நோபல் பரிசு பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்
நோபல் பரிசு பெற்ற கென்யாவை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் வாங்கரி மத்தாய் (Wangari Maathai) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 1). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் (1940) பிறந்தார். கல்வியில் சிறந்து விளங்கினார். 1964-ல் அமெரிக்கா சென்று, உயிரியலில் பட்டம் பெற்றார். பிட்ஸ்பர்க் பல்கலை.யில் கால்நடை உடற்கூறு துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
# நாடு திரும்பியவர், நைரோபி பல்கலை.யில் டாக்டர் பட்டம் பெற்று, அங்கு பேராசிரியராகப் பணியாற்றினார். கென்ய செஞ்சிலுவைச் சங்க இயக்குநராகப் பதவி வகித்தார். 1977-ல் பேராசிரியர் பணியை துறந்து, மரம் வளர்ப்பில் களமிறங்கினார்.
# தன் வீட்டுத் தோட்டத்தில் முதலில் 9 மரக்கன்றுகளை நட்டு, பணியைத் தொடங்கினார். காடுகளைப் பாதுகாக்க ‘கிரீன் பெல்ட்’ இயக்கம் தொடங்கினார். 30 ஆண்டுகளில் 3 கோடி மரங்கள் வளர்க்க இலக்கு நிர்ணயித்தார். இதுவரை இந்த இயக்கம் 5 கோடி மரங்களுக்கு மேல் நட்டுள்ளது. ஏழைப் பெண்களை திரட்டி, சமூகப் பணிகளில் ஈடுபடுத்தினார்.
# கல்வி, குடும்பக் கட்டுப்பாடு, ஊட்டச்சத்து, ஊழல் எதிர்ப்பு ஆகிய களங்களிலும் இந்த அமைப்பு முனைப்புடன் பாடுபட்டது. இவரது சமூக நலப்பணிகளுக்கு ஐ.நா. உட்பட பல அமைப்புகளும் நிதியுதவி அளித்தன.
# பசி, பஞ்சம், வறுமை, பட்டினி, வேலையின்மை ஆகிய பிரச்சினைகளைக் களையவும் மக்களைத் திரட்டி பாடுபட்டார். வேலை இல்லாத பெண்களை மரம் நடும் பணியில் ஈடுபடுத்தி, கிரீன் பெல்ட் அமைப்பில் இருந்து அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார்.
# தேசிய மகளிர் கவுன்சில் தலைவராக பொறுப்பேற்றார். ஜனநாயக ஆதரவு இயக்கத் தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார். நைரோபி யில் பூங்காவை அழித்து, 62 மாடிக் கட்டிடம் கட்டுவதற்கான முயற்சியை, போராட்டம் நடத்தி கைவிடச் செய்தார்.
# சமூக முன்னேற்றத்துக்காக போராட்டங்களை முன்னின்று நடத்தியதால் கைது செய்யப்பட்டு, பலமுறை சிறையில் அடைக்கப் பட்டார். மணமுறிவு, வழக்கு, விசாரணை, நஷ்டஈடு என சொந்த வாழ்க்கையிலும், பொது வாழ்விலும் பல துயரங்களை சந்தித்தார். ஆனாலும், துவண்டுவிடாமல் தன் பணிகளில் கவனம் செலுத்தினார்.
# ‘மாற்றத்துக்கான பெண்கள்’ என்ற அமைப்பை தொடங்கினார். மகளிர் வளர்ச்சிக்குப் பாடுபட்டார். பெண் கல்வியை பரவச் செய்தார். கென்ய நாடாளுமன்றத்துக்கு 2002-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுற்றுச்சூழல் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். காங்கோ பள்ளத்தாக்கு வன மேம்பாட்டுத் தூதராக 2005 முதல் இறுதி வரை பொறுப்பு வகித்தார்.
# அமெரிக்காவின் அமைதி தூதராக, ஆப்பிரிக்க யூனியனின் பொருளாதார, சமூக, நாகரிக மேம்பாட்டுக் கழக மேலாளராகவும் பணியாற்றினார். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான ‘கோல்ட்மேன்’ விருது பெற்றார். 2004-ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். இந்த பரிசைப் பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண் என்ற பெருமையும் பெற்றார். 2007-ல் இந்திய அரசு இவருக்கு ‘இந்திரா காந்தி’ விருது வழங்கி கவுரவித்தது.
# காடு வளர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு என மக்களுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்த வாங்கரி மத்தாய் 71-வது வயதில் (2011) மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago