ஜீன்ஸ் ஆடையை முதலில் தயாரித்தவர்
பேஷன் உலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய ஜீன்ஸ் வகை ஆடையை முதன்முதலில் தயாரித்த லெவி ஸ்ட்ராஸ் (Levi Strauss) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 26). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# ஜெர்மனியின் பவேரியா பகுதியில் உள்ள பட்டன்ஹேம் நகரில் (1829) பிறந்தார். சிறு வயதிலேயே தையல் பயிற்சி பெற்றார். தந்தை இறந்ததும், அம்மா, சகோதரிகளுடன் அமெரிக்காவில் குடியேறினார். நியூயார்க் நகரில் சகோதரர்களின் துணிக்கடையில் வேலை பார்த்தார்.
# கலிபோர்னியாவில் தங்கச் சுரங்கப் பணி மும்முரமாக நடந்தது. பல இடங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து வேலை பார்த்தனர். அங்கு துணி வியாபாரம் செய்தால் லாபம் கிடைக்கும் என்பதால், இவரும் சென்றார். ‘லெவி ஸ்ட்ராஸ்’ என்ற பெயரில் வியாபாரம் தொடங்கினார். நகரில் உள்ள சிறு கடைகளுக்கு மொத்தமாக துணிகளை சப்ளை செய்தார்.
# கூடாரம் அமைக்கப் பயன்படும் கேன்வாஸ் துணியையும் அதிகம் இருப்பு வைத்திருந்தார். மற்ற துணி வகைகள் விற்றுத் தீர்ந்தன. கேன்வாஸ் துணி மட்டும் தேங்கியது. அதை என்ன செய்வது என்று யோசித்தபடியே இருந்தார்.
# தொழிலாளர்கள்தான் இவரது பிரதான வாடிக்கையாளர்கள். இயந்திரங்கள், கரடுமுரடான கருவிகள் மத்தியில் வேலை செய்வதால் பேன்ட் அடிக்கடி கிழிந்துவிடுவதாக அவர்கள் இவரிடம் வருத்தத்தோடு கூறினர்.
# உடனே இவருக்கு பொறி தட்டியது. ‘கேன்வாஸ் துணியில் பேன்ட் தைத்தால், தொழிலாளர்களின் பிரச்சினையும் தீரும்; தேங்கிக் கிடக்கும் தனது துணியும் தீரும்’ என்று யோசித்தார். இவருடன் இணைந்து டேவிட் ஸ்டென் என்ற தையல்காரரும் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்தார். அவரையும் சேர்த்துக்கொண்டு கேன்வாஸ் பேன்ட் தைக்கும் வேலையில் இறங்கினார்.
# சுரங்கத் தொழிலாளிகள் கனமான கருவிகளை பேன்ட் பாக்கெட்டில் வைப்பதற்கு ஏற்ப, பழைய பித்தளை நட்டுகளை பாக்கெட் ஓரம் வைத்து தைத்தார். இந்த உறுதியான பேன்ட் சுரங்கத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
# பிரான்ஸில் இருந்து ‘நீம்’ எனப்படும் கனமான துணியை வாங்கி தைத்தார். இது ‘டெனிம்’ என பெயர் மாற்றம் அடைந்து உலகம் முழுவதும் பரவியது. பிறகு, இத்தாலியில் இருந்து ‘ஜென்னொஸ்’ என்ற நீல நிறத் துணியை வாங்கி பேன்ட் தைத்தார். நாளடைவில் இதன் பெயர் ‘ப்ளூ ஜீன்ஸ்’ என்று மாறி அதுவே நிலைத்துவிட்டது.
# ‘லெவி ஸ்ட்ராஸ் அண்ட் கம்பெனி’ தொடங்கப்பட்டது. கேன்வாஸ் துணியில் பேன்ட் மட்டுமின்றி, சட்டைகள் உட்பட பல்வேறு ஆடைகளும் வரிசையாக வரத் தொடங்கின. உலகம் முழுவதும் பலரும் இதை விரும்பி அணிந்தனர். பேஷன் உலகில் ஜீன்ஸ் வகை ஆடை பெரும் புரட்சியை ஏற்படுத்தியது.
# சமூகத்தில் அந்தஸ்து மிக்க தொழிலதிபராக மாறினார் லெவி. மதம், கல்வி, சமூகப் பணிகளுக்காக தாராளமாக நன்கொடை வழங்கினார். பல்வேறு தொண்டு நிறுவனங்கள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் உதவினார்.
# துணி வியாபாரியாக வாழ்க்கையைத் தொடங்கியவர் தனது வியாபார உத்தியாலும், கடின உழைப்பாலும் மாபெரும் வளர்ச்சி பெற்றார். வெற்றிகரமான வியாபாரியாக சாதனை படைத்த லெவி ஸ்ட்ராஸ் 73-வது வயதில் (1902) மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago