வேர்கள்: இடது பாதையே வழிகாட்டும்!

By த.நீதிராஜன்

சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை நிலையத்தில் ரகுநாதன்தான் (66) எல்லாம்.

“பிறந்து வளந்தது மெட்ராஸ்லதான். எங்க தாத்தா காங்கிரஸ் தியாகி. அப்பா முழுநேரமா கம்யூனிஸ்ட் கட்சி வேலை செஞ்சாரு. எனக்கு சின்ன வயசுலருந்தே எல்லாத் தலைவர்களையும் தெரியும். விவேகானந்தா கல்லூரியிலதான் பிஎஸ்சி முடிச்சேன். அப்பத்தான் மாணவர் சங்க வேலைகள் செஞ்சேன். அங்கேதான் கம்யூனிஸ்ட் கருத்துகள் மேல ஒரு பிடிப்பு ஏற்பட்டது.

படிச்சு முடிச்சதும் மூத்த பத்திரிகையாளர் சோலையோடு சேர்ந்து பத்திரிக்கையாளராக் கொஞ்ச காலம் வேலை செஞ்சேன். அப்பா காலமானதும் நானும் முழுசா கட்சிவேலைக்கு வந்துட்டேன். கட்சி அலுவலகத்தில தேவையான எல்லா வேலையும் செய்வேன். ஆனாலும் படிக்கிறதையும் எழுதுறதையும் விடலே. புத்தகங்களும் எழுதிருக்கேன். ‘தமிழ் கவிதைகளில் பெண்கள்’ என்ற புத்தகத்துக்கு 2013-ல் தமிழக அரசின் விருது கிடைச்சுச்சு.

மகனையும் மகளையும் படிக்க வைச்சுட்டேன். கட்சி வேலைகளில் முழுசா இறங்கி 40 வருஷமாகப் போகுது. வாழ்க்கையைத் திரும்பிப்பாத்தா நிறைவாகத்தான் இருக்கு. காலேஜ்ல படிச்சப்போ இருந்த அதே உற்சாகம் இன்னக்கியும் இருக்கு. இந்தியாவுக்கு இடதுசாரி இயக்கங்கள்தான் வழிகாட்டும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை இருக்கு. அந்த நம்பிக்கைதான் வாழ்க்கையை அர்த்தமுள்ளதா மாத்தியிருக்கு”

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்