சுதந்திரப் போராட்ட வீரரும் படைப்பாளியுமான பாண்டுரங்க சதாசிவ சானே (Pandurang Sadashiv Sane) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l அன்றைய பம்பாய் மாகாணம், பால்கட் என்ற கிராமத்தில் பிறந்தார் (1899). ஆரம்பக் கல்வி முடித்த பிறகு, தபோலி தாலுகாவில் உள்ள ஒரு மிஷனரி பள்ளியில் பயின்றார்.
l கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் குடும்ப பொருளாதார நிலை மோச மடைந்ததால் படிப்பு கேள்விக்குறி யானது. ஆனால், இவரது ஒரு நண்பரின் உதவியால் இலவச கல்வியும் உணவும் வழங்கும் ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்ந்து கல்வியை தொடர்ந்தார்.
l ஆனால், அந்த சமயத்தில் நாட்டையே உலுக்கி எடுத்த கொடும் பிளேக் நோய் பரவியதால் மாணவர்கள் அனைவரும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர், புனே சென்ற இவர், நூதன் மராத்தி வித்யாலயாவில் சேர்ந்தார்.
l 1918-ல் மெட்ரிக் தேறினார். பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் வித்யார்த்தி என்ற பத்திரிகையை நடத்தி வந்தார். நியூ புனே கல்லூரியில் மராத்தி மற்றும் சமஸ்கிருத இலக்கியத்தில், இளங்கலைப் பட்டமும் தத்துவத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். அமால்னர் நகரில் உள்ள பிரதாப் உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தார்.
l குறைவான சம்பளமே கிடைத்தாலும் கிராமப் புற பள்ளிகளில் பணிபுரிவதையே விரும்பினார். 1930-ல் மகாத்மா காந்தி தண்டி யாத்திரையைத் தொடங்கிய வேளையில் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, தாய்நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
l ஒத்துழையாமை இயக்க போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக 15 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அதே சிறையில் இருந்த வினோபா பாவே ஞாயிற்றுக்கிழமைகளில் பகவத் கீதை உரைகளை நிகழ்த்தி வந்தார். அதைக் கேட்டு இவர் எழுதிய குறிப்பு களைக் கொண்டு கீதா பிரவசனா என்ற நூலை வினோபா பாவே எழுதினார். சிறந்த படைப்பாளியான இவர் பல நாவல்கள், கட்டுரை கள், வாழ்க்கை வரலாறு மற்றும் நாடகங்களை எழுதியுள்ளார்.
l மொத்தம் 135 நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் பெரும்பாலும் குழந்தைகளுக்கானவை. இவரது ஸ்யாமசி ஆயீ என்ற படைப்பு இந்தியாவின் ஏறக்குறைய அனைத்து மொழிகளிலும் ஜப்பான் மற்றும் ஆங்கில மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. இவரது இலக்கிய படைப்புகள் முற்றிலுமாக சமூக சீர்த்திருத்த கருத்துகளை அடிப்படையாகக் கொண்டவை.
l தலைசிறந்த பேச்சாளருமான இவர், 1930 முதல் 1947 வரை போராட்டங்களில் கலந்து கொண்டதற்காக பலமுறை கைது செய்யப் பட்டார். மொத்தம் ஏழு ஆண்டு காலம் சிறையில் கழித்தார். திருச்சி சிறையில் இருந்தபோது தமிழையும் வங்க மொழியையும் கற்றார்.
l திருக்குறளை மராத்தியில் மொழிபெயர்த்துள்ளார். மாணவர்கள், சானே குருஜி என இவரைப் போற்றினர். மஹாராஷ்டிர மாநிலம் முழுவதும் பயணம் செய்து தீண்டாமை ஒழிப்பு பிரசாரம் செய்தார். பண்டரிபுரத்தில் உள்ள ஒரு கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிக்க வலியுறுத்தி, 11 நாட்கள் உண்ணா விரதம் இருந்தார். இறுதியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் கோவில் திறக்கப்பட்டது.
l கதராடையையே அணிந்து வந்தார். காந்தியடிகள் கொல்லப்பட்டது இவருக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. சுதந்திர இந்தியாவின் பல்வேறு பிரச்சினைகள் குறித்த மனவேதனையில் தவித்தார். அதிகமாக தூக்க மாத்திரைகளை உட்கொண்டதால், தேசத்தின் குரு என போற்றப்பட்ட பாண்டுரங்க சதாசிவ சானே 1950-ம் ஆண்டு ஜுன் மாதம் 50-வது வயதில் மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago