இங்கிலாந்து மருத்துவ நிபுணர்
உடலியல் ஆராய்ச்சிகளின் முன்னோடியும், தலைசிறந்த ஆசிரியருமான சர் மைக்கேல் ஃபாஸ்டர் (Sir Michael Foster) பிறந்த தினம் இன்று (மார்ச் 8). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# இங்கிலாந்தின் ஹன்டிங்டன் நகரில் (1836) பிறந்தார். பள்ளியில் மொழிப் பாடங்களில் சிறந்து விளங்கினார். லண்டன் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார். பிறகு மருத்துவம் பயின்று, எம்.டி. பட்டம் பெற்றார். நுரையீரல் நோயால் அடிக்கடி பாதிக்கப்பட்டார். இந்த பாதிப்பு வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.
# மருத்துவரான தந்தையுடன் சேர்ந்து 6 ஆண்டுகள் மருத்துவத் தொழிலில் ஈடுபட்டார். தனது முன்னாள் ஆசிரியரின் அழைப்பை ஏற்று, லண்டன் பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தார். அங்கு நடைமுறை உடலியல் துறை விரிவுரையாளராகப் பணியாற்றினார். திசு அமைப்பியல், உடலியல் குறித்த ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார்.
# கேம்பிரிட்ஜில் உயிரியல் பிரிவு தொடங்குவதற்கு இதுதான் ஆரம்பப் புள்ளியாக அமைந்தது. இந்நிறுவனம் உடல் இயங்கலியல் ஆராய்ச்சிகளுக்கான தலைசிறந்த மையமாக மாறியது. ஆசிரியப் பணியை மிகுந்த விருப்பத்தோடு செய்தார். இவரது உற்சாகமான கற்பித்தல் பாணி, மாணவர்களையும் ஆராய்ச்சி செய்யத் தூண்டியது.
# கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரியில் உடலியலுக்கான துறை தொடங்கப்பட்டபோது அதன் முதல் பேராசியராக நியமிக்கப்பட்டார். 1903 வரை அங்கு பணியாற்றினார். மாணவர்கள் தாங்களாகவே பரிசோதனைகளை மேற்கொண்டு, அதன்மூலம் பாடம் கற்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
# உயிரியல், உடலியல் கற்பித்தலில் நவீன முறைகளை அறிமுகம் செய்தார். விரிவுரைகள் என்பது சோதனைக்கூட ஆய்வுகளோடு நெருங்கிய தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்பார். 1876-ல் ஃபிசியாலஜிகல் சொசைட்டி நிறுவப்பட காரணகர்த்தாவாக இருந்தார்.
# ‘தி சயின்டிஃபிக் மெமரீஸ் ஆஃப் தாமஸ் ஹென்றி ஹக்லே’ என்ற இதழின் இணை ஆசிரியராக செயல்பட்டார். உடலியல் தொடர்பான ‘ஜர்னல் ஆஃப் ஃபிசியாலஜி’ இதழை தொடங்கினார். ராயல் சொசைட்டியின் ஃபெலோவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
# திசு அமைப்பியல், ரசாயனத் துறைகளில் ஒவ்வொரு மாணவரும் தனித்தனியே ஆய்வு செய்வதற்கு ஏற்ப ஆய்வுக்கூடம் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். 20-ம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் பேரும் புகழும் பெற்ற பல உயிரியலாளர்கள் இவரது மாணவர்கள்.
# இவரது ஆராய்ச்சிகள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் தரமானதாக, பயனுள்ளதாக இருந்தன. இதயத் துடிப்பு குறித்தும் ஆராய்ந்தார். உடற்கூறியலுக்காக இவர் எழுதிய பாடப் புத்தகம் அத்துறைக்கான சிறந்த வழிகாட்டி நூலாக கருதப்பட்டது. அதில் 6 பதிப்புகள் வந்தன. பல நூல்கள், ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
# தாவரவியல் துறையிலும் இவரது பங்களிப்பு மகத்தானது. அரிய வகை தாவரங்கள், பூச்செடிகளை வளர்ப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். சுமார் 300 வகைகள் கொண்ட ‘ஐரிஸ்’ வகை மலர்ச் செடிகளை வளர்த்தார். இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்தும் அரிய வகை தாவரங்களை வரவழைத்து வளர்த்தார். கலப்பினத் தாவரங்களையும் அதிகம் வளர்த்தார்.
# உயிரியல், உடற்கூறியலில் நவீன கற்பித்தல் முறைகளை அறிமுகம் செய்தவரும், ஏராளமான உயிரியல் துறை வல்லுநர்களை உருவாக்கிய தலைசிறந்த ஆசிரியருமான மைக்கேல் ஃபாஸ்டர் 71-வது வயதில் (1907) மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago