நெட்டிசன் நோட்ஸ்: சூரிய குமாரும் பாலில் விழுந்த தோலும்!

திமுக கூட்டணியில் வி.சி.சந்திரகுமார் தலைமையிலான மக்கள் தேமுதிக இணைந்துள்ளது குறித்து நெட்டிசன்கள் தட்டிய பதிவுகளில் சில:

>Sen:

தேர்தல் முடிவதற்குள் அனைத்து கட்சிகளும் ஒரு குட்டி போட்டுடும் போலவே!

#திக #திமுக #அதிமுக #மதிமுக #மநகூ #தேமுதிக #மதேமுதிக

>Elavarasan Tangasamy:

திமுக கூட்டணிக்கு மக்கள் தேமுதிக ஆதரவு- சந்திரகுமார்.

பழம் பழுக்கலைன்னா நான் மரக்கிளையையே வெட்டிடுவேன் - கலைஞர் மைண்ட் வாய்ஸ்

>Raja Hussain:

தேமுதிக இரண்டாக உடைந்தது என்கிறீர்களே! தேமுதிகவில் இருந்து சந்திரகுமார் விலகும் முன்னர், தேமுதிகவுக்கு 59 சீட்கள் தர முன்வந்த திமுக, தேமுதிகவை இரண்டாக உடைத்த சந்திரகுமாருக்கு 30 சீட்கள் கொடுத்திருக்க வேண்டுமே. அப்படி கொடுத்தால், தேமுதிக இரண்டாக உடைந்ததாக நான் ஒப்புக்கொள்கிறேன்.

>கார்த்திக்:

நான்கு வருடங்களாக அதிமுகவுக்கு விலைபோகாத சந்திரகுமார் இப்போ திமுகவுக்கு போகக் காரணம் அவருக்கான அங்கீகாரம் கிடைக்காததாகவும் இருக்கலாம்.

>கோழிக்கோடு கோவிந்தன்:

சந்திரகுமார் கருணாநிதியுடன் சந்திப்பு.

#இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சந்திரகுமாரா?

>Rowdy:

"மதேமுதிக' சந்திரகுமார் பேசுறத கேட்டீங்களா?

கேப்டன் அவரோட தலைவராம், ஆனா ஸ்டாலின்ட சீட்டு வாங்குவாராம்...

>குணா யோகச்செல்வன்:

சந்திரகுமார் பேட்டி ஒன்றை பார்த்தேன்! தன் நோக்கத்தில் உறுதியாக பேசுகிறார்! மிகுந்த நடைமுறைத்தனத்தோடு பேசுகிறார்! more over...தெளிவாக பேசுகிறார்.

>கருப்பு கருணா:

ஒவ்வொரு மாவட்டச்செயலாளரும் நிறைய செலவு செய்துட்டோம்: சந்திரகுமார்

அண்ணே.. இப்ப ஒங்களுக்கு இன்னா வேணும்? சீட்டா... இல்ல... நோட்டா... ஒடைச்சி சொல்லுங்கண்ணே..

>Balaji P Raman:

அண்ணா வளர்த்த கட்சியை இன்றைக்கு சந்திரகுமார் தான் வளர்க்கணுமென்பது காலத்தின் குரூரம்! #TN2016 #dmk #mnk

>Ramar...உசிலம்பட்டி:

தி.மு.க.வுக்கு மக்கள் தே.மு.தி.க. ஆதரவு: சந்திரகுமார்

#மொத நெத்தியில இருக்க பொட்டை அழிங்க!

>கத்தி... ‏@s_sureshpriyan

சந்திரகுமார் கட்சி, ஜானகி அம்மாள் அவர்கள் கடந்த காலத்தின் போது எடுத்த முடிவை போல் ஆகிவிடும் :)

>நையாண்டி நாரதர்:

ஊழலை ஒழிக்கவே மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சியை தொடங்கினோம்-சந்திரகுமார்

#திமுக கூட்டணிக்கு தானே போறீங்க? ம்.. சரி...சரி... ஒழிச்சிடலாம்..

>Gnaniyar Zubair:

சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு மக்கள் தேமுதிக ஆதரவு: சந்திரகுமார்

மக்களுக்கும் தேமுதிகவுக்கு இடையில் ஒரு கமா போட்டுப் பாருங்க எல்லாமே மாறிவிடும்.

>தமிழ் பையன்:

சந்திரகுமார் சூரிய கட்சிக்கு போவதால், இனி சூரியகுமார் என அழைக்கப்படுவார்!!

>ஜப்பான் ரகு®:

பழம் நழுவி பாலில் விழாமல்

பழத்தோல் விழுந்தது!

#சந்திரகுமார் #தேமுதிக #தேர்தல்2016

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE