மழை முகங்கள்: நிவாரண முகாம் களப்பணியின் தளபதி வேலையில்லா பட்டதாரி விக்னேஷ்

By பால்நிலவன்

>'தி இந்து' நிவாரண முகாம் நெகிழ்ச்சிப் பதிவுகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் நோக்கில் ஒன்றிணைந்த நல்ல உள்ளங்கள், ‘தி இந்து’ முன்னெடுத்த ‘மீண்டு எழுகிறது சென்னை’ நிவாரண முகாமில் தொண்டாற்றி பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களில் பங்கெடுத்தனர். வந்து குவிந்த உதவிகளும், அவை பாதிக்கப்பட்ட மக்களின் கரங்களுக்கு கொண்டு சேர்ப்பதும் என மிகச் சிறப்பான பணியை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

சென்னை - சேப்பாக்கத்தில் இருந்து செயல்படும் நிவாரண முகாமில், நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களை வழிநடத்தியவர்களில் ஒருவராக களப்பணியில் முத்திரைப் பதித்தவர் விக்கி என்கிற விக்னேஷ்.

டீம் ஸ்பிரிட்டை இவர் தக்க வைக்கும் அழகே தனி. ஒரு தளபதியைப் போல குரலில் கம்பீரம், தட்டிக்கொடுத்து வழிநடத்துவதில் தோழமை, இளமை துள்ளும் புலி டீமின் ஆற்றலை வெளிக்கொணர்ந்து வேலை வாங்குவதில் விவேகமிக்க வெற்றி... இதுதான் விக்கி.

விக்கி, ஜெருசலம் காலேஜ் ஆப் என்ஜினீயரிங்கில் பி.டெக் ஐடி முடித்துவிட்டு வேலைக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அப்பாவுக்கு சிஎம்டிஏவில் அஸிஸ்டெண்ட் பிளானர் வேலை.

''சில அரசியல் கட்சித் தொண்டர்களுக்கு நம்மோட நோக்கம் என்னன்னு கொஞ்சம் தெளிவா சொல்ல வேண்டியிருந்தது'' எனக் கூறும் அவரின் சவால் நிறைந்த களப்பணியின் பளிச் சிதறல் பகிர்வு அனுபவங்கள் இங்கே...

''கன மழையன்றுகூட நண்பர்களோடுதான் இருந்தேன். அதுக்கு ரெண்டுநாள் முன்னாடி ஊட்டியில் திரும்பிகிட்டிருந்தோம். அங்கே மழையில்லை. சேலத்துலயே ஹெவி ரெயின். அங்கிருந்து சென்னை வரும்போது வழியில ஒரு ஆக்ஸிடென்ட். அதனால டபிள் ரோடுல அந்தப் பக்கம் குளோஸ் பண்ணிட்டாங்க. இந்தப் பக்கம் இருக்கற ரோடையே டபிள் ஆக்கிட்டாங்க. மழைல அப்படி வரது ரொம்ப சிரமாமாயிருந்தது.

வண்டலூர் ஜூ ரைட்ல ஓஎம்ஆர்ருக்கு போற வழியில திரும்பினோம். சரியான தண்ணில கார் எங்க நின்னுடுமோன்னு பயந்துகிட்டிருந்தோம். காட் கிரேஸ்... அப்படி எதுவும் ஆகலை. நண்பனை ஓஎம்ஆர் பிளாட்ல விடிகாலை 4 மணக்கு ட்ராப் பண்ணிட்டு காலைல 6 மணிக்கு வீட்டுவந்து படுத்தவன்தான்.

சாயங்காலம் 6 மணிக்கு என்னோட அருமை நண்பன் மொஹமத் தௌசீஃப் வந்து என்னை எழுப்பும்போதுதான் தெரிஞ்சது சென்னைல ஓயாம மழை பெய்ஞ்சிகிட்டிருக்கிறது. அன்னிக்கு என்னை சந்திச்சிட்டு ஃப்ளைட் ஏறி போயிட்டான். அதுக்கு அப்புறம்தான் ஏர்போர்ட்ல தண்ணி நிறைஞ்சி விமானப் போக்குவரத்து கட்டாச்சு. மொத்த சென்னையும் ஸ்தம்பித்துப் போனதெல்லாம்.

அப்புறம் நிலைமை மோசமாகிடுச்சி. நண்பன் மொஹமத் தௌசீஃப் தெனமும் சவூதியில இருந்து செய்தியில சென்னைப் பத்தி தெரிஞ்சிகிட்டு முக்கியமான நேரத்துல நான் ஊர்ல இருந்து ஹெல்ப் பண்ண முடியலையேன்னு வருத்தப்பட்டுகிட்டே இருந்தான்.

சரி இந்த வெள்ள பாதிப்புக்கு ஏதாவது செய்யணும்னு நண்பர்களை சந்திச்சி பணம் கலெக்ட் செஞ்சோம். பாதிக்கப்பட்ட இடங்களுக்குப் போய் உணவுப் பொட்டலம், அத்தியாவசியத் தேவைகள்னு வாங்கிக் கொடுத்தோம். அப்புறம்தான் பிரகாஷ் அப்பா பாக்கியராஜ் சார் மூலமா நம்முடைய இந்த நிவாரண முகாமுக்கு வந்தேன்.

