திமுக தலைவர் கருணாநிதி பற்றி சாதி ரீதியாக விமர்சனம் செய்தது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மன்னிப்பு கேட்டுள்ளார்.
முதலில் வைகோவின் விமர்சனத்துக்கு தங்களின் கருத்துகளைத் தெறித்த நெட்டிசன்கள், அவர் மன்னிப்பு கேட்ட பிறகு, அதையொட்டிய பார்வையையும் பதிவு செய்யத் தவறவில்லை. அது தொடர்பான தொகுப்பு...
எந்த சப்பைக்கட்டும் இன்றி சில மணி நேரங்களில், பகிரங்கமாக மன்னிப்பு கோரிய ”வைகோ” செயல்கள், தவறுக்கும் மன்னிப்புக்குமான சரியான உதாரணம்!
வைகோ போன்ற ஒரு முதிர்ந்த அரசியல்வாதியிடம் இருந்து இப்படியொரு அநாகரிக பேச்சு என்பது மிகவும் தவறானது.! அதை உணர்ந்து மன்னிப்பும் கேட்டுவிட்டார்.
கலைஞர் பற்றி தவறாக பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார் வைகோ.
மன்னிப்பு கேட்டா கேப்டனுக்கு புடிக்காதே ...
வைகோ பேசியது தவறென உணர்ந்தார்; மன்னிப்பு கேட்டார். ஆனால் காமராசரை, இந்திராகாந்தியை, ராமதாஸை, சாதி ரீதியாக பேசிய கருணாநிதி மன்னிப்பு கேட்காததேன்?
எப்போ வைகோ மன்னிப்பு கடிதம் கொடுத்தாரோ அப்போவே அவர பத்தி விமர்சிக்குற அளவுக்கு திமுக தொண்டர்கள் கேவலமானவர்கள் அல்ல. #திமுகடா
வைகோ மன்னிப்பு கேட்டது முக்கிய விஷயமே. அப்படிப் பேசுவது பகிரங்க மன்னிப்பு கோருமளவு கேவலக் குற்றம் என்பதே உறைக்காத பலருக்கும் இது ஒரு திறப்பு.
வைகோவுடைய பிரச்சினையே காலத்திற்கும் நினைவுகொள்ளும்படியான அரசியல் தவறுகளை செய்வதுதான்.
தேமுதிக கட்சியையும் குழப்பி வைகோ எதிர்ப்பு அலையையும் ஏற்படுத்தி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்திருக்கிறார் கலைஞர்.. ஆனால் இந்த அரசியல் ராஜதந்திரமெல்லாம் ஏதோ ஒருவகையில் தனித்து பயணப்படும் அதிமுக இமேஜை உயர்த்துவதில்தான் முடியுமோ என டவுட்டா இருக்கு...
எது எப்பிடியோ... டெஸ்ட் மேட்ச் மாதிரி இருந்த அரசியல் களம் 20 - 20 மாதிரி ஆகிட்டு இருக்கு. கொள்கை, நேர்மை, கடந்த கால போராட்டம் என்பதெல்லாம் போய் அந்தந்த நேரத்து நிலைப்பாடுகளே இப்போதெல்லாம் முக்கியமாகிட்டு இருக்கு.. பாக்கலாம்.. கடைசி அஞ்சு ஓவர்ல யார் எப்பிடி ஆடுறாங்கனு...! #அரசியல்20-20
சந்திரகுமார் விஷயம் எந்த டிவியிலும் வரவில்லை. வைகோ விமர்சனம் / மன்னிப்புதான் செய்தி.
இதுதான் கிரேக்க அரசியல் சாணக்கியத்தனம். ஒரு சின்ன கோட்டை மறைக்க அதுக்கு பக்கத்துலேயே ஒரு பெரிய கோட்டை போட்டுடனும்.
வைகோ திட்டினார். மன்னிப்பு கேட்டார். முடிஞ்ச்சு.
கலைஞர் யோக்கியமா? அவரும் நிறைய திட்டிருக்காருன்னு இவங்கதான் கேவலமா திட்டிட்டு இருக்காங்க
எவன் ஒருவன் தன்னைத்தானே தாழ்த்தி கொள்கிறானோ அவனே உயர்த்தப்படுவான்....பைபிள்...
வைகோ அவர்களே!! நீங்கள் உயர்த்தப்படுவீர்கள்... #ThisTime4MNK
கடந்த நாற்பதாண்டுகளாக தமிழக அரசியல் சூழலை கவனித்து வருபவன் என்ற முறையில் அழுத்தமாக சொல்ல விரும்புகிறேன். வேறு எந்தத் தலைவரும் தன் தவறான பேச்சுக்காக இப்படி உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்டதில்லை. வைகோ நல்ல முன்னுதாரணம் ஏற்படுத்தியிருக்கிறார். இந்தப் பக்குவம் அவருக்கு நீடிக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்.
வைகோ மன்னிப்பு கேட்டுட்டாரு.. வைகோவை திட்டுனவங்க எல்லாம் மன்னிப்பு கேட்டு உங்க கட்சி நாகரிகத்தைப் பறைசாற்றுங்க பார்ப்போம்...
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
30 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago