எல்லாக் குடும்பங்களில் இப்படியொரு முகம் உண்டு. நடுத்தர அம்மா வயது தோற்றம். சில முக்கிய நிகழ்ச்சிகளில் எல்லோருடன் கலந்து பழகி மற்றவர்கள் வீட்டு வேலையை தங்கள் வேலையைப் போலவே எடுத்துக்கட்டிச் செய்யும் பாங்கு.
உண்மையில் அப்படியொரு குணத்திற்கு சொந்தக்காரர்தான் ரம்யா. இங்கே வந்தபிறகும் அவருக்கு அப்படியொரு வேலை காந்திருந்தது. புதிதாக வருபவர்களுக்கு என்னென்ன கிட்ஸ் போடவேண்டும் என்று அமைதியாகச் சொல்லிக்கொண்டிருந்தார்.
வீட்டில் இருந்தபடியே ஓர் இந்தி பண்டிட்டாக டியூஷன் சொல்லிக்கொடுக்கும் ரம்யாவுக்கு மயிலாப்பூரில் வீரப்பெருமாள் கோவில் தெருவில்தான் வீடு. கணவர் ஒரு பத்திரிகையாளர். தனது தங்கை மகள் துளசி மீனாட்சி முகாம் பற்றி விவரமாகச் சொல்ல. துளசியுடன் எதிர்வீட்டு ஜெயஸ்ரீயையும் அழைத்துக்கொண்டு வந்து நிவாரண முகாமில் உள்ள உதவிக்கரங்களுடன் சேர்ந்துகொண்டார்.
''எங்க பகுதிகள்ல அதிகம் பாதிப்பு இல்லை. திருநீர்மலைல என்னுடைய சிஸ்டர் இன் லா வீடு தரைத்தளம் மூழ்கிடுச்சி. பொருட்கள் இழப்பு ஏற்பட்டுடுச்சி. நல்லவேளையா அந்த வீட்ல இருந்த என்னோட சிஸ்டர் இன் லா குடும்பதை படகுல வந்து சிலர் காப்பாத்தியிருக்காங்க. சரி போன்போட்டு பேசலாம்னா அதுக்கும் வாய்பில்லை. இதைக் கூட என்னால இன்னொரு சகோதரிகள் மூலமாதான் இதை தெரிஞ்சிக்க முடிஞ்சது.
சென்னைக்குள்ள தண்ணீர் வந்துகிட்டிருக்கற விஷயத்தை டிவியில பார்த்ததும் ரொம்ப அதிர்ச்சியாயிடுச்சி. ஏராளமான மக்களோட வாழ்க்கை கேள்விக்குறியானதைப் பாத்து சங்கடப்பட்டேன். சரி நம்மால முடிஞ்சதையாவது செய்யலாம்னு இங்கே வந்தோம்.
இங்கே வந்தபோது, முதல்ல எனக்கு ஒரு ஆறேழு பேர் கொடுத்தாங்க. நான் உட்பட எல்லாரும் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்துக்கு தேவையான அடிப்படைப் பொருள்களை 1500 பைகள்ல போட்டோம். மறுநாள் 2000 பைகள் ரெடி செய்தோம். பேஸ்ட், பிரஷ், சோப்பு, கேண்டில், மேத்ஸ்பாக்ஸ், டவல், பிஸ்கெட், ஓடோமாஸ், டூத் பேஸ்ட், சோப்புன்னு 4 நாள்ல 6,300 பைகள் ரெடி பண்ணோம்.
கால்வின் டீம்ல என் மகன் அஸ்வின் கிருஷ்ணசாமி ஒருநாள் வேலை செஞ்சான். மனசு ரொம்ப திருப்தியா இருக்கு. என்னால பெரிசா பாதிக்கப்பட்டவங்களுக்கு கோடிகோடியா பணஉதவிகள் செய்யமுடியலைன்னாலும் ஏதோ என்னால முடிஞ்சதை செய்யற திருப்தி இருக்கு.
ரம்யாவின் தங்கை மகள், ''துளசி மீனாட்சி பேப்பர்ல பாத்துட்டு பாரதிதமிழன் சாருடன் தொடர்பு கொண்டேன். காலேஜ்ல ஏற்கெனவே சாரிட்டிக்காக நிறைய ஆக்டிவிஸ்ட்டா இருந்த அனுபவம் இருக்கு. ஆனா ரிலீஃப் கேம்ப்ல பணியாற்றும் அனுபவம் இதான் மொதல்ல. எங்களால முடிஞ்ச பிஸிகல் ஹெல்ப் கொடுக்கமுடியுதுங்கற சேடிஸ்ஃபேக்ஷன் கிடைச்சிருக்கு'' என்றார்.
ரம்யாவின் எதிர்வீட்டில் குடியிருக்கும் ஜெயஸ்ரீ கூறும்போது ''பள்ளியில என்எஸ்எஸ் மூலமா கேன்சர் இன்ஸ்டியூட்டுக்கு போய் அங்க சிகிச்சையெடுத்துக்கற நோயாளிகளை மகிழ்ச்சிப்படுத்தும் நலப்பணிகள்ல ஈடுபட்டோம்.
நிவாரண முகாம்ல வந்தபிறகு நம்ம மக்களை தூக்கிவிட இவ்வளவு பேர் வந்ததைப் பாத்ததும் ரொம்ப மகிழ்ச்சியா இருநதது. இங்க வந்து நிறைய ஃபிரண்ட்ஸ் கிடைச்சாங்க. அண்ணா, அம்மா, அக்கான்னு கூப்டு பேசும்போது ஒரு குடும்பம் மாதிரியான ஃபீலிங் வந்தது. இப்போ நாங்கள்ல்லாம் வாட்ஸ்அப் குரூப் கிரியேட் பண்ணியிருக்கோம்.
இனிமே நாங்கள்லாம் ஏதாவது ஒன்னு யாருக்காவது செய்யணும்னா எல்லாரும் ஒன்னுசேருவோம்.'' எனக் கூறும் ஜெயஸ்ரீ மேலும், ''அதற்குக் காரணமான தி இந்து நிவாரண முகாமுக்கு எங்களோட மனமார்ந்த நன்றிகள்'' என்றார் புதிய நண்பிகள் கிடைத்த மகிழ்ச்சியில்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago