புரசைவாக்கம் பட்டாளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆர். அஞ்சும் ரக்ஷான். எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் 2வது வருடம் படிப்பவர். தினமும் பைக்கில் வந்து செல்பவர். அப்பா பாரீஸில் சொந்தமாக ஸ்டேஷனரி கடை வைத்திருக்கிறார்.
''எந்தவிதமான நேரடி பாதிப்பும் எங்களுக்கு இல்லை. காரணம் நாங்க தங்கியிருக்கிறது 9வது மாடி. எங்களோட 9வது மாடியிலிருந்து பாத்தா மொத்த சென்னையும் தண்ணியில மெதக்குற மாதிரி தெரிஞ்சது. எங்களோட 2 பிளாக்ல இருக்கற 52 குடும்பங்களும் 50 கிலோ அரிசி சமைச்சி எடுத்துகிட்டு போனோம். அப்பா அண்ணன்தான் கொண்டு போனாங்க.
பின்னால கார்ப்பரேஷன் ஸ்கூல்ல தங்க வச்சிருந்த ஜனங்களுக்கு சப்ளை செஞ்சாங்க. கிட்ட இருக்கறவங்களுக்கு எல்லாமே கிடைக்குது. தூர இருக்கறவளைத் தேடி போய் கொடுக்கமுடியாத சூழ்நிலை. மீட்பு முகாம்ல எல்லாரும் தங்கியிருக்கும்போது எல்லாருக்கும் நம்மோட உதவிகள் போய் சேருதுங்கற செய்தி ரொம்ப திருப்தியா இருந்தது.
சேப்பாக்கம் முகாம் பத்தி பேப்பரப் பாத்து தெரிஞ்சிகிட்டாலும் அப்பாவோட நண்பர் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் மூலமா முழு விவரம் தெரிஞ்சது. அப்புறம்தான் இங்கே நானும் எந்த தங்கையும் என் கிளாஸ்மேட் வித்யாகல்யாணியும் கிளம்பி வந்தோம்.
இங்க எங்களோட பேக்கிங் பிரிவுல ரெயில்வே உள்ளிட்ட பல்வேறு துறையைச் சார்ந்தவங்க இருக்காங்க. ரெயில்வேன்னா வெறும் ரெயில்வே ஸ்டாப் மட்டுமில்ல... அவங்களோட பசங்க, தெரிஞ்சவங்க எல்லாரையும் அழைச்சிட்டு வரமுடிஞ்சது. இந்தமாதிரி எந்த பேதமுமில்லாம மொத்தமா ஒரு குடும்பமாதிரி இருக்கு.
''காலேஜைவிட எனக்கு இங்கதான் பிடிச்சிருக்கு'' என்று சிரித்தவாறே கூறும் அஞ்சும் ரக்ஷானின் நண்பி வித்யா கல்யாணிக்கு பட்டினப்பாக்கத்தில் வீடு.
''அப்பா ஜார்கண்ட்டில ரெயில்வே இருக்கார். நான் இங்க அத்தை வீட்டில் தங்கி படிக்கிறேன். மழைவந்தாலே எங்க குடியிருப்பெல்லாம் ரொம்ப ஒழுக ஆரம்பிச்சுடுது. சீனிவாசபுறம் வெள்ளம் கடலோட சேர்ற பகுதிகள்ல மாடு, தொப்புள்கொடி அறுக்கப்பட்ட நிலைல பொறந்த கொழந்தைகூட வெள்ளத்தில அடிச்சிட்டு வந்ததுன்னு சொன்னாங்க. அன்னிக்கெல்லாம் ரொம்ப பயந்துநடுங்கிகிட்டு இருந்தோம்.
இங்க வந்து உதவிப்பணிகள்ல ஈடுபடறது ரொம்ப பிடிச்சிருக்கு. மார்னிங் டென் டூ சிக்ஸ் வர்றோம். இந்தமாதிரி நிறைய பேரு இங்க வந்து செய்யறதைப் பாக்கும்போது மனசு ரொம்ப ஆறுதலா இருககு. மதவேறுபாடு, வயசு வித்தியாசம் எதுவும் இல்ல. ஒர்க்லோடு எவ்வளவு இருந்தாலும் எதுவும் தெரியறதில்லை. காலேஜைவிட இங்கதான் பிடிச்சிருக்கு, நம்மோட பணி மக்களுக்கு நேரடியாக போய் சேருதுங்கற திருப்திக்காக'' என்றுவிட்டு சிரித்தார்.
அருகிலிருந்து ரக்ஷானின் தங்கை காஷ்பா ரஹ்மான் கூறிய தகவல்கள் நமக்கு புதியதாய் இருந்தன,
''எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கற அக்பரி மசூதியில் மைக்ல ராத்திரி 10 மணிக்கு வெள்ளத்தைப் பற்றிய எச்சரிக்கை அறிவிச்சாங்க. எல்லாரையும் வந்து தங்கிக்க சொன்னாங்க. முஸ்லீம் பீப்பிள் மட்டுமல்ல எல்லாவித, எல்லாமத மக்களும் மாஸ்கினுடைய முதல்மாடி ரெண்டாவது மாடி முழுக்க நானூறு ஐநூறு பேர் வந்து தஞ்சம் புகுந்தாங்க. அங்கேயே எல்லாருக்கும் வெஜிடபிள் பிரியாணி செஞ்சி கொடுத்தாங்க. எங்க பிளாட்ஸ் பொறுத்தவரைக்கும் எங்க வீட்ல செஞ்சதை ஸ்கூல்ல தங்கியிருந்த மக்களுக்கு கொடுத்தமாதிரி, 7வது மாடியில இருக்கற மார்வாடி குடும்பம் 1,500 சப்பாத்தி தயார் செஞ்சாங்க. எங்க பிளாட்ல இருக்கற அத்தனை குடும்பத்து குழந்தைகளும் ஆண்ட்டிகளும், பாட்டிகளுமா போய் சப்பாத்தி செய்ய உதவினோம். பேசின்பிரிட்ஜ் பகுதிஜனங்களுக்கு இந்த சப்பாத்திகளைக் கொண்டுபோய் கொடுத்தோம்.
இவ்வளவு நாளா ஒருத்தரு முகத்தை ஒருத்தர பாத்ததுகூட கிடையாது. யாரும் யாரையும் கண்டுக்க மாட்டாங்க. ஆனா இப்போ நாங்க எல்லாம் ஒன்னு சேந்துட்டோம். வேறவேற மதம் வேறவேற மொழி வேறவேற இனம்னு பிரிஞ்சிகிடந்த மக்களெல்லாம் ஒரே குடும்பமா அன்னிக்கு வேலைசெஞ்சேம். அந்த ஒத்துமைய இப்போ இந்த சேப்பாக்கம் முகாம்ல பாக்கறேன்.
இப்பவும் சொல்றேன். இன்னும் நிறைய பொருட்கள் இங்க வந்துகிட்டே இருக்குது... இத கேள்விப்படற வீட்ல பொழுதுபோக்க முடியாம தவிக்கற லேடீஸ்ங்க இன்னும் நிறைய பேரு வந்து ஒத்துமையா உதவணும்... இந்த உதவி எல்லா மக்களுக்கும் போய்சேர்றதை புரிஞ்சிக்கணும். இனிமே நாங்கல்லாம் வேறவேற இல்ல. வெள்ளம் வந்து வேறுபாடுகளைக் களைஞ்சிடுச்சிங்கறதையும் தெரிஞ்சிக்கணும்'' என்று மகிழ்ச்சியில் பொங்கினார் எட்டாம்வகுப்பு படிக்கும் காஷ்பா ரஹ்மான்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago