அமெரிக்க முன்னாள் அதிபர்
அமெரிக்க முன்னாள் அதிபரும், ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கிய தலைவர்களில் முக்கியமானவருமான தாமஸ் ஜெஃபர்சன் (Thomas Jefferson) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலம் ஷேட்வில் நகரில் (1743) பிறந்தார். விவசாயத் தொழில் செய்த தந்தை, சர்வேயராகவும் இருந்தார். ஜெஃபர்சன் அதே ஊரில் 9 வயதில் ஆரம்பக் கல்வி கற்றார். குதிரை சவாரியும் கற்றார். 11 வயதில் தந்தையை இழந்தார்.
# சிறு வயது முதலே புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். ஒரு ஆசிரியரிடம் வரலாறு, அறிவியல், தொன்மையான மொழிகள் கற்றார். 16 வயதில் கல்லூரியில் சேர்ந்து, கணிதம், மாறாநிலைவாதம், தத்துவம் பயின்றார். பிரெஞ்ச், கிரேக்கம், லத்தீன் மொழிகளில் நிபுணத்துவம் பெற்றார். வயலின் கற்றார்.
# ஜார்ஜ் வித் என்ற வழக்கறிஞரிடம் 5 ஆண்டுகள் சட்டம் பயின்ற பிறகு, 1767-ல் வழக்கறிஞராக உரிமம் பெற்றார். விடுதலையை விரும்பும் அடிமைகளின் வழக்குகளை ஏற்று நடத்தினார். திறமையாக வாதாடி, சிறந்த வழக்கறிஞர் என்று பெயர் பெற்றார். மாஜிஸ்திரேட், மாவட்ட துணை அதிகாரி, வர்ஜீனியா சட்டமன்ற உறுப்பினர். வர்ஜீனியா மாநில ஆளுநர் என்று படிப்படியாக உயர்ந்தார்.
# ஏராளமான நூல்களைப் படித்தார். தான் படித்த மற்றும் தந்தை கொடுத்த நூல்களைப் பாதுகாத்து 1770-ல் நூலகம் அமைத்தார். அந்த புத்தகங்கள் ஒரு தீ விபத்தில் நாசமாகின. மனம்தளராத ஜெஃபர்சன் மீண்டும் 1,250 நூல்களைத் திரட்டி நூலகம் அமைத்தார். 40 ஆண்டுகளில் நூல்களின் எண்ணிக்கை 6,500 ஆக அதிகரித்தது. ‘‘புத்தகங்கள் என் சுவாசம். அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
# கான்டினென்டல் காங்கிரஸ் உறுப்பினராக 1775-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க சுதந்திர பிரகடனத்தை (Declaration of Independence) எழுதுவதற்கான குழுவுக்கு 33 வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க சுதந்திர பிரகடனத்தை எழுதிய முதன்மை ஆசிரியர் இவர்தான்.
# பிரான்ஸில் அமெரிக்க தூதராக 3 ஆண்டுகள் பணியாற்றினார். அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் இவரை முதலாவது மாநிலச் செயலராக நியமித்தார். அமெரிக்காவின் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
# அமெரிக்காவின் 3-வது அதிபராக 1800-ல் பதவியேற்றார். 1809 வரை இப்பதவியில் நீடித்தார். இவரது ஆட்சிக் காலத்தில், பிரான்ஸிடம் இருந்து லூசியானா பெறப்பட்டது.
# ஜனநாயகக் கொள்கைகளில் அதிக பற்று கொண்டவர். தனிநபர் உரிமைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார். மத்திய பட்ஜெட்டின் முக்கியத்துவத்தை குறைத்து, மாநிலங்களுக்கு மீண்டும் அதிகாரத்தை வழங்கினார். வரிகளைக் குறைத்தார்.
# புகழ்வாய்ந்த தனது மாளிகையை இவரே வடிவமைத்தார். வர்ஜீனியா பல்கலைக்கழகத்தை தொடங்கினார். அந்த கட்டிடத்தை இவரே வடிவமைத்தார். அதன் முதல் தலைவராகவும் பணியாற்றினார். கடற்கொள்ளையர்களை ஒடுக்க கடற்படையை அனுப்பினார். சிறிய போர் போல நடைபெற்ற இத்தாக்குதல் ‘ஃபர்ஸ்ட் பார்பேரி போர்’ எனப்படுகிறது.
# புகழ்பெற்ற அமெரிக்க அதிபர்களில் ஒருவராக இன்றளவும் போற்றப்படுபவர். வரலாற்று அறிஞர், தத்துவ மேதை, கட்டிடக் கலை நிபுணர் என பன்முகத் திறன் படைத்த தாமஸ் ஜெஃபர்சன் 83-வது வயதில் (1826) மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago