‘வக்ர’ என்றால் முறுக்குதல். உடலை முறுக்கி (ட்விஸ்ட்) செய்யும் ஆசனம் என்பதால் இப்பெயர்.
இந்த ஆசனம் செய்வதால், முதுகுப் பகுதி உறுதியும், நெகிழ்வுத் தன்மையும் பெறுகிறது. சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளின் இயக்கம் சீராகிறது. செரிமானம் நன்கு நடைபெறுகிறது. மலச்சிக்கல் சரியாகிறது. வயிறு, இடுப்பில் உள்ள தேவையற்ற சதைகள் குறைகின்றன. கணையத்தின் செயல்பாடு தூண்டப்பட்டு, கணைய நீர் (Pancreatic Juice) சுரப்பு அதிகரிக்கிறது. நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்ற ஆசனம் இது.
வக்ராசனம் எப்படி செய்வது என பார்ப்போம். கால்களை நேராக நீட்டி நிமிர்ந்து உட்காரவும். கைகள், உடலை ஒட்டி இருக்கட்டும். உள்ளங்கை தரையில் பதிந்தவாறு இருக்கட்டும். மெல்ல, வலது காலை மடித்து, இடது காலின் முட்டியை ஒட்டியவாறு வலது பாதத்தை வைக்கவும். வலது கையை திருப்பி, விரல்கள் பின்னோக்கி இருப்பதுபோல முதுகை ஒட்டி வைத்துக் கொள்ளவும். மூச்சை இழுத்தபடியே இடது கையை உயர்த்தவும். மூச்சை விட்டபடியே இடது பக்கமாக திரும்பவும். மடித்து வைத்திருக்கும் காலுக்கும், வலது தோளுக்கும் நடுவே இடது கையை கொண்டு செல்லவும். பிறகு, இடது கையால் வலது கணுக்கால் பகுதியை பிடிக்கவும். இப்போது வலது தோள்பட்டை வழியாக வெளியே பார்க்கவும். 1-10 எண்ணவும். மூச்சை இழுத்துக்கொண்டே இடது கையை விடுவித்து, சமநிலைக்கு வரவும். காலை நீட்டிக்கொள்ளவும். இதேபோல, இடது காலை மடித்து வைத்தும் செய்யவும்.
நாளை – மாட்டு மூஞ்சி
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
28 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago