உலகப் புகழ்பெற்ற கவிஞர்
உலகப் புகழ்பெற்ற கவிஞரும் ரொமான்டிசம் கவிதையின் முன்னோடியுமான வில்லியம் வேட்ஸ்வொர்த் (William Wordsworth) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 7). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# இங்கிலாந்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள காக்கர்மவுத் என்ற இடத்தில் பிறந்தார் (1770). தந்தை சர் ஜேம்ஸ் லோதர் என்ற பிரமுகரின் வழக்கறிஞர். எட்டு வயதாக இருந்தபோது தாயை இழந்தார். மேலும் 5 வருடங்களுக்குப் பிறகு தந்தையையும் இழந்தார்.
# சிறு வயதிலேயே தந்தை மகனுக்கு ஷேக்ஸ்பியர், ஸ்பென்சர், மில்டன் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற பல கவிஞர்களின் கவிதைகளைக் கற்றுக் கொடுத்தார். தாய் வழி சொந்தங்களின் உதவியுடன் பிறந்த ஊரிலேயே ஆரம்பக் கல்வி கற்றார். 1787-ல் பதினான்கு வரிப் பாடல் ஒன்றை முதன் முறையாக எழுதினார்.
# தொடர்ந்து கவிதைகளை எழுதி வந்தார். கேம்பிட்ஜ் செயின்ட் ஜான் கல்லூரியில் சேர்ந்தார். 1791-ல் பி.ஏ. பட்டம் பெற்றார். கல்லூரியில் படித்தபோது, கோடை விடுமுறைகளில் நீண்ட நடைப் பயணங்கள் மேற்கொள்வதிலும் புகழ்பெற்ற இடங்களைச் சுற்றிப் பார்ப்பதிலும் செலவிட்டார்.
# பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, இத்தாலி நாடுகளுக்குச் சென்றார். 1893-ல் தனது கவிதைகளைத் தொகுத்து, ‘ஈவ்னிங் வாக் அன்ட் டிஸ்கிரிப்டிவ் ஸ்கெட்சஸ்’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். ‘தி பிரிலூட்’ இவரது தலைசிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. இவரது தொடக்ககால கவிதையான இதை ஏறக்குறைய தனது சுயசரிதம் போல எழுதியுள்ளார்.
# மில்டனின் ‘தி பாரடைஸ் லாஸ்ட்’ கவிதைக்குப் பிறகு எழுதப்பட்ட மிக நீண்ட கவிதையாக இது சிறப்பு பெற்றது. அடித்தட்டு மக்களையும், நாடோடிகள், உழவர்கள், சிறு வணிகர்கள் ஆகியோரையும் குறித்து நிறைய எழுதினார். அறுவடை செய்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணைக் குறித்த இவரது `சாலிட்டரி ரீப்பர்' என்ற கவிதை உலகப் புகழ் வாய்ந்தது.
# ஏறக்குறைய 8 ஆண்டு காலம் அரசவைக் கவிஞராக பணிபுரிந்தார். ‘தி ரீன் ஆஃப் டெரர் சைமன் லீ', `வி ஆர் செவன்', `லைன்ஸ் ரிட்டன் இன் இயர்லி ஸ்பிரிங்' உள்ளிட்ட வசன கவிதைகள், உரைநடைகளுக்கான முன்னுரை, `த்ரி இயர்ஸ் ஷி குரோஸ்' உள்ளிட்ட உரைநடை படைப்புகள், மற்றும் ஏராளமான கவிதைகள், கவிதை தொகுப்புகளையும் படைத்தார்.
# சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சோகங்கள் காரணமாக பல ஆண்டுகள் மன அழுத்தத்துக்கு ஆளாகி இருந்தார் என்று கூறப்படுகிறது. 1793-ம் ஆண்டு `ஆன் ஈவ்னிங் வாக்', `டிஸ்கிரிப்டிவ் ஸ்கெட்சஸ்' ஆகிய கவிதைத் தொகுப்புகள் மிகவும் பிரபலமடைந்தன.
# பிரபல கவிஞர் சாமுவேல் டெய்லர் கோல்ட்ரிட்ஜுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். 1798-ம் ஆண்டு இருவரும் இணைந்து `லிரிகல் பாலட்ஸ்' என்ற வசன கவிதையை வெளியிட்டனர்.
# 1807-ல் இவரது உரைநடைக் கவிதைகள் இரண்டு பகுதிகளாக வெளிவந்தன. இவரது முக்கியமான பல படைப்புகள் 1797 முதல் 1808 வரையிலானவை. டர்ஹாம், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகங் களிடமிருந்து இவருக்கு கவுரவ குடியுரிமை சட்ட பட்டம் கிடைத்தது.
# ஆங்கில இலக்கியத்துக்கு, குறிப்பாக கவிதைகளுக்கு ஒரு புது வடிவம் கொடுத்தவரும் காலத்தை வென்ற கவிதைகள் மூலம் உலகப்புகழ் பெற்ற கவிஞராக முத்திரைப் பதித்தவருமான வில்லியம் வேட்ஸ்வொர்த் 1850-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 80-வது வயதில் காலமானார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago