ஃபேக் ஐடிக்களும் கொண்டாடும் பெண்கள் தினம்: இது ஃபேஸ்புக் பேக்கேஜ்!

வெங்கடேஷ் ஆறுமுகம்:

நேத்து சிவனோட நாளு.. இன்னிக்கு சக்தியோட நாளு.. இதைச் சொல்லச் சொன்னார் என் ஆளு.

ஆஷிக் பேர்ட்:

ஓர் ஆண் கற்ற கல்வி, பணம் சம்பாதிக்க மட்டுமே பயன்படும். ஆனால் ஒரு பெண் கற்கும் கல்வி ஒரு சமுதாயத்தையே உருவாக்கிவிடும்.

ஏஞ்சல் கிளாடி:

பெண்மையை மீட்டெடுத்து தினமும் பல போராட்டங்களை கடந்து வாழும் அனைத்து உழைக்கும் திருநங்கைகளுக்கும், பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்...

கார்க்கி பவா:

அவள் அப்படியொன்றும் அழகில்லை..

அவளுக்கு யாரும் இணையில்லை..

‪#‎அவள்களுக்கு‬ வாழ்த்துக்கள்

ஓனபத்திர ஓனான்டி:

பூமியில் பெண்களாய் பிறந்த அத்தனை தேவதைகளுக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்..

‪சுரேஷ் குமார்:

மகளிர்‬ தினம்‬ என்று அறியாமல் வழக்கம் போல் எனக்கு சமைத்து கொண்டிருந்தாள்

*

*

முன்பு அம்மா; இன்று மனைவி...!

ரேவதி மீனாட்சி:

she -க்குள் he

Women -க்குள் men

Female -க்குள் male

பெண்ணின்றி இல்லை இவ்வுலகம்

#மகளிர் தினம்

ஸ்டீபன்:

பெரிசா கவிதை, டயலாக் எல்லாம் போட்டு வாழ்த்த தேவையில்லை, வீட்டுலையும், வெளியிலையும் ஒவ்வொரு பெண்ணையும் நாம மதித்து நடந்தாலே போதும்.

#மகளிர் தினம்

சுந்தர்:

விசாரித்து பார்த்தால் பெண்கள் தினம் என்னிக்கு கொண்டாடனும்னு ஆண்கள் தான் முடிவெடுத்துருப்பாங்க.

தளபதி களிறு:

உலகில் சொர்க்கம் எங்கு உள்ளது என கேட்டதற்கு, முகமது நபி (ஸல்) அவர்கள், உன் தாயின் காலடியில் உள்ளது என்றார்கள்.

#பெண்கள்_தினம்

ஆண்டனி:

கூட்டத்தோட கூட்டமா ஃபேக் ஐடிக்களும் பெண்கள் தினம் கொண்டாடுதுங்க.

ஜானு பாஸ்கர்:

பெண்கள் தினம் என்பதே பைத்தியக்காரத்தனம்; நூற்றாண்டு காலமாய் சிறை வைத்து பிறகு ஒருநாள் மட்டும் பரோல் போல..!

எமகாதகன்:

ஆணுக்கு இன்பம் தந்து,

துன்பத்தை இன்பமாக,

கரு வளர்த்து,

உயிர் பிசைந்து,

பிரசவிப்பவள்

பெண்

#பெண்கள்_தினம்

ஆனந்த் குமார்:

பெண்களை சக மனுஷியாக மட்டுமே பார்க்கிறேன்..

அவர்கள் மதித்தால் மதிப்பேன்..

இல்லாட்டி சும்மா போயிரு என்பேன்..

இவ்வளவுதான் நான்.!

பெண்களை தாயாக மதிக்கிறேன்.. பேயாக துதிக்கிறேன்

இந்த மாதிரி டயலாக்கில் எல்லாம் உடன்பாடே இல்லை..!!

இரு பாலினமும் ஒன்றே..!

இருவருக்கும் கிரீடம் தேவை அற்றதே!!

பெண்கள் ஒன்றும் தெய்வப்பிறவிகள் அல்ல..

சக மனுஷிகள்.. சமமானவர்கள் என்பதுதான் உண்மை!!

‪#‎பெண்கள் தினம்‬

ஸ்ரீதர்:

உயிர் போகும் வலியில்தான்

உனக்கு நான் அறிமுகமானேன் அம்மா..!!

‪#‎பெண்கள் தினம்‬

பரிசல்காரன் கிருஷ்ணகுமார்:

"ஹாய் பொண்டாட்டி.. ஹாப்பி வுமன்ஸ் டே"

"ஐஐஐ! தேங்க்யூ சோ மச் டியர். லவ் யூ.."

"சரி.. சரி.. ஆஃபீஸ்க்கு டைமாச்சு. அந்த ப்ளூ ஷர்ட் எங்க வெச்சிருக்க? சாக்ஸ் தொவைச்சாச்சா? டிஃபன் ரெடியா வை. லஞ்ச் பேக் பண்ணியாச்சா..

அப்பறம்..."

ராஜேஷ் பென்சில்:

வருடத்திருக்கு ஒருமுறை ''பெண்கள் தினம்'' கொண்டாடுவதை விட, மாதத்திற்கு மூன்று நாள், அவர்களின் வலியை நாம் உணர்ந்தாலே போதும், தினமும் பெண்களுக்கு கொண்டாட்டம்தான்..!!!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE