தலைசிறந்த சமஸ்கிருத அறிஞர், பேச்சாளர், ஆரிய சமாஜ தலைவரான பண்டிட் பிரகாஷ் வீர் சாஸ்திரி (Pandit Prakash Vir Shastri) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 30). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l உத்தரப் பிரதேசத்தில் ரெஹரா என்ற கிராமத்தில் (1923) பிறந்தார். இயற்பெயர் பிரகாஷ் சந்த்ரா. குடும்ப வழக்கப்படி, ஜ்வாலாபூரில் இருந்த குருகுலத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு வேறொரு சிறுவனுடன் பெயர் குழப்பத்தை தவிர்ப்பதற்காக, இவரது பெயர் ‘பிரகாஷ் வீர்’ என்று மாற்றப்பட்டது.
l இளம் வயதிலேயே அரசியலில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். ஆக்ரா பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சாஸ்திரி பட்டம் பெற்றார். பிருந்தாவன் ‘குருகுல்’ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார்.
l ‘என்னைவிட சிறந்த பேச்சாளர்’ என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம் பாராட்டு பெற்றவர். சுவாமி தயானந்தரின் கருத்துகள், ஆரிய சமாஜ கோட்பாடுகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். நாடு முழுவதும் பல இடங்களில் உரையாற்றினார். அற்புதமான இவரது உரைகள் மிகவும் பிரபலமடைந்தன. மாற்றுக் கருத்து கொண்டவர்கள்கூட இவரது பேச்சைக் கேட்டுப் பாராட்டும் வகையில் அற்புதப் பேச்சாற்றல் கொண்டிருந்தார்.
l ஆட்சி மொழியாக ஆங்கிலம் இருப்பதை இவர் விரும்பவில்லை. அதற்கு பதிலாக இந்தி இருக்க வேண்டும் என்று விரும்பினார். இந்தி மொழியைக் காப்பாற்ற இந்தி ரட்சா சமிதியைத் தொடங்கியது ஆரிய சமாஜம்.
l முதலாவது இந்தி விஸ்வ சம்மேளனம் 1975-ல் நடைபெற்றது. இதன் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார். ஆரிய சமாஜம் ஏற்பாடு செய்த இந்தி போராட்ட இயக்க கூட்டங்களில் இவர் ஆற்றிய உரைகளில் மக்களைத் தட்டி எழுப்பும் கனல் வீசியது. நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பஞ்சாப் வந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர். தாங்களாகவே முன்வந்து கைதானார்கள்.
l ஆரிய சமாஜ நிர்வாகிகளின் பாதுகாப்புக்காக ஆரிய உபதேசக் சம்மேளனம் என்ற அமைப்பை நிறுவினார். லக்னோ, ஹைதராபாதில் பல கூட்டங்களை வெற்றிகரமாக நடத்தினார்.
l ஐ.நா. சபையில் இந்தியில் பேசிய முதல் இந்தியர் இவர்தான். (இரண்டாம் இந்தியர் வாஜ்பாய்). இவர் சிறந்த கவிஞரும்கூட. மக்களவைத் தேர்தலில் 2 முறை சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1974-ல் ஜனசங் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்ற உறுப்பினராக ஆரிய சமாஜ வளர்ச்சிக்காக பல பணிகளை மேற்கொண்டார்.
l உத்தரப் பிரதேசத்தின் ஆரிய பிரதிநிதிகள் சபை தலைவராகப் பொறுப்பேற்று, பல ஆண்டுகள் சேவை செய்து வந்தார். ஆரிய சமாஜத்தை நாடு முழுவதும் பரவச் செய்ததில் இவரது பங்கு மகத்தானது. வெளிநாடுகளிலும் ஆரிய சமாஜத்தின் புகழைப் பரப்பினார்.
l கட்டாய மதமாற்றத்தை தடுக்க மதப் பாதுகாப்பு மசோதா கொண்டு வரவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் 1960-ல் முன்மொழிந்தார்.
l அபாரப் பேச்சாற்றல் கொண்டவரும் தலைசிறந்த சமஸ்கிருத அறிஞருமான பிரகாஷ் வீர் சாஸ்திரி, 54-வது வயதில் ரயில் விபத்தில் (1977) மரணமடைந்தார். 2003-ல் துணைப் பிரதமர் எல்.கே.அத்வானி இவரது நாடாளுமன்ற உரைகளின் ஒரு பகுதியை புத்தகமாக வெளியிட்டார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago