கும் ஜெ.

>அரசியல்வாதி™ ‏@sarcastictamizh

ஜெ பதவியேற்பு விழாவில் ஸ்டாலின் பங்கேற்றது அரசியல் நாகரீகம்!

அவருடைய இருக்கை ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டியது அரசியல் அநாகரீகம்!

>கெட்டவன்:

ஜெ கிட்ட ஒரு மாற்றம் தெரியுது. பார்த்து ரொம்ப நாள் ஆனதால அப்படி தெரியுதோ?

>Sivagangai Seemai:

கட்-அவுட் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெ. - பதவியேற்பு விழாவின் முதல் அதிரடி.

>அன்பு:

ஜெ.ஜெயலலிதா ஆகிய நான் .........

ஸ்டாலின் மனநிலை அப்ப எப்படி இருந்திருக்கும்னு நினைச்சு பாத்தாலே கலங்குதுப்பா ப்ச்ச்.!

>கட்டிட பொறியாளன் ;) ‏@karthishr

ஜெ. தனது அமைச்சர்களை ஜீரோக்களாக வைத்திருக்காமல் ஹீரோக்களாக வைத்திருக்க வேண்டும்

>அஜ்மல் ‏@iamajmalkhan

அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் வரை மின்சாரம் கட்டணம் ரத்து- ஜெ

வீட்டு ஓனர் சார், இனிமே யூனிட்க்கு 8 ரூபா கொடு, 10 ரூபா கொடுனு கேட்டு வருவீங்க?

>எவனோஒருவன்:

@kalaignar89 நீங்களே ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித்தலைவர் பதவியைத் தர தயாராக இல்லாதபோது ஜெ. முதல்வரிசை நாற்காலி தரவில்லை என கோபப்படுவது எவ்வகை நியாயம்?

>Rosster Shanto™ :

குடும்ப அரசியல் என்று பேசியவர்கள் எல்லாம் இன்று ஜெ. பதவி ஏற்பில் முதல் வரிசையில் உட்கார்ந்த சசிகலா குடும்பம் பற்றி என்ன சொல்ல போகிறார்கள்!

>நிவி மோக்கியா:

கட்-அவுட் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெ.

#வச்சுதானே ஆகணும் ஏன்னா சென்னை காட்டிய கோபம் அப்படி.

>சு.மா .சாமி:

ஜெ. பதவியேற்பு விழாவில் எம்.எல்.ஏ. என்ற முறையில், 18வது வரிசையில் அமர்ந்தது ஸ்டாலினுடைய அப்பழுக்கற்ற அரசியல் நாகரிகம்.

>ஈசன் ‏@troll_king_offi

ஜெ.வின் சாதனைப் பட்டியலில் ஒன்று, புதிதாக வழங்கமுடியாத ரேஷன்கார்டு.

பாவம் ஏழை தமிழக அரசு என்றார் அந்த ஏழை விவசாயி!

>காப்பி:

டாஸ்மாக் கடை காலை 12 மணி முதல் இரவு 10மணி வரை இயங்கும். முதற்கட்டமா 500 மதுக்கடைகள் மூடப்படும்- ஜெ.

இதுக்குதான் அம்மாவ நாங்க கெத்துங்குறோம்.

>The Freak:

என்ன தான் ஜெயா பிடிக்கலனாலும், அவங்க 'ஜெ.ஜெயலலிதா என்னும் நான்'னு சொல்றப்ப ஒரு கம்பீரம் இருக்கும்.

>பாலா:

தவ வாழ்வு பார்ட் 2 இனிதே ஆரம்பித்தது. #ஜெ.ஜெயலலிதாவாகிய நான்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

30 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்