இம்முறை மக்கள் நலக் கூட்டணி!- ட்விட்டரில் இந்திய அளவில் சிறப்பு கவன ஈர்ப்பு

By க.சே.ரமணி பிரபா தேவி

'மக்கள் நலக் கூட்டணிக்கு இம்முறை வாய்ப்பு வழங்குவோம்' என்ற கோஷம், பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் இந்திய அளவில் இன்று (சனிக்கிழமை) சிறப்புக் கவனம் பெற்றுள்ளது.

>#ThisTime4MNK என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் இந்தியா ட்ரெண்டிங்கில் இடம்பெற்று, பிற்பகலில் முதலிடம் பிடித்தது. நிமிடத்துக்கு குறைந்தது 20 ட்வீட்கள் கொட்டப்படுகின்றன. சமூக வலைதளங்களில் மக்கள் நலக் கூட்டணியின் முதல் முக்கிய கவன ஈர்ப்பாகவே இது பார்க்கப்படுகிறது.

தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிய பிறகு, திமுக ஆதரவாகவோ அல்லது அதிமுக ஆதரவாகவோ இந்திய அளவில் இதுவரை எந்த ஹேஷ்டேகும் முதல் மூன்று இடங்களைப் பிடித்தது இல்லை என்பதை இணைய நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இணையப் பிரச்சாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவான ஹேஷ்டேக் ஒன்று இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் வலம் வருவது கவனிக்கத்தக்கது. அதில், பதியப்படும் ட்வீட்டுகளில் சில இதோ...

>லூஸ்பையன்:

கால்ல விழுகற கலாச்சாரத்த தடுத்து நிறுத்துவாங்கனு நம்பி #ThisTime4MNK

>ப்யூர் ப்ளாக்:

திமுக விரக்தியிலதான் அதிமுகக்கு போட்டன்; இந்த தடவ மறுபடி திமுகக்குதான் போடனுமோன்னு யோசிச்சன். வேற வாய்ப்பும் இருக்கு #ThisTime4MNK

>Siddharth:

மக்கள் நல கூட்டணியில் திமுக இணைந்தது ,10 தொகுதிகள் கொடுக்கவுள்ளது #தேர்தல்2021 #ThisTime4MNK

>ட்விட்டர்MGR :

இதுல சோகம் என்னன்னா, வைகோவை நம்புற அளவுக்கு இன்னும் தமிழகம் முன்னேறலைங்கறதுதான்! #ThisTime4MNK

>Franco Marian :

எப்போ அவுங்க விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்னு சொன்னாங்களோ, அப்பவே அவுங்களுக்கு ஓட்டு போடணும்னு முடிவு பண்ணிட்டேன் #ThisTime4MNK

>மதுரை சண்டியர்: ‏

தமிழரின் விர விளையாட்டு

1:ஜல்லிக்கட்டு

2:முட்டு கிடா

3:சேவல் சண்டை

4:மாட்டுவண்டி பந்தயம்

இவற்றை மீட்க ஆதரிப்பிர் #ThisTime4MNK

>sindhan.info :

கூட்டாட்சி மூலம் அதிகாரம் பகிர்வோம், ஊழல் சொத்துக்களை மீட்டு வருவோம் #ThisTime4MNK

>ஆல்தோட்டபூபதி:

MNKன்னா 'மக்கள் நல கூட்டணியா'? இல்ல, 'முரண்பாடுகள் நிறைந்த கூட்டணியா'? #ThisTime4MNK

>Sindhya :

சேத்துலயும் அடி வாங்கியாச்சு சோத்துலயும் அடி வாங்கியாச்சு So #ThisTime4MNK

>Gokila ராங்கி Honey ‏:

வேதாளம் 150 கோடி வசூல் பண்ணியும், அஜித்க்கு இன்னும் அடுத்த படமே கன்பார்மாகல, சூட்டிங் ஆரம்பிக்கல. இப்படிப்பட்ட ஆட்சி தேவையா?

*

எந்த கட்சி ஜெயிக்கும்னு பாத்து அந்த கட்சிக்கு ஒட்டு போடாதீங்க

எந்த கட்சி ஜெயிச்சா நல்லது நடக்கும்னு பாத்து ஒட்டு போடுங்க #ThisTime4MNK

*

ஊழல்ன்னு சொல்லி அமைச்சர பதவி நீக்குவாங்களாம், 6 மாசம் கழிச்சு மன்னிச்சு மறுபடி அமைச்சர் ஆக்குவாங்களாம், அப்போ அந்த ஊழல் பணம்? #ThisTime4MNK

மநகூ தாரா :

ஆடம்பரமும் ஆதிக்கமும் இல்லாத அரசியலை காண விரும்பும் சாமனியனின் வாக்கு #ThisTime4MNK

>✯சண்டியர்✯:

மீதேன்-க்கு ஸ்டாலின் படிக்காம கையெழுத்து போட்டேனாரு..

கேப்டன் பேப்பர் படிக்காம பேட்டி கூட குடுக்க மாட்டாரு

யாரு தெளிவு? #ThisTime4MNK

*

இத்தனை ஆண்டு ஜெ, கலைஞர் செய்த ஆட்சியைக் கண்டு உனக்கு கோபம் வருமெனில் நீயும் என் நண்பனே - கேப்டன் #ThisTime4MNK

>Kanda ‏@kandaknd:

கேப்டன் பேட்டி தினமும் வேண்டுமா ஆதரிப்பீர் #ThisTime4MNK

வசந்த் தாரமங்கலம் ‏@v_tharai

புரட்சி (தலைவி) வேண்டாம், கலைஞர் வேண்டாம்,

இந்த முறை புரட்சி கலைஞர் ஆளட்டும் #ThisTime4MNK

*

வாரிசுக்காக ஒரு கூட்டம்,

வாரி சுருட்ட ஒரு கூட்டம்,

வாழ்வாதரங்களுக்காக ஒரே கூட்டம்

அது மக்கள் நலக்கூட்டணி. #ThisTime4MNK

>சாகேத் ராம்:

இனி எனது தலைமையிலான அரசு இல்லை.

நமது தலைமையிலான அரசு #ThisTime4MNK

>R@jmohan:

எங்கள் தேவையின் போது உடன் இருந்தவர்களோடு, தேர்தலின் போது உடன் இருப்போம். #ThisTime4MNK

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

30 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்