‘ஹலா’ என்றால் ஏர், கலப்பை. இந்த ஆசனத்தின்போது கலப்பை போல நம் உடல் இருப்பதால் இப்பெயர். இந்த ஆசனம் செய்வதால் முதுகுப் பகுதிகள், தோள் பலமடைகின்றன. நரம்பு மண்டலம் ரிலாக்ஸ் ஆவதால், மன அழுத்தம், சோர்வு ஆகியவை நீங்குகின்றன. தைராய்டு சுரப்பியின் இயக்கம் தூண்டப்படுகிறது. எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. கழுத்து, முதுகு வலி, தண்டுவட பாதிப்பு, அதிக ரத்த அழுத்தம், வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
ஹலாசனம் எப்படி செய்வது என பார்க்கலாம். மேல்நோக்கி படுத்துக் கொள்ளுங்கள். கால்கள் சேர்ந்தும், கைகள் உடலை ஒட்டியும், உள்ளங்கைகள் தரையில் பதிந்தும் இருக்கட்டும். மெல்ல, மூச்சை இழுத்தபடி முட்டி மடங்காமல் இரு கால்களையும் உயர்த்தவும். தலை முதல் இடுப்பு வரை தரையில் நன்கு பதிந்திருக்க, கால்கள் தரைக்கு செங்குத்தாக இருக்கட்டும். பின்னர், கைகளின் உதவியுடன் இடுப்பு, முதுகையும் மெல்ல உயர்த்தவும். இடுப்பு, முதுகு மேலே உயர உயர, கால்களை மெல்ல தணித்து, தரைக்கு இணையாக இருக்குமாறு கொண்டுவரவும். முடிந்தால், கால் விரல்களால் தரையை தொட முயற்சிக்கவும். தொடக்கத்தில் சிரமமாக இருந்தாலும், தொடர்ந்து மூச்சு விட விட, உடம்பு ரிலாக்ஸ் ஆவதையும், சிரமமின்றி இயல்பாக இருப்பதையும் உணர முடியும். மூச்சை வெளியே விட்டபடியே, கால்களை மீண்டும் செங்குத்தாக கொண்டு சென்று, நிதானமாக கீழே இறக்கி ரிலாக்ஸ் செய்துகொள்ளவும்.
நாளை – ஆசனங்களின் ராணி
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
28 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago