''சார் சொல்லுங்க, ரைட் தோ வர்றேன். அந்த பாக்ஸை வெளியில வைங்க, உங்களுக்கு என்ன சார் வேணும்? சரி பேசலாம். ஒரு நிமிஷம், இந்த லிஸ்ட்ல இருக்கறதை ஒன்னுன்னா எடுத்து வைங்க... என்ன சார் கேட்டீங்க... ரைட் ஓகே தோ வர்றேன்.. அப்புறம் அந்த கிட்ஸ் எல்லாம் சரியாயிருக்கான்னு ஒருதடவை பார்த்துடுங்க. சாரி சார் ஏதோ கேக்க வந்தீங்க. வேலையை செஞ்சிகிட்டே வந்துவந்து பேசலாம் இல்ல?'' என்று ஸ்டாக் லிஸ்டை கையில் வைத்தபடி பரபரக்கிறார் மோனிகா.
எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் பி.டெக். படிக்கும் மோனிகாவுக்கு வீடு வேளாச்சேரியில். அப்பா பிஸினஸ். முதன்முதலாக சென்னைல நியூரல்ஸ் வைத்தவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் அவரது அம்மா, ஒருவால் பெயிண்டிங் ஆர்டிஸ்ட்.
''கனமழை அன்னிக்கு வீட்லதான் இருக்கோம். வேளச்சேரியில விஜயநகர் பஸ்ஸ்டாண்ட் பக்கத்துல வீடு. 4 அடி தண்ணீர் எங்க தெருவுல. பக்கத்து தெருவுல எல்லாம் ஆறு அல்லது ஏழு அடி தண்ணீர். நாங்க முதமாடியில இருந்ததால தப்பிச்சோம்.
எலக்ட்ரிசிடி இல்லை. அதனால வீட்டுக்குப் பக்கத்துல இருந்த ஒரு ஹேண்ட் பம்ப்ல நானும் அப்பாவும் தண்ணீர் அடிச்சி அடிச்சி எடுத்துட்டு வந்தோம். ஆவின் பால் கார்டு ஹோல்டருக்குக் கொடுக்காம கடையில சப்ளை பண்ணிட்டாங்க. அங்க போய் வெடிகாலம் நாலரை மணிக்குப் போய் வாங்கிக்கங்கன்னு சொல்லிட்டாங்க.
விடிகாலம் போய் சூப்பர்மார்க்கெட்ல போய் பால்வாங்கிகிட்டு வந்தோம். வர்ற வழியில ஈபி ஆபீஸ் வாசல்ல ஒரே கூட்டம். என்னன்னு கேட்டா மழையல ஒயர்அறுந்து ஒருத்தரு செத்துட்டதால கரெண்ட் வர நாளாகும்னு சொன்னாங்க. இந்தமாதிரி ஆளாளுக்கு ஒரு கதை சொன்னாங்க. ஒருவார மழைல தினமும் வீட்டுல எது ஒன்னுக்கும் சிரமப்பட வேண்டியதாயிடுச்சி.
ஃபேஸ்புக்குல நண்பர்கள் சேப்பாக்கத்துல இப்படியொரு முகாம் பணிகள் போயிட்டிருக்குன்னு போட்டிருந்தாங்க. அதேநேரத்துல பேப்பர்லையும் பாத்தேன். சரி நிவாரணமுகாம்ல நாம உதவி செஞ்சே ஆகணும்னு உடனே இங்க புறப்பட்டு வந்தேன். இதுக்கு முன்னே பப்ளிக்ல போய் ஸ்லம் பகுதிகள்ல சுயஆளுமைத்திறன் பயிற்சி கொடுத்த அனுபவம் இருக்கு.
ஃமுதல்நாள் ஓஎம்ஆர்ல கந்தன்சாவடிக்கு போனோம். ஒரு பஸ்ல 20 பேர் நாங்க போயிருந்தோம். 10 தெருக்கள்ல 1500 மக்கள் வந்தாங்க அப்புறம் வீட்டுக்குப் போங்க வர்றோம்னு சொல்லி போய் கொடுத்தோம். தண்ணீல இழுத்து இழுத்து நடந்துபோய் ஒருஒருவீடா போனோம். ஒரு வீட்ல போய் கொடுக்கும்போது ''ரொம்ப ரொம்ப நன்றிம்மா''ன்னு அவங்க கண்லருந்து கண்ணீர். அவங்க அழும்போது எனக்கே ஒரு மாதிரியாயிடுச்சி. அப்போ நாம செய்யற வேலை எவ்வளவு வொர்த்துன்னு தெரிஞ்சது.
அந்தப் பகுதில இன்னொரு இடத்துக்குப் போனோம். அந்த இடம் பேரு தெரியல. அங்கே சாயந்தரம் 6 மணிக்கு போனோம். பெரிய தள்ளுமுள்ளெல்லாம் நடந்தது. டீப்பா உள்ளவே போக விடாம வாங்கனவங்களே வாங்கினாங்க. அப்புறம் ஆட்கள் முழுக்க எங்களை சரவுண்ட் பண்ணிட்டாங்க.
பஸ்ல டயர்மேலல்லாம் ஏறி தட்டறாங்க. அவங்களை கன்வின்ஸ் பண்ணவே முடியல. அதனால உடனே புறப்பட்டுள்லாம்னு முடிவு செஞ்சோம். பஸ் போய்ட்டிருந்தப்போ சைட்ல ஒருத்தர குழந்தையோட பைக்ல துரத்திகிட்டு வர்றாரு. நம்ம மக்கள்ல இன்னும் சிலர் வாழ்க்கையை புரிஞ்சிக்கத் தவறிகிட்டிருக்கறதா தோணிச்சி.
அப்புறம் வேற ஒரு இடத்துக்குப் போய் கொடுத்துட்டு வந்தோம். வந்ததும் டிடி ஊசி போட்டுகிட்டோம். இது முதநாள் அனுபவம். மறுநால்லருந்துதான் நீங்களே பாத்திருப்பீங்க... இந்த ஸ்டாக் இன்சார்ஜ் வேலை. இங்கே டோனர்ஸ்கிட்ட வந்துகிட்டேயிருந்தததால இன்ஸ்டாக் அதிகமாகிகிட்டேயிருந்தது. அதை என்ட்ரி பண்ணப்பறம் ரெக்யூஸ்ட் சைன் ஃபாம் வரும்.
அதைப் பாத்து அவுட்ஸ்டாக் கொடுக்கணும். சமயத்துல ரூம் ஓவர்ஃப்ளோ ஆகிடுச்சின்னா இன்ஸ்டாக்கை வெளியிலேயே வச்சி அதையே ஃபீல்டுக்கு அனுப்பவும் கொடுத்தேன். ஒரேநேரத்துல இன்ஸ்டாக் அவுட்ஸ்டாக் ரெண்டுமே என்ட்ரிபோடக்கூடிய சந்தர்ப்பம்.
இந்த வேலை எப்படின்னு கேட்டீங்கன்னா, ரொம்ப இன்ட்ரஸ்டிங்! ஒருநாள் வாலென்டியர் எல்லாம் மோனிகா நாங்க என்ன பண்ணணும் நாங்க என்ன பண்ணணும்னு கேக்க எனக்கு மண்டை காய்சிடுச்சி. அப்புறம் வேறொரு ஆளைப் போட்டு என்னை இடம் மாத்தினாங்க.
ஆனா அவரு மறுநாள் வர்ரலை. அன்னிலேருந்து நான் செய்யறேன். இப்போ ரியலைஸ் ஆகிட்டேன். இன்ட்ரஸ்டிங்கா இருக்கு. அதுக்கபுறம் லோடுகொண்டுவந்து ஸ்டாக்கல வைக்கவோ எடுத்துக்கொடுக்கவோ பெட்டிகளைப் பிரிக்கவோ எதுவா இருந்தாலும் இன்னிவரக்கும் எவ்வளவு பேரு வந்தாலும் எனக்கு ஈஸியாதான் இருந்தது'' என்று தான் அடுக்கிவைத்துக்கொண்டிருக்கும் பெட்டிகளைப் போலவே வார்த்தைகளையும் அடுக்கிக்கொண்டே போனவருக்கு வயது என்னவென்று நினைக்கிறீர்கள்... வெறும் 18 தான். அவர் மேலும் சொன்ன விஷயம்தான் இங்கு சிராய்த்துச் செல்லும் தெறி...
''இங்க நான் வரும்போது தனியாத்தான் வந்தேன். ஆனா இப்போ லாட் ஆஃப் பிரண்ட்ஸ். என்கிட்ட யாரும் பேசலைன்னாலும் என்னோட கலகலப்பைப் பாத்து யாரா இருந்தாலும் பேசியாகணும். அப்புறம் என்ன இந்த சோசியல் ஒர்க் மோர் இன்ரஸ்டிங், மோர் சிம்பிள்...பாக்கலாம் சார் ஹா..ஹா..'' என்று ஸ்டாக் லிஸ்ட் காகிதங்கள் காற்றில் படபடக்க சிட்டுக்குருவியாய் கிடங்குக்குள் பறந்துசென்றார் மோனிகா.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago