முதுகை பாதி வளைத்து செய்தது ‘அர்த்த உஷ்ட்ராசனம்’. அடுத்து, முதுகை முழுமையாக வளைத்து செய்யப்போகிற ‘உஷ்ட்ராசனம்’. இது சற்று கடினமான ஆசனம் என்பதால், ஆசனத்துக்கு போகும் முன்பு, உடம்பை சற்று தயார்படுத்திக் கொள்ளலாம்.
விரிப்பின் மீது வஜ்ராசனத்தில் அமர்ந்து, முட்டி போட்டு நிற்கவும். நன்கு ஒரு முறை மூச்சை இழுத்து விடவும்.
மூச்சை இழுத்துக்கொண்டே, மெல்ல பின்னோக்கி வளைந்து வலது கையால் வலது குதிகால் அல்லது கணுக்காலை தொடவும். இடது கையை மேல் பக்கமாக உயர்த்தி, பின்னோக்கி கொண்டு செல்லவும். பின்வானத்தை பார்க்க முயற்சிக்கவும். மூச்சை விட்டபடியே இயல்பு நிலைக்கு திரும்பவும்.
அடுத்து, மூச்சை இழுத்துக்கொண்டே, மெல்ல பின்னோக்கி வளைந்து இடது கையால் இடது குதிகால் அல்லது கணுக்காலை தொடவும். வலது கையை மேல் பக்கமாக உயர்த்தி, பின்னோக்கி கொண்டு செல்லவும். பின்வானத்தை பார்க்க முயற்சிக்கவும். மூச்சை விட்டபடியே இயல்பு நிலைக்கு திரும்பவும். இப்படி மாறி மாறி நாலைந்து முறை செய்த பிறகு, வஜ்ராசனத்தில் அமர்ந்து ரிலாக்ஸ் செய்துகொள்ளவும். பின்னோக்கி வளைகிற பயிற்சி என்பதால், மிகுந்த கவனத்தோடு செய்வது அவசியம்.
யோகாசனங்களை ஓரளவுக்கு அறிமுகம் செய்துவைக்கும் முயற்சியே ‘தினம் தினம் யோகா’ பகுதி. அனுபவமிக்க யோகா ஆசிரியரின் நேரடி வழிகாட்டுதலில் பயிற்சிகளை மேற்கொள்வது சிறப்பு.
நாளை – ஒட்டகம் பராக், பராக்!
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
16 hours ago
வலைஞர் பக்கம்
18 hours ago
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
27 days ago
வலைஞர் பக்கம்
29 days ago