பிரேசிலில் உலகக் கோப்பை போட்டிகள் நடப்பதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். உலகக் கோப்பை பரபரப்பில் அறிக்கைகளில் தலைவர்களின் பெயர்கள் மிஸ்ஸாகிவிட்டன. சிண் டைப் பிய்த்துக்கொண்டு யோசித்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. எது யாரு டைய அறிக்கை என்று நீங்களே கண்டு பிடித்து தெரிந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இனி வாழ்த்து அறிக்கைகள்:
இப்போதே பயணம் புறப்படு தம்பீ!
தென்அமெரிக்க நாடான பிரேசிலிலே உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டி கள் கடந்த ஜூன் திங்கள் 12-ஆம் தேதியிலே தொடங்கப்பெற்று, ஜூலைத் திங்கள் 13-ஆம் தேதி வரையி லேயே நடக்கவிருக்கின்றது. உலகம் முழு வதுமிருந்தெல்லாம் நம் கழகக் கண்மணி களும் கால்பந்தாட்ட ரசிகக் கண்மணிகளும் அங்கே குழுமியிருக்கின்றார்கள்.
இந்தத் தருணத்திலே, 1975-ஆம் ஆண்டு நடந்த சம்பவம் ஒன்று என் நெஞ்சில் நிழலாடுகிறது. போர்ச்சுகல் கால்பந்து அணியின் ஜாம்பவானாகத் திகழ்ந்த வீரர் எசிபியோ, என்னைச் சந்திப்பதற்காக எனது இல்லத்துக்கு வந்திருந்தார். அவ ரது தந்தையும் காலமாகிவிட்டார். அத னால், அவரது தந்தை காலத்திலி ருந்தே எங்களுக்கு மிகவும் நெருங்கிய வர்கள்தான். நான் எப்போது போர்ச் சுகலுக்கு போனாலும் அவர் வீட்டுக்கு போகாமல் இருப்பதில்லை. அவரும் சென்னை வந்தால் என்னைச் சந்திக் காமல் போவதில்லை. அவர் ஒரு முறை கால்பந்து விளையாட்டிலே அடி பட்டுக்கொண்டு, வலியால் துடித்தபோது தம்பீ என்று ஓடிச்சென்று நான் களிம்பு போட்டுவிட்டேன். சமீபத்தில் பார்த்த போதுகூட அதை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார் எசிபியோ. (‘‘யோவ் பி.ஏ.! எசிபியோ இறந்துட்டார்ல.. ஒருதடவைக்கு ரெண்டு தடவை நல்லா கன்பார்ம் பண் ணுய்யா.. நானும் லென்த்தா இழுத்துக் கிட்டே போய்ட்டிருக்கேன்’’ - ‘‘இறந்துட் டாருங்கய்யா’’ - ‘‘அப்ப ஒண்ணும் பிரச்சி னையில்ல’’)
தற்போது அவர் இல்லை. அவர் போன்ற எண்ணிலடங்கா வீரர்கள் உருவாக் கித் தந்திருக்கிற கால்பந்துப் போட்டி ஆல் போல் தழைத்து ஆகாயமளவுக்கு உயர்ந்து நிற்கின்றது. பீலே, மரடோனா மற்றும் நான் போன்றவர்க ளெல்லாம் கால்பந்துப் போட்டிகள் பற்றி கூடிப்பேசினோம். சாதாரணமாக உள் ளூர் அளவிலேயே நடத்தப்பட்டுவந்த கால் பந்துப் போட்டிகளை உலக அளவிலே நடத்தி, உலகக் கோப்பை என்ற ஒன்றையும் வழங்க வேண்டும் என்ற கருத்தைக்கூட நான்தான் முன்மொழிந்தேன். மரடோனா என் கருத்தை வெகுவாகப் பாராட்டினார். பிறகுதான் உலகக்கோப்பை என்ற ஒன் றையே ஆரம்பித்தார்கள்.
மேலும், உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை வந்தால் அரசு பொது விடுமுறை விடவேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதி னேன். மிகவும் போராடி அரசு விடு முறை பெற்றுத் தந்ததும் என் ஆட்சிக் காலத்தில்தான்.
இதோ போட்டிகள் தொடங்கிவிட்டன. நாக்-அவுட் சுற்று, காலிறுதி, அப்புறம் அரை யிறுதி என்று இப்படியே நாள்கள் ஓடி விடும். இறுதிப்போட்டிக்காக இப்போதே பயணம் புறப்படு! பத்திரமாக வந்திடு!! உன் வரவுக்காக என் விழிகள் காத்திருக் கும்.
இவ்வாறு கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
பார்ப்பீர்களா.. பார்ப்பீர்களா..
வேலைவெட்டி இல்லாத ஒரு வன் உட்கார்ந்து யோசனை செய்துகொண் டிருந்தான். என்ன செய்கிறீர்கள் என் றாள் மனைவி. ‘‘ஒரு ஆட்டுக்குட்டி வாங்கப் போகிறேன். அது வளரும். நிறைய குட்டிகள் போடும். குட்டிகளை சந்தையில் விற்றுக் கிடைக்கும் பணத்தில் ஒரு பசு மாடு வாங்குவேன். பசு நிறைய பால் கொடுக் கும். பண்ணையில் விற்று சம்பாதிக்கலாம். நாமும் காபி குடிக்கலாம். என் பெற் றோருக்கும் கொடுக்கலாம்’’ என்றான். ‘‘அடுத்த தெருவில் இருக்கும் என் அம்மா வீட்டுக்கும் பாலைக் கொடுப்பேன்’’ என்றாள் மனைவி. இருவருக்கும் சண்டை வந்து விட்டது. அப்போது வேகவேகமாக பக் கத்து வீட்டுக்காரன் ஓடிவந்தான். ‘‘யோவ் உன் மாடு என் தோட்டத்தில் மேய்ந்து பயி ரெல்லாம் நாசமாகிவிட்டது. நஷ்டஈடு பத்தா யிரம் ரூபாய் கொடு’’ என்று கத்தினான். ‘‘இன்னும் மாடு வாங்கவே இல்ல. உனக் கும் தோட்டமே இல்ல. இல்லாத தோட்டத் துக்குள்ள இல்லாத மாடு எப்படி மேயும்?’’ என்றான் இவன். ‘‘வாங்காத மாடு, பால் கறந்து உங்க அப்பா வீட்டுக்கும் அவங்க அம்மா வீட்டுக்கும் கொடுத்தனுப்பும்போது, இல்லாத தோட்டத்துல மேயாதா?’’ன்னு கேட்டானாம். இதுபோலத்தான் இல்லாத விஷயங்களுக்கு நிறைய பேர் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், உருப்படியாக ஒரு விஷயத்துக்கு சண்டை போடுகிறார்கள் என்றால் அது உலகக் கோப்பை கால்பந்து போட்டிதான். சுவாரஸ்யமான அந்த போட்டியைப் பார்ப்பீர்களா? பார்ப்பீர்களா??
சமீபத்தில் நடந்த போட்டிகளில் போஸ் னியா அணியும் ஹோண்டுராஸ் அணியும் பரிதாபமாக தோல்வி அடைந்தது என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயர மும் வேதனையும் அடைந்தேன். அந்த அணி களுக்கு என் ஆறுதல்களை நான் தெரி வித்துக்கொள்வதோடு நான் அவர் களது அணிக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கு மாறு நான் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
கிரேக்கத்திலும் ரோமாபுரியிலும்
ஆண்டான்கள் கோலோச்சியதும் எந்த உரிமையும் கிடைக்காமல் அவர்களுக்கு சேவகம் செய்கிற அடிமைகளும் வாழ்கிற காலம் கிரேக்கத்திலும் ரோமாபுரியிலும் இருந்தது. ஏதென்ஸ் நகரமும் ரோம் நகரமும் இதைப் பற்றி கதை கதை யாகச் சொல்லும். எத்தியோப்பியா, மாசி டோனியாவிலும்கூட இதற்கான ஆதாரங் கள் இருக்கின்றன. அடிமைகள் என்று இந்த உலகில் யாரும் இல்லை. தேர் ஈஸ் நோ ஸ்லேவ்ஸ் இன் த வேர்ல்ட். உரிமை என்பதற்கும் வன்முறை என்பதற் கும் வித்தியாசம் இருக்கிறது. தேர் ஈஸ் எ டிஃப்ரன்ஸ் பெட்வீன் ரைட்ஸ் அண்ட் வயலன்ஸ். அதற்கு அருமையான உதாரணம்தான் இந்த கால்பந்துப் போட்டி. த ஸாக்கர் கேம் ஈஸ் தி எக்ஸ லன்ட் எக்ஸாம்பிள் ஃபார் தட். போராடி கோல் அடிப்பது நம் உரிமை. அதே நேரம், வேண்டுமென்றே வன்முறை வன்மத் தோடு தாக்குதல் நடத்தினால் அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றி விடுவார்கள்.
வல்லூறுகளை சின்னஞ்சிறு சிட்டுக் குருவிகள் விரட்டியடிக்கும் காலம் வந்து விட்டது. சாம்பியன் ஸ்பெயினை நெதர் லாந்து புரட்டியெடுத்ததைப் பார்த்திருப் பீர்கள். என் வாழ்க்கையைப் போலவே கரடுமுரடுகளும் கற்களும் முற்களும் நிறைந்ததுதான் இந்த கால்பந்தாட்டப் பாதை. உலகெங்கும் வாழும் கால்பந்து ரசிக உறவுகளே! புலம்பெயர்ந்து வாழ் பவர்களே! போன முறை இதே உலகக் கால்பந்து போட்டிகள் நடந்து முடிந்து நான்கு ஆண்டுகள் ஓடி மறைந்து விட்டன. ஃபோர் இயர்ஸ் பாஸ்டு! எந்த லட்சியத்துக்காக போனமுறை நூற்றுக் கணக்கான வீரர்கள் மோதி சண்டை யிட்டுக்கொண்டார்களோ, கோல் அடித்தார் களோ, வியர்வை சிந்தினார்களோ, நடு நடுவே குளிர்பானம் குடித்தார்களோ, அதே போட்டிகள் மீண்டும் நடக்க ஆரம்பித்து விட்டன. பட்டத்துக்கும் பதவிக்கும் அதி காரத்துக்கும் துளியும் ஆசையின்றி வியர்வை சிந்தவும் ஓடி உதைத்து உழைக் கவும் உதைப்பதை ரசிக்கவும் விருப் பம் உள்ளவர்கள் மாபெரும் திருப்புமுனை யையும் புரட்சியையும் ஏற்படுத்தப்போகிற கால்பந்தாட்டப் போட்டியிலே கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றேன். உரி மைக்கு குரல் கொடுப்போம். கோலுக்கு விசில் கொடுப்போம்!!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முழுநிலவில் நிழல் கோப்பை
கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டப் பகுதிகளிலேயே ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்பே சக்கர வடிவில் பந்து போன்ற ஒன்றை உருட்டி விளையாண்டிருக்கிறார்கள் என்பதற்கான வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன. அந்த சக்கரப்பந்துதான் ‘ஸாக்கர்’ என மாறியிருப்பதாக தெரிகிறது.
மேலும், நம்முடைய பண்பாடு, கலாச்சாரம் சாராமல் மேலைநாட்டுக் கலாச்சாரத்திலேயே விளையாடப்படும் கால்பந்துப் போட்டியில் இரு பிரிவினர் இடையே சமுதாய மோதல் போக்கு காணப்படுகிறது. இது ஆரோக்கிய மானதல்ல.
எனவே, தமிழகத்தின் பண்டைய விளையாட்டான சக்கரப்பந்து போட்டி களை இங்கு நடத்தத் தொடங்கி அதை உலக அளவுக்கு கொண்டு செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அது மட்டுமின்றி, நிழல் நிதிநிலை அறிக்கைகள் வெளியிடுவது போல, ஆண்டுதோறும் சித்திரை முழுநிலவு நாளில் மாமல்லபுரத்திலே நிழல் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை எங்கள் கட்சி சார்பில் நடத்த முடிவு செய்திருக்கி றோம். மதுவை ஒழிப்போம். 2031-ல் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்போம். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago