ஆசனத்தின் பெயரை சொல்வதுதான் சிரமமாக இருக்கிறதே தவிர, ஆசனம் ஓரளவு ஈஸிதான்.
நிமிர்ந்து உட்கார்ந்து காலை நீட்டிக் கொள்ளுங்கள். வலது காலை மடித்து இடது தொடை மீது வைக்கவும். வலது பாதம் உடம்பை ஒட்டி இருக்கட்டும். இடது கால் நேராக நீட்டியும், விரல்கள் மேல் நோக்கியும் இருக்கட்டும்.
வலது கையை பின்பக்கமாக கொண்டு சென்று, இடுப்பை ஒட்டி வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மடித்து வைத்திருக்கும் வலது காலின் கட்டை விரல் அந்த ஏரியாவில்தான் இருக்கும். அதை வலது கையால் பிடிக்க முயற்சியுங்கள். இடுப்பில் இருந்து முன்னோக்கி குனிந்து இடது கையால் இடது காலை பிடிக்கவும். நெற்றியால் கால் முட்டியை தொடவும். சுவாசம் சீராக இருக்கட்டும். இதே நிலையில் 1-5 எண்ணவும்.
அடுத்து, கால்களை மாற்றிக் கொண்டு, இடது பக்கம் செய்யவும்.
மீண்டும், வலது காலை மடித்து இடது தொடை மீது வைக்கவும். இடது கால் நீட்டி இருக்கட்டும். இடுப்பில் இருந்து குனிந்து, இரு கைகளாலும் இடது காலை தொட முயற்சிக்கவும். 1-5 எண்ணவும். அடுத்து, கால்களை மாற்றி இதேபோல செய்யவும்.
இந்த ஆசனத்தால் கால் முட்டி பகுதிகள் நன்கு நெகிழ்வுத் தன்மை பெறும். வயிறு பகுதி நன்கு அழுத்தப்படுவதால், உள் உறுப்புகளின் செயல்பாடு தூண்டப்படும். அதிக மூட்டு வலி, முதுகு வலி, ஸ்லிப் டிஸ்க் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
நாளை – சக்தி கொடு!
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
28 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago