அம்மாவுக்குக் கல்யாணம் முடிந்ததும் கிராமத்துல இருந்து சென்னைக்கு வந்துட்டாங்க. அப்போ அவங்களுக்கு பதினாலு வயசு தான். அம்மாவோட தம்பிங்க, தங்கச்சிங் களையும் அவங்கதான் வளர்த்தாங்க. அடுத்தடுத்து அண்ணன் ராஜூ, நான், தம்பி பிரசாத் மூவரும் பிறந்தோம். சித்திங்க, மாமன்களுக்கு எங்களைவிட கொஞ்ச வயசுதான் அதிகம் இருக்கும். எல்லாரும் ஒண்ணாதான் விளையாடு வோம். கூடவே சேர்ந்து சுத்துவோம். சித்திகளும் மாமன்களும் எங்க அம் மாவை ‘அக்கா அக்கா’ன்னுதானே கூப்பிடுவாங்க. அதுமட்டுமில்ல, அப்பா கிட்ட வொர்க் பண்ற டான்சர்ஸ்கூட அம்மாவ ‘அக்கா’ன்னுதான் கூப்பிடு வாங்க. அதைப் பார்த்து நாங்களும் அம்மாவை ‘அக்கா’ன்னே கூப்பிட ஆரம்பிச்சோம். இன்னைக்குக்கூட நான் அப்படித்தான் கூப்பிடுறேன்.
அம்மாவப் பிரிஞ்சி இருக்கவே பிடிக்காது. தூங்குறப்பவும் அம்மா பக்கத்துலதான் படுத்துப்பேன். ராத்திரி யில அம்மா எழுந்திருச்சா எனக்கும் முழிப்பு வந்துடும். சனிக்கிழமை, ஞாயித்துக்கிழமை ரெண்டு நாளும் வீட்டுல அம்மாவோட முந்தானையப் பிடிச்சிக்கிட்டே திரிவேன். பள்ளிக்குப் போற நாட்கள்லேயும் எப்படா வீட்டுக்கு போலாம்கிற நெனப்புதான். சாயங்காலம் 3.45 க்கு சாந்தோம் ஸ்கூல் முடிஞ்சிடும். அதே நேரத்துக்கு ஷார்ப்பா 12 பி பஸ் வரும். அந்த பஸ்ஸை எப்படியாவது பிடிச்சே ஆகணும்னு, பெல் அடிக்க ஆரம்பிச்ச அடுத்த செகண்ட் ஓட்டம்தான். அத்தனை மாடிப் படிங்களையும் ஒரே பாய்ச்சல்ல தாண்டுற மாதிரி அந்த ஓட்டம் இருக் கும். எவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு போறோமோ, அவ்வளவு நேரமும் அம்மாகூட இருக்கலாமே என்கிற ஆசை யிலதான் அப்படி ஓடுவேன். அப்படி அம்மாவத் தேடி ஓடிக்கொண்டிருந்த நான் 14-வது வயசுலயே முழு மூச்சா ஷூட்டிங்குப் போக ஆரம்பிச்சுட்டேன். நிறைய அவுட்டோர் போகிற மாதிரி இருக்கும். கூட அப்பா இருப்பார். இருந்தாலும் மனசு அம்மாவத்தான் தேடும். அவங்கள ரொம்பவே மிஸ் பண்ணுவேன். அவங்க ஞாபகத்துல பல நாள் ரூம்ல தனியா அழுதிருக்கேன்.
தீபாவளி மாதிரியான பண்டிகைக்கு டிரெஸ் எடுக்கிறப்ப பேண்ட், ஷர்ட்டை அம்மா பெருசாதான் எடுத்துக் கொடுப் பாங்க. இவ்வளவு பெருசான்னு கேட்டா, ‘வானத்தைப் போல’ படத்துல வர்ற விஜயகாந்த் அண்ணன் மாதிரி, ‘‘வளர்ற பையன்தானே லூஸாதான் போட்டுக்கணும்’’ம்னு சொல்லுவாங்க. சைஸ் கொஞ்சம் பெருசா இருந்தா பரவாயில்லை.
ரெண்டு பேர் உடம்பு நுழையிற மாதிரி ரொம்ப லூஸா இருக்கும். அது எனக்குப் பிடிக்காது. இருந்தாலும் அம்மா கொடுத்ததாச்சே. ஆனா, அதுவே பின்னாடி மாஸ்டர் ஆனதும், பாட்டு ஸீன்ல லூஸா டிரெஸ் போடுறது ஒரு ஃபேஷனாவே ஆயிடுச்சு. அதுவே, அப்போ ஒரு டிரெண்ட்டாவும் ஆச்சு. மொத்தத்துல அப்பா, அம்மா எது செஞ்சாலும் அது நல்லதுலதான் முடியும் கிறதுக்கு அது ஒரு எடுத்துக்காட்டுன்னே சொல்லலாம். அம்மா எடுத்துக் கொடுத்த கட்டம் போட்ட சட்டை, பொம்மை டிசைன்னு அப்போ போட்டிருந்த டிரெஸ் எல்லாம் இப்போகூட ஞாபகம் இருக்கு. ‘‘பாட்டி வாங்கிக் கொடுத்தக் கொக்கு பொம்மை படம் போட்ட சட்டையை மூணு வருஷம் போட்டிருந்தடா பிரபு. அது கிழிஞ்ச பிறகும் அதேதான் வேணும்னு நின்னே’’ன்னு அம்மா இப்பவும் சொல்லுவாங்க.
சனிக்கிழமைன்னா கண்டிப்பா எண் ணெய் தேய்ச்சிக் குளிக்கணும். அது அப்பாவோட கண்டிஷன். அம்மாதான் எனக்கு, அண்ணனுக்கு, தம்பிக்கு எண் ணெய் தேய்ச்சி குளிப்பாட்டி விடுவாங்க. நான் மாஸ்டரானப் பிறகுகூட அம்மா தான் எண்ணெய் தேச்சி குளிப்பாட்டு வாங்க. ஏன், இப்போ, இந்த வயசுலகூட அம்மாவ பார்க்கப் போறப்போ கூட அவங்கதான் எனக்கு எண்ணெய் தேய்ச்சி, சீயக்காய் போட்டு குளிப்பாட்டு வாங்க. சனி, ஞாயிறுல நேரம் கிடைக் கிறப்ப மயிலாப்பூர் காமதேனு தியேட்டருக்கு அம்மா படம் பார்க்கக் கூட்டிட்டுப் போவாங்க. அந்தத் தியேட் டர்ல பெரும்பாலும் பிளாக் அண்ட் வொயிட் படங்கள்தான் ஓடும். எம்.ஜி.ஆர், சிவாஜி படங்கள் நிறைய வரும். நான் எம்.ஜி.ஆர் ரசிகன். அவர் படங்கள்ல தான் காமெடி, சண்டை அதிகம் இருக் கும். ஜெமினிகணேசன், சிவாஜி படங் கள்ல காதல், சோகம் அதிகமா இருக்கும். அது சின்ன வயசாச்சே. அதனாலயோ என்னவோ அப்போ அப்படித் தோணுச்சு. இதை இப்போ சொன்னா யாரும் கோச் சுக்க மாட்டாங்க. எம்.ஜி.ஆர் வில்லனை ஒரு அறை விட்டாக்கூட அதை சண்டையா கணக்கு எடுத்துப்பேன் அவர் முதல்ல அடிக்க மாட்டார். வில்லன்கள்ட்ட அடி வாங்கிப்பார். ரெண்டாவது, மூணாவது அடியில லைட்டா அவருக்கு ரத்தம் வரும். அப்போதான் எங்களுக்கு ஜாலியா இருக்கும். ஏன்னா, அடுத்து நம்ம தலைவர் அடிக்கப் போறார்னு சீட் முனைக்கு வந்துடுவோம். அவர் படங் கள் மாதிரியேதான் இப்போ நான் இயக் குற படங்களும் ஜாலியா இருக்கும்.
