* அகர முதல ஊழல் எல்லாம்
ஆதித்தலைவன் முதலில் அடித்ததே.
* கற்க கசடறக் களவாட கற்றபின்
நிற்க தேர்தல் புக.
* எண்ணித் துணிக கூட்டணிக்கு துணிந்தபின்
கூட்டணி அமைத்தல் இழுக்கு.
* ஆட்டயப் போடுதல் கோடீஸ்வரருள் உய்க்கும்
அதுபோடாமை தெருக்கோடியில் விடும்.
* நன்றி மறப்பதும் நன்று அதனினும்
அன்றே மறப்பதும் நன்று.
* இடிப்பாரை இல்லாத தலைவன் பொக்கிஷத்தை
கடப்பாரைக் கொண்டே கவர்வான்.
* தன்னெஞ்சறிவது கொள்ளையடிக்க அடித்த பின்
தன்னெஞ்சே தன்னைப் பாராட்டும்.
* காலத்தினால் அடித்த கொள்ளை சிறிதெனினும்
எதிரிக்கு அதுவே சாலப்பெரிது.
* எப்‘பொருள்’ யார்யார்வாய்க் கேட்பினும் அப்‘பொருள்’
அக்கணமே கவர்வது அறிவு.
* ஊழலுக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
ஆர்வலர் பதவியே சாலவழி.
* தொட்டணைத் தூறும் மணற்கேணி தலைவனவன்
கற்றணைத் தூறும் ஊழல்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago