தினம் தினம் யோகா 26: உறுதியாக்கும் ‘வஜ்ரம்’

By செய்திப்பிரிவு

உறுதிமிக்க, சக்திவாய்ந்த இடி, மின்னல், வைரம் ஆகியவற்றை குறிக்கும் சொல் ‘வஜ்ரம்’. பெயருக்கேற்ப, உடலுக்கு உறுதியையும், சக்தியையும் கொடுக்கக்கூடியது வஜ்ராசனம். பல மதத்தினரும் வழிபாட்டின்போது இந்த ஆசனத்தில் அமர்ந்திருப்பதை காணலாம்.

சாப்பிட்ட பிறகு செய்யக்கூடிய ஆசனம் வஜ்ராசனம் என்றும் பார்த்தோம். வீட்டில் சாதாரணமாக தரையில் அமரும்போது, தொலைக்காட்சி பார்க்கும் நேரங்களில்கூட வஜ்ராசனத்தில் அமரலாம். சிறுவர், சிறுமிகளையும் வஜ்ராசனத்தில் உட்காருமாறு பழக்கப்படுத்தலாம்.

தொடக்கத்தில் ஒருசில விநாடிகள் மட்டும் வஜ்ராசனத்தில் அமர்ந்து பழகி, பின்னர் படிப்படியாக நேரத்தை அதிகரிக்கலாம். வலி இருக்கும்பட்சத்தில், வலியை பொறுத்துக்கொண்டு அமரக்கூடாது. தவிர, வெறும் தரையில் முட்டிக்கால் போட்டு அமர்ந்தால் கால் முட்டிகள் வலியெடுக்கும். வெகு நேரம் உட்கார முடியாது. எனவே, ஏதேனும் விரிப்பை பயன்படுத்துவது அவசியம்.

வஜ்ராசனத்தை தொடர்ந்து, சுப்த வஜ்ராசனம் செய்வதை அறிந்துகொண்டோம். சுப்த வஜ்ராசனத்தால் வயிறு உள் உறுப்புகளின் இயக்கம் சீராகி, செரிமானக் கோளாறுகள் நீங்குகின்றன. மலச்சிக்கல் சரியாகிறது. மார்பு நன்கு விரிவடைந்து, சுவாசம் அதிகம் நடைபெறுவதால் உடலுக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்கிறது. ஆஸ்துமா, பிராங்கைடிஸ் போன்ற நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளும் சரியாகின்றன.

அதிகப்படியான கால், கணுக்கால், மூட்டு வலி, இடுப்பு வலி உள்ளவர்கள், தசைநார் (லிகமென்ட்) பிரச்சினை உள்ளவர்கள் சுப்த வஜ்ராசனத்தை தவிர்ப்பது நல்லது.

நாளை – ‘அவுட்கோயிங் கால்’

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

16 hours ago

வலைஞர் பக்கம்

18 hours ago

வலைஞர் பக்கம்

3 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

27 days ago

வலைஞர் பக்கம்

29 days ago

மேலும்