முதல்ல நான் போன இடம் வேளச்சேரி. அங்கே இடுப்பளவு தண்ணீர். ஃப்ளாட்ல மாட்டிகிட்டாங்க.. உலகத்துல என்ன நடக்குதுன்னு அவங்களுக்கு தெரியலை. அவங்களுக்கு இண்டீரியராக போய் பால்பாக்கெட் சாப்பாடு தண்ணீர், பிஸ்கெட், டார்ச் லைட், மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி கொடுத்தோம்.

தண்ணீர் குறைஞ்ச பிறகு மறுநாள் போயிருந்தபோது பாதிபேர் வெகேட் பண்ணிட்டாங்க. பாக்யராஜ் சார் கூப்பிட்டாரு. எங்க >புலி டீம்முக்கு தலைவர் பிரவீன்தான். ஆனா இங்கே அதை டீம் ஆர்கனைஸ் பண்ற வேலை எனக்கு. ஆரம்பத்தில் உருவானது >கால்வின் டீம், எங்க டீம் மட்டும்தான். அதன்பிறகுதான் நிறைய தன்னார்வலர்கள் வர ஆரம்பிச்சாங்க.

ஒரு ஏரியாவுல மக்களுக்கு தேவைப்படுதுன்னா அங்க யாரும் உள்ள போறதில்லை. நான் போயிருந்தப்ப ஒரு இடத்துல பத்து லாரி நின்னுகிட்டிருந்தது. எங்க லாரி பின்னால நின்னுட்டிருந்தது. பாத்தா ஒவ்வொருத்தரும் இந்த கைல ஒரு சாதம் அந்த கைல ஒரு சாதம். எது பிடிச்சிருக்கோ அதை வச்சிகிட்டு இன்னொன்னை தூக்கிபோட்டுடறாங்க. காரணம் ஏரியா வெளியிலேயே நின்னு ஒரே இடத்துல எல்லாரும் நிவாரணப் பொருட்களை கொடுத்து முடிச்சிட்டு திரும்பறதுதான்.

ஆனா நம்ம முகாம் பணியாளர்கள் நிச்சயம் டீப்பா உள்ள போய் எங்ககெல்லாம் பாதிக்கப்பட்டிருக்காங்களோ அங்கெல்லாம் கொண்டுபோய் கொடுக்கறாங்க. எல்லா மக்களுக்கும் சீரியஸா பொருள் போய் சேருது. டோர் டூ டோர் போய் பாத்துப் பாத்து டெலிவரி செய்யறோம். ஒரு ஏரியாவுல சிக்கல் வந்தது.

சில அரசியல் கட்சித் தொண்டர்கள் வழிமறிச்சாங்க. கன்னாபின்னான்னு பொருள்களை எடுக்க லாரியில ஏறப்பாத்தாங்க. அவங்களுக்கு நாம யாரு, நம்மோட நோக்கம் என்னன்னு கொஞ்சம் தெளிவா சொல்லவேண்டியிருந்தது. ஒதுங்கி ஓரமாக நின்னாங்க. அப்புறம்தான் அவங்களைத் தாண்டி போக முடிஞ்சது.

அம்பத்தூர் ஓடியிலிருந்து சரவணன்னு நல்ல ஹார்டு ஒர்க்கர். அவரை மாதிரி பாக்கமுடியாது. காலைல முதஆளா வந்து ராத்திரி 9.30 வரைக்கும் இருப்பார். பேப்பரப் பாத்துட்டு தனியா வந்தவருதான். எங்க டீம்ல இணைஞ்சிகிட்டாரு. இதுமாதிரி நிறையபேரு இந்த முகாம்ல இருக்கறாங்க.

பிஸ்கெட் பாக்கெட்ல எக்ஸ்பையர்டு ஆயிடுச்சின்னு கம்ளெய்ட் வந்தது. அதனால கைல இருக்கற ஸ்டாக்ல விடியவிடிய எக்ஸ்பையர்டு பாக்கெட் எல்லாம் தனியா பிரிச்சி விலக்கி வச்சோம். பாரதி சார் சைன் பண்ணி கொடுக்கற லிஸ்ட் வித்தின் 15 மினிட்ஸ்ல எங்க டீம் ஆட்கள் ரெடி பண்ணி வச்சிடுவாங்க, அவ்வளவு ஸ்பீடு. பசங்கதான் காரணம். லஞ்ச்க்கு அப்புறம் 10 நிமிஷம் ரெஸ்ட் எடுத்துக்குவோம்.

எல்லாரும் போனபிறகு தினமும் எங்களோட குரூப் ஒன்னா உக்காருவோம். என்னென்ன சண்டையோ, என்னென்ன பிரச்சனையோ அன்னிக்கே பேசி முடிச்சுக்குவோம். அதனாலதான் இன்னிக்கு வரைக்கும் எங்க டீம் நல்லா செய்யமுடியுது.

ஒரு விஷயத்தை ரொம்ப சரியா நேர்மையா செய்யும்போது அங்க உண்மையான சேவை உள்ளம் படைச்சவங்க தேடிவந்து உழைப்பைக் கொடுப்பாங்க அப்படிங்கறதுக்கு 'தி இந்து' நிவாரண முகாம் இந்த காலகட்டத்தோடு முக்கிய உதாரணம்....'' என்று கூறிவிட்டு விக்கி என்கிற விக்னேஷ் மீண்டும் தனது டீம் நண்பர்களோடு சென்று வேலையில் தீவிரமானார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்