என் பேரு பிரபுதேவா. என் அம்மா பேரு மகாதேவம்மா. தேவாவோட அம்மாங்கிறதாலதான் மகாதேவம் மான்னு பெயர் வெச்சாங்களோன்னு நானே நெனெச்சிப்பேன். ஆனா, அது அப்படி இருக்காதே. இருந்தாலும் அப்படி நெனைக்குறப்ப ஒரு சந்தோஷம். அப்பாவுக்கு ராஜூ செல்லம். அம்மாவுக்கு நான் செல்லம். எப்படியும் அம்மாவுக்கு எங்க மூணு பேரையும் பிடிக்கும். ஆனா, அவங்களுக்கு நான் மட்டும்தான் செல்லம்னு இன்னைக்கும் நெனைச்சிக்கிட்டிருக்கேன். இன்னும் ரெண்டு நாள்ல மும்பையில இருந்து அம்மாவப் பார்க்க ஊருக்குப் போறேன். எங்க மூணு பேர்ல யாரை பிடிக்கும்னு இந்தத் தடவை கேட்கலாம்னு இருக் கேன். சின்ன வயசுல ஷூட்டிங் போறப்ப எப்படி அம்மாவ மிஸ் பண்ணேனோ, அப்படித்தான் இப்பவும் மிஸ் பண்றேன். இப்போ இதை எழுதுறப்பக் கூட மும்பைல இருந்துதான் எழுதுறேன். ரொம்பவும் ஃபீலிங்கா இருக்கு. எல்லோ ருமே அம்மா, அப்பா பேச்சைக் கேட்டு நடந்தா வாழ்க்கை சூப்பரா இருக்கும்ல. நான் கேட்கலை. அந்த அனுபவத்துல தான் சொல்றேன். எல்லாரும் கேட்டு நடங்க. வாழ்க்கை ஜாலியா இருக்கும்.
வீட்டுல எல்லாருக்கும் முன்னாடி காலையில 5 மணிக்கெல்லாம் எழுந்து வீடு வாசலை பெருக்கி, துடைச்சி, பாத்திரத்தைக் கழுவி, துணி துவைச்சி, எல்லாருக்கும் சமைக்கிறதுல இருந்து ராத்திரி எங்க எல்லாரையும் தூங்க வைக்கிற வரைக்கும் முழிச்சிருந்துட்டு தூங்குறவங்கதான் அம்மா. அந்த அன்புக்கு உலகத்துல ஈடு இணை ஏது? அந்த அன்பை உதாரணம் காட்டிக் கூட எதையும் சொல்ல முடியாது. என்னோட அம்மாவுக்கு எங்கக் குடும்பம்தான் உலகம். அவங்களுக்கு சென்னையில பெருசா சொந்தக்காரங்க கிடையாது. அவங்களோட வாழ்க்கையே பசங்க நாங்க மூணு பேர், அவங்களோட தம்பிங்க, தங்கைங்கதான். சொல்லிக்கிற மாதிரி ஃபிரெண்ட்ஸும் சென்னையில அம்மாவுக்குக் கிடையாது.
ஆனா, எங்களுக்கு எல்லாம் லைஃப்ல ஃபிரெண்ட்ஸ் வந்தாங்க. குறிப்பா, அன்னைக்கு கிடைச்ச ஸ்கூல் ஃபிரெண்ட்ஸ், இன்னைக்கு என் னோட இந்த 42-வது வயசுலயும் ஃபிரெண்ட்ஸா இருக்காங்க. அதுல கொஞ்ச பேர் உலகம் முழுக்க இருக்காங்க. ரொம்ப வருஷத்துக்குப் பிறகு இப்போ தேடி கண்டுபுடிச்சி வர்ற ஃபிரெண்ட்ஸும் உண்டு. அவங்கள்ல சிலர், ‘எப்படி இருக்கீங்க பிரபு’னு முதல்ல விசாரிப்பாங்க. ‘‘டேய்… என்னடா வாங்க போங்கன்னு. ஸ்கூல்ல அப்படியாடா இருந்தோம்’’ன்னு நான் கேட்பேன். ‘உன்னால மட்டும் எப்படிடா அப்படியே இருக்க முடியுது’ன்னு கேட் பாங்க. நிறையப் பேர் கேக்குற இன்னொரு விஷயம்: ‘‘ஏன் பிரபு எப்பவும் தாடியோடவே இருக்கே?’’அதுக்குக் காரணம் இல்லாம இருக்குமா? அதை அடுத்த வாரம் சொல்றேனே!
- இன்னும் சொல்வேன்…
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago