மழை முகங்கள்: தன்னார்வலர்களை நெறிப்படுத்திய அன்பதிகாரி ஸ்ரீனிவாசலு!

By பால்நிலவன்

'தி இந்து' நிவாரண முகாம் நெகிழ்ச்சிப் பதிவுகள்

கம்பீரமாக ஒலிபெருக்கியில் ஒரு குரல் ஒலித்துக்கொண்டிருந்தது. அது பலரையும் பம்பரம்போல சுழலவைத்துக்கொண்டிருந்தது. போர்க்கால நடவடிக்கையை விரைந்து செயலாற்றும் ஒரு திட்டத்துறை அதிகாரியைப் போல் அவர் செயல்பட்டுக்கொண்டிருந்தார். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், தி இந்து நிவாரண முகாம் எனும் கப்பலை தொய்வின்றி செலுத்திய மாலுமிகளுள் ஒருவர் என்றே இவரைச் சொல்லலாம்.

நேர்கொண்ட பார்வையும் நிலைமாறா திடமும் கொண்ட ஜி.ஸ்ரீனிவாசலுவை அங்கு வந்திருந்த தன்னார்வலர்கள் இனி தன்வாழ்வில் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடமுடியாது.

மருத்துவ தொழில்துறையில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஹெல்த் கேர் ஸ்டோரேஜ் சிஸ்டத்தைத் தயாரிக்கும் தைவானீஸ் நிறுவனமான டான்கோவின் இந்தியன் டிஸ்டரிபியூட்டராக செயல்பட்டு வருபவர். ஏற்கெனவே பி.எம்.டபிள்யூவில் பிஸினெஸ் ஹெட்டாகவும், விப்ரோ போன்ற சாஃப்ட்வேர் நிறுவனங்களிலும் பணியாற்றியவர்.

இந்தியாவையும் உலகின் பல நாடுகளையும் பலமுறை வலம் வந்திருக்கிறார். குதிரையேற்றம், படகோட்டுதல் மார்ஷியல் ஆர்ட் என பலகலைகள் தெரிந்த சீனிவாசலு அன்று தொலைக்காட்சி செய்தியைப் பார்த்துவிட்டு, உடனே தனது காரை எடுத்துக்கொண்டு அசோக் நகர் பகுதியில், வெள்ளத்தில் மாட்டிக் கொண்டவர்களை மீட்கப் புறப்பட்டுவிட்டார்.

''டிசம்பர் 2 அன்று அசோக் நகர், கே.கே.நகர், எம்.ஜி.ஆர்.நகரில் நீரில் மூழ்குவதைப் பார்தேன். எனக்கு நீச்சல் தெரியும். அதனால் யாரையாவது வெள்ளத்திலிருந்து மீட்டுக்கொண்டுவர போனேன்.

யாசர் எனும் முகமறியா நண்பர்

எனக்கு வில்லிவாக்கத்தில்தான் சார் வீடு. அங்கிருந்து 100 அடி சாலைவழியா கோயம்பேடு வந்தா வழி பிளாக் ஆயிருக்கு. சரி காரை பார்க் பண்ணிட்டு மெட்ரோ டிரெயின்ல போலாம்னு போனா டிரெயின் சர்வீஸும் கேன்சல். இறங்கிவந்து வேறெருத்தரோட கார்ல லிப்ட் கேட்டு ஏறினேன். அவர் பேரு யாசர்.

நீரில் சிக்கியவர்களை மீட்டல்

ஈகா சேத்பட், லயோலா காலேஜ் வழியா வள்ளுவர் கோட்டம் வழியா வடபழனி வரைக்கும் வந்து என்னை யாசர் இறக்கிவிட்டாரு. அங்கிருந்து தண்ணில நடந்தே பில்லர் வந்தேன்.

அன்னிக்கு ராத்திரி 9 மணி வரைக்கும் என்னால நீந்தி போய் சிலபேரை நான் மீட்டுக்கொண்டுவந்தேன். கார்ல வரும்போது என்னோட பிரச்சனைய புரிஞ்சிகிட்ட யாசர் மூனுநாள் தன்னோட பொலிரோ காரை ஓட்டிட்டு வந்து என்னோட வந்து உதவிகள் செய்தாரு.

அசோக் நகர், 10வது அவென்யூ, 11வது அவென்யூ, 12வது அவென்யூ என போகப்போக வெள்ளநீரின் ஆழம் கூடிக்கொண்டே போகிறது. என்டிஆர்எப் (தேசிய பேரிடர் மீட்புப் படை) வந்து சேர்வதற்குள் என்னைப்போல ஒரு நூறுபேராவது வெள்ளத்தில் நீந்திச் சென்று ஆட்களை மீட்டுக்கொண்டு வந்துகிட்டிருந்தாங்க. நான் ஏழு பேரை மீட்டுக்கொண்டுவந்தேன்.

அசோக் நகர் மக்களுக்கு கேட்டரிங் உணவு

அதேநேரத்தில் தண்ணீரிலிருந்து மீண்டு வந்துகொண்டிருப்பவர்களுக்கு சாப்பாடு பொட்டலம் கொடுத்தேன். இப்பணி மூன்று நாட்கள் தொடர்ந்தது. அண்ணா நகர்ல விஜய் கேட்டரிங்ல சொல்லி சாப்பாடு செய்துகொண்டுவந்து 1500 பேருக்கு கொடுத்தேன்.

அசோக் நகர், சீனிவாச தியேட்டர் அருகாமையில், ஜாபர்கான் பேட்டை கங்கையம்மன் கோயில் தெரு என மக்களுக்கு வீடுவீடாக நீரில் சென்றுபோய் கொடுத்தேன். அந்த நேரத்தில் சமைத்து சாப்பிட இயலாமலிருந்த அம் மக்கள் ஆர்வமா போட்டிப்போட்டிக்கொண்டு வந்து வாங்கினாங்க.

கொஞ்சநேரத்துல காலியாயிடுச்சி. மேற்கு மாம்பலத்துல தேவநாதன்தெருவில் எல்லாரும் ஐயங்கார்கள். நான் சாப்பாடு வந்திருக்கேன், எல்லாரும் வாங்கன்னு தண்ணியில குடைபிடிச்சிகிட்டு கத்தறேன்.ஆனா யாரும் வந்து வாங்கறமாதிரி தெரியலை. ''ஹைஜெனிக்கா பேக் பண்ணியிருக்கு''ன்னு கேட்டரிங் கம்பெனி பேரச் சொன்னபிறகுதான் வந்து வாங்கிகிட்டுப் போனாங்க.

(இதற்கிடையில் சீனிவாசலு, தொலைபேசியை எடுத்தார். யாசரிடம் செய்து நலம் விசாரித்துவிட்டு பேட்டி எடுக்கப்படுவதை பற்றி குறிப்பிட்டார். நம்மிடம் தொலைபேசி தர நாம் யாசரிடம் பேசினார். ''மூனு நாளு அவரோட கார்ல வந்து உதவி செஞ்சிங்கலாமே'' என கேட்டோம். ''நம்ம மக்கள்சார். இந்த நேரத்துல உதவலைன்னா வேற எப்ப சார் செய்யப் போறோம்'' என்று கூறியவருக்கு வாழ்த்துதல் தெரிவித்துவிட்டு போனை அவரிடம் தந்தோம்.)

மீண்டும் சீனிவாசலு தொடர்ந்தார்

நம்முடைய இந்த முகாமுக்கு சனிக்கிழமையிலிருந்து 12வது நாளா வர்றேன். கடலூர்ல தன்னார்வலர்கள் போதலைன்னு என்னை அனுப்பினாங்க. என்னுடன் இங்கிருந்து 20 பேரை அழைச்சிகிட்டு போனேன். அங்கே போய் 20 பேரை சேத்துகிட்டோம். 2 நாள்ல 31 கிராமங்களில் சுமார் 7 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினோம்.

கடலூர் பயணம்

இங்கே இருக்கற மொத்த ரிலீஃப் கேம்ப்பையும் இன்வென்ட்ரி பாக்கறதுக்கு ப்ரியா மேம், கால்ஸ் அட்டன்பண்ண கோமதி மேம், அப்புறம் பாலாஜின்னு ஒருத்தர் ஆக மூனு பேரு பாத்துகிட்டாங்க. அவங்களையும் சேத்து முழு கேம்ப்பையும் நிர்வாகம் செய்யற வேலை என்னுடையது.

கையில் இருக்கற மைக் மூலமா எல்லாருக்கும் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் தருவேன். ஏதாவது பிரச்சனைன்னா இந்த முகாம் வளாகத்துல எந்த மூலையில சம்பந்தப்பட்டவங்க இருந்தாலும் அவங்க உடனடியா வரவழைக்க பிரச்சனை சரியாயிடும்.

பல்வேறு தளங்களிலிருந்து வந்த தன்னார்வலர்கள்

இங்க வந்து தன்னோட வேலைகளைப் பகிர்ந்துகிட்டவங்களைப் பத்தி சொல்லியே ஆகணும். ஹிண்டு படிக்கற வாசகர்கள்தான் பெரும்பாலும் இங்க வந்து வேலைசெஞ்சிருக்காக. பல்வேறு தளங்களிலிருலுந்து வந்து அவங்கள் பணியாற்றினாலும் அவங்களோட ' டெலிஜன்ஸ்' அதாவது ' செம்மையாக செயல்படுதல்' என்கிற குணம் அவங்க எல்லாரும் தி இந்து படிக்கறவங்க அப்படிங்கறதை எடுத்துக் காட்டியிருக்கு.

15 சாஃப்ட்வேர் எக்ஸ்கியூட்டிவ்ஸ், 15 லா காலேஜ் ஸ்டூடண்ட்ஸ், 2 டாக்டர்ஸ், பல்வேறு வகை தொழிற்சாலை நிர்வாகிகள், கல்லூரி மாணவர்கள் 60, 70 பேர், எல்லா நாட்கள்லயும் வந்த குடும்பத் தலைவிகள் 30, 40 பேர். இவங்க எல்லாரும் ஒருநாளைக்கு குறைந்தது 100ம் அதிகப்பட்சம் 150 பேருமா வந்தாங்க. இதுமட்டுமல்லாம கோமதி மேம்மோட ஹஸ்பெண்ட் எஸ்.என்.சுரேஷ் வந்து ரெண்டுநாள் வேலைசெஞ்சாரு.

ப்ரியா மேம்மோட ஹஸ்பெண்ட் ஜவஹர்பாபு வந்து ஒருநாள் வேலை செஞ்சாரு. வசந்த்னு ஷிப்பிங் கார்ப்பரேஷன் நடத்தறவரு அவரோட பங்களிப்பு செஞ்சிருக்காரு. பாலாஜிங்கற ஒரு பிஸினஸ்மேன் டிரான்ஸ்போர்ட் ஆபரேட்டர் தன்னோட 2 Eisher Vanகளை 2 டிரைவர்களோட ஒரு வாரத்துக்கு அனுப்பிவச்சாரு.

முதல் நாள் வாலெண்டியருக்கு நான் சாப்பாடு புரொவைட் செஞ்சேன். ஆனா அதுக்கப்புறம் எல்லா நாளும் என்வி சாப்பாடு ஸ்பான்சர் போலீஸ் அஸிஸ்டெண்ட் கமிஷனர் பீர்முகம்மது அவங்க. வெஜ் சாப்பாடு அரேன்ஜ் பண்ணது நம்ம ஹிந்து கேன்டீன்.

பார்வையிட வருகை தந்த வி.ஐ.பிக்கள்

இந்து பத்திரிகையின் ராம் சார், அவரோட வந்த தி இந்துவின் 3 டைரக்டர்ஸ், 90 வயசுலயும் கேம்ப்க்கு வந்து பார்வையிட்ட டாக்டர் எம்.எஸ் சுவாமிநாதன், எப்பவும் பிஸியான ஷெட்யூல்ல இருக்கற நடிகர் சூர்யா என முக்கியமான பலரும் வந்து எல்லா தன்னார்வலர்களையும் அழைச்சிப் பாராட்டினாங்க. அந்தப் பாராட்டு எங்கள் பணிகளை மேலும் ஊக்கப்படுத்தியதுன்னுதான் சொல்லணும்.

கிட்டத்தட்ட ஒரு லட்சம் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டுபோய் சேர்த்திருக்கோம். நிவாரணப் பொருட்களை ஏனோதானோன்னு கொடுக்க மாட்டோம். ஒவ்வொரு இடங்களையும் பாதிக்கப்பட்ட இடங்களில் குறிப்பிட்ட பகுதிகளை தன்னார்வலர்கள் போய் ஆய்வு செய்வாங்க.

பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் லிஸ்ட் தருவாங்க. அதன் அடிப்படையில நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைப்போம். அதக்கொண்டுபோய் டோர் டூ டோர் தருவாங்க. நம்ம லட்சியம் நிறைவேறியதுக்கு இந்த வழிமுறைகள் ஒரு முக்கிய காரணம்.

எனக்கு இந்த வாய்ப்பு இறைவன் அளித்ததுன்னுதான் நெனைக்கறேன். தனிமனிதனா செய்யும்போது வரையறைகளும் கட்டுப்பாடுகளும் இருக்கும் ஹிண்டு வாயிலா செய்யும்போது விரிந்த அளவுல விரிந்த தளத்துல உதவிகளை செய்யக்கூடிய ஒரு வாய்பபு கிடைச்சது.

ஒத்த நல்லெண்ணம் கொண்ட தன்னார்வலர்களை சந்திக்கவும் அவங்களோட இணைஞ்சி வேலை செய்யவும் இந்த வாய்ப்பை நல்கிய தி இந்து மற்றும் பாரதிதமிழன் அவர்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கேன்'' என்று கூறியவரிடமிருந்து கைகுலுக்கி நன்றி தெரிவித்து விடைபெற்றோம்.

ஆனாலும் ஸ்ரீனிவாசனின் இதயத்தின் உள்ளிருந்து புறப்பட்ட அந்த உறுதிமிக்க கம்பீர குரலிலிருந்து நாம் விடைபெறுவதற்கு சற்று நேரம் பிடித்தது.

தவறவிடாதீர் ->'தி இந்து' நிவாரண முகாம் நெகிழ்ச்சிப் பதிவுகள